குஜராத்துடன் ஆர்.கே.நகருக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு! Dinamalar
பதிவு செய்த நாள் :
 குஜராத்,Gujarat, ஆர்.கே.நகர் தேர்தல்,RK Nagar Election, இடைத்தேர்தல் ,by-Election , தேர்தல் ஆணையம்,Election Commission, அ.தி.மு.க, AIADMK, தி.மு.க., DMK,தே.மு.தி.க, DMDK, சசிகலா ,Sasikala,  பன்னீர் ,Panneer, சென்னை உயர் நீதிமன்றம்,Chennai High Court, தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜைதி , Election Commissioner A. K. Jaiti,

குஜராத் தேர்தல் அறிவிப்புடன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதனால், டிசம்பருக்குள் இடைத்தேர்தல் நடத்துவதற் கான சாதக - பாதக அம்சங்களை, தேர்தல் ஆணையம் அலசத் துவங்கியுள்ளது.

 குஜராத்,Gujarat, ஆர்.கே.நகர் தேர்தல்,RK Nagar Election, இடைத்தேர்தல் ,by-Election , தேர்தல் ஆணையம்,Election Commission, அ.தி.மு.க, AIADMK, தி.மு.க., DMK,தே.மு.தி.க, DMDK, சசிகலா ,Sasikala,  பன்னீர் ,Panneer, சென்னை உயர் நீதிமன்றம்,Chennai High Court, தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜைதி , Election Commissioner A. K. Jaiti,


ஜெ., மறைவு காரணமாக, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. காலியான தொகுதிக்கு, ஆறு மாதங்களுக்குள், தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின்படி, ஏப்., 12ல், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., வின் இரு அணிகள், தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்தன. அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி சார்பில், மதுசூதனன் போட்டியிட்டனர்.

சுயேச்சை சின்னம்


இரு அணிகளும், இரட்டை இலை சின்னத்தை கோரியதால், அது முடக்கப்பட்டது. இரு அணி வேட்பாளர்களுக்கும், சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற துடிப்பில், தினகரன் தரப்பினர், பணத்தை வாரி இறைத்தனர். அதன் விளை வாக, அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், வரு மான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில், பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. அதைத் தொடர்ந்து, ஏப்., 10ல், இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதுவரை, இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில், 'டிசம்பருக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்' என, தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது.

கடந்த வாரம், இமாச்சலப் பிரதேச மாநில பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் படும் என, எதிர்பார்க்கப்பட்டது; அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், 'டிச., 31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப் படும்' என, தலைமைத் தேர்தல் ஆணையர், ஏ.கே.ஜைதி அறிவித்தார்.

Advertisement


தொகுதிகள் காலி:


இந்த மாதம் இறுதியில், குஜராத் மாநில பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது; அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.இது குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் தீர்ப்பு வந்துவிட்டால், ஆர்.கே.நகர் தொகுதியுடன் சேர்த்து, இடைத்தேர்தல் நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டது. தற்போது, தீர்ப்பு தாமதமாகும் நிலை உள்ளது. தீர்ப்பு வந்தாலும், பாதிக்கப்படுவோர், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வர்.

இதனால், 18 தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு. எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, முதலில் நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது. தமிழகத் தில், தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை யில், இந்த தொகுதியில் தேர்தல் நடத்து வதற்கான, சாதக - பாதகங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-நமது நிருபர்-


Advertisement

Advertisement

தொடர்புடைய செய்திகள்:மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (31)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
rajarajan - bangalore,இந்தியா
22-அக்-201700:59:31 IST Report Abuse

rajarajanகுஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி மாநில மக்களுக்கு ஏகப்பட்ட சலுகை அறிவிப்புகளை இன்று வெளியிட்டு இருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், இலவச மருத்துவம் என மக்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இரு மடங்கு சம்பள உயர்வு. விவசாயிகளுக்கு 25 லட்சம் வரை வட்டியில்லா கடன், 2.5 லட்சம் வரை இலவச மருத்துவம, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை அமல் என பல்வேறு அறிவிப்புகள் இன்று வெளியாகி இருக்கின்றன. மோடி விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அப்போதும் சலுகைகள் அறிவிக்கப்படலாம். இதனால்தான் தேர்தல் தேதி அறிவிப்பில் காலதாமதம். தேர்தல் கமிஷனும் ரிட்டையர்டான பிறகு கிடைக்க போகும் லாபத்திற்காக அடங்கி வாசிக்கிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மோடிஜி

Rate this:
bairava - madurai,இந்தியா
21-அக்-201723:29:26 IST Report Abuse

bairava என்ன ஆசிரியரே சாதகம் பாதகம் எல்லாம் யாருக்காக அலசி ஆராய்கிறது தேர்தல் ஆணையம் எப்படி பி ஜே பி யை தமிழகத்திற்குள் நுழைப்பது என்று தானோ ?? அப்போ ஒரே வழி வாக்கு இயந்திரம் தான் என்ன?? அதைவிட்ட வாய்ப்பே இல்லை நல்லா விளையாடுங்க ..விளையாடுங்க தேர்தல் ஆணையம் செயல்பாடு ஒரு அரசியல் கட்சி போல இருக்கும்...என்று புரிந்துகொள்வோம்

Rate this:
Sinthubath - Madurai,இந்தியா
21-அக்-201718:24:24 IST Report Abuse

Sinthubathமோடி நலத்திட்டங்களை அறிவித்த பிறகு தான் தேர்தல் தேதி வெளிவரும் ,தேர்தல் ஆணையம் நடுநிலையானது என நம்பினால் நாட்டு மக்கள் முட்டாள்கள்

Rate this:
Prem - chennai,இந்தியா
21-அக்-201717:35:12 IST Report Abuse

Premதேர்தல் எப்பொழுது நடந்தாலும் மக்களாட்சிக்கே வெற்றி நிச்சியம்

Rate this:
Sarathi_Ganesh - Delhi,இந்தியா
21-அக்-201716:59:48 IST Report Abuse

Sarathi_Ganeshபொதுவாழ்வில் யார் வந்தாலும் கேள்விகள் கேட்க ,கருத்துக்கள் சொல்ல இந்த மக்களாட்சியில் இடமுண்டு

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
21-அக்-201716:50:42 IST Report Abuse

Shanuதிமுக தான் ஜெயிக்கும். முந்தைய தேர்தல்களில் அதிமுகவுக்கு சப்போர்ட் செய்த என்னை போன்ற பலரும் இப்போ திமுகவுக்கு மாறி விட்டார்கள். அதிமுக பிஜேபியுடன் சேந்து தமிழ்நாட்டை அழித்து விடும். பிஜேபிக்கு தமிழர்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும், தமிழகத்தை அழிக்க மட்டும் தான்.

Rate this:
niki - Chennai,இந்தியா
21-அக்-201715:35:01 IST Report Abuse

nikieppo nadnthaalum rk nagar makkal atharavu endrum arasukkey

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
21-அக்-201715:01:25 IST Report Abuse

Sundaramela mudivum election commission kaila than iruku

Rate this:
shekaran - thiruchi,இந்தியா
21-அக்-201714:54:47 IST Report Abuse

shekaranR.k.Nagar thoguthiyila makkal aatharavai petra katchchithaan jeikkum....

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-அக்-201713:24:08 IST Report Abuse

Malick Rajaபொதுவாழ்வில் யார்வந்தாலும் கேள்விகள் கேட்க ,கருத்துக்கள் சொல்ல முழு உரிமை அனைத்து இந்திய மக்களுக்கு இருக்கிறது. மக்களுக்கு ஊழியம் செய்யவே வேலைக்காரர்களாக ஓட்டுப்பிச்சை போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆகுகிறார்கள் . ஆக மக்களின் வேலைக்காரர்களை பற்றி கருத்து கூறும்போது இடையில் இருப்பவனுக்கு ஏன் கோபம் வருகிறது . கருத்துக்கள் கேட்டுக்கொள்ள விருப்பம் இல்லையெனில் பொது வாழ்க்கைக்கு வரக்கூடாது என்று பாமரனுக்கும் தெரியும் ..

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்