சுற்றுச்சூழல் மாசால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் 25 லட்சம்! Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
25 லட்சம்!
சுற்றுச்சூழல் மாசால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள்

புதுடில்லி: காற்று, நீர் உள்ளிட்டவை மாசடைவதால் ஏற்படும் நோய்களால், 2015ல் இந்தியாவில் 25.10 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். உலகிலேயே, இது மிகவும் அதிகம். எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை விட, சுற்றுச்சூழல் பாதிப் பால் உயிரிழந்தவர்கள் அதிகம் என,சர்வதேச ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

'த லான்செட்' என்ற மருத்துவ இதழ், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வை மேற் கொண்டது. சுற்றுச்சூழல் விஞ்ஞானி பிலிப் லான்ட்ரிகான் தலைமையில், 40 சர்வதேச சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற் கொண்டனர். இவர்கள் இணைந்து தொகுத்த, 2015ல் உலகின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவரு மான, ஜெய்ராம் ரமேஷ், டில்லி, ஐ.ஐ.டி., பேராசிரியர் முகேஷ் கரே ஆகியோரும் இந்த ஆய்வறிக்கையை இணைந்து தயாரித்து உள்ளனர். ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சுற்றுசூழல் பாதிப்புகளால், 2015ல் உலகிலேயே மிகவும் அதிகமாக, 25.10 லட்சம் பேர், இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய் களால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை விட, சுற்றுச்சூழல் பாதிப்பால் இறந்தோர்

எண்ணிக்கை அதிகம்.சுற்றுச்சூழல் பாதிப்புகளால், 2015ல், உலகெங்கும், 90 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதில், 28 சதவீதம் பேர் இந்தியாவில் இறந்து உள்ளனர். காசு மாற்றால் இறந்தவர்கள், நீர் மாசால் இறந்தவர்கள் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

காற்று மாசால், 18.10 லட்சம் பேரும், நீர் மாசால், 6.4 லட்சம் பேரும் இந்தியாவில் உயிரிழந்தனர்.
உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்பால் இறந்தவர்களில், 92 சதவீதம், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளிலும், தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள நாடுகளிலும் இறந்துள்ளனர்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், கென்யா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுச்சூழல் மாசால் மக்கள் அதிகம் பேர் இறந்துள்ளனர். இந்தப் பட்டியலில், இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீனா
உள்ளது.

சுற்றுச்சூழல் பிரச்னைகளால், நுரையீரல் பாதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், சுவாச பிரச்னை உள்ளிட்ட நோய்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரபடுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை, பட்டியலில் உள்ள நாடுகள், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப் பெரிய இழப்பு களைசந்திக்க நேரிடும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளியால் திணறிய டில்லி


டில்லி உட்பட தேசிய தலைநகர் பகுதியில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், தீபாவளி பண்டிகையால், டில்லியில் காற்றின் தரம்,

Advertisement

சுற்றுச்சூழல் மாசு, Environmental pollution, இந்தியா,India,  காற்று மாசு, air pollution, நீர் மாசு,water pollution,  எய்ட்ஸ், AIDS,  காசநோய், tuberculosis,மலேரியா,malaria, த லான்செட்,the lancet, சுற்றுச்சூழல் விஞ்ஞானி பிலிப் லான்ட்ரிகான்,environmental scientist Philip Laundrigan, முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ,Former Union Environment Minister Jairam Ramesh,  டில்லி ஐ.ஐ.டி பேராசிரியர் முகேஷ் கரே ,Delhi IIT Professor Mukesh Kare, நுரையீரல் பாதிப்பு,Lung damage, இதய நோய்கள்,cardiovascular diseases, நுரையீரல் புற்றுநோய்,lung cancer, ஒலி மாசு,Sound emission,புதுடில்லி,new delhi,

‛மிக மோசம்' என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. டில்லி மற்றும்தேசிய தலைநகர் பகுதிகளில், தீபாவளியால் காற்றின் தரம் மேலும் மோசம் அடையாமல் தடுக்க, பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

தீபாவளி தினமான நேற்று முன்தினம், மாலை, 6:00 மணி வரை, டில்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காற்றின் தரம் வழக்கமாகவே இருந்தது. இரவு, 7:00 மணியில் இருந்து நள்ளிரவு வரை பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டன.

இதனால், காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்றது. மேலும், ஒலி மாசுவும் அதிகரித்தது. நேற்று காலையிலும் பல இடங்களில் புகை மூட்டமாகவே இருந்தது.
காற்றில் நுண்துகள்களின் அளவு, அனுமதிக்கப் பட்டஅளவைவிட, 30 மடங்கு உயர்ந்து இருந்ததாக,மாசுகட்டுபாட்டு வாரியம் தெரிவித்து உள்ளதுஇதற்கிடையே, டில்லியில், தீபாவளி தினமான நேற்று முன்தினம், 204 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்துள்ளது. இதில் பெரும்பாலானவை, பட்டாசு வெடித்த தால் ஏற்பட்ட தீ விபத்துகள். கடந்த ஆண்டு, டில்லியில்,243 தீ விபத்துசம்பவங்கள் நடந்தன.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-201723:54:18 IST Report Abuse

அப்பாவிஆமா உயிரோட இருந்தா செழிப்போட வாழ வக்கப் போறாங்களா? தமிழ் நாட்டிலேயே 78 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்கு பதிஞ்ச்சுட்டு காத்திருக்காங்களாம்.இதுலே கோவணம் வரை உருவரதுக்கு ஒரு மத்திய அரசு...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-அக்-201715:58:21 IST Report Abuse

Endrum Indianதொழிற்சாலை , தாவர மீதியை எரித்தல், மற்றும் வாகன புகையின் மூலம் வரும் மாசுதான் பிரதான காரணம் எல்லா மாசுக்களுக்கும். 128 .4 கோடி பேர் உள்ள இந்தியாவில் 25 லட்சம் பேர் மரணம் என்றால் 0 .194 % , இது வெறும் மாசுவினால் வந்த வியாதியாலா அல்லது இயற்கை மரணமா என்று தெரியவில்லை. வேண்டுமென்றே மேலோட்டமாக ஆராய்ச்சி செய்தால் இது மாசினால் தான் என்று தெரியும், ஆனால் உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்தால் தான் அதன் நிஜ தாக்கம் தெரியும். இயற்கையாக 0 .194 % இறப்பு ஒரு சாதாரண நிகழ்வு தான்.

Rate this:
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
21-அக்-201711:25:08 IST Report Abuse

Rangarajan Pgஅது தான் அந்த மாசு மாசு என்று காட்டு கத்தல் கத்துகிறார்களே , அந்த கருமம் பிடித்த பட்டாசை வெடிக்காவிட்டால் என்ன? அந்த கடவுள் கோபித்து கொள்வாரா என்ன? பணத்தை கரியாக்கி சுற்றுப்புறத்தையும் கரியாக்கி,, சிறிது கவன குறைவாக இருந்தால் நம்மையும் கரிக்கட்டையாக்கி விடும் அந்த எமனை கொளுத்தா விட்டால் தான் என்ன? டில்லியில் மூச்சு திணறும் அளவுக்கு காற்றை மாசு படுத்தியாகி விட்டது. அந்த நகரத்திலிருந்து பாடம் கற்காமல் மற்ற நகரங்கள் TAKE IT EASY ஆக இருக்கின்றன. அந்த அளவுக்கு காற்று மாசு அடைந்த பிறகு தான் நம் தமிழகத்துக்கு புத்தி வருமோ என்னவோ? கேட்டால் விதண்டாவாதம் செய்வார்கள். ஏதோ ஒரு நாள் வெடிப்பதால் தான் மாசு அடைகிறதா என்று. நான் மாசு ஏற்படுத்தும் மற்ற விஷயங்களையும் சேர்த்து தான் கூறுகிறேன். ஆனால் இந்த பட்டாசு விஷயத்தில் மக்களின் பங்களிப்பு தான் அதிகம். ஆகவே மக்கள் தான் CO OPERATE செய்ய வேண்டும். ""அவனை நிறுத்த சொல்லு,, நான் நிறுத்தறேன்"" என்று விதண்டாவாதம் செய்தால் நமக்கு தான் நஷ்டம்.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X