'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'

புதுடில்லி:'வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்கு பவர்களும், டிச.,31க் குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, டில்லியில் செயல்படும், செய்தி இணைய தளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டது.
ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்: வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை. சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தாண்டு, ஜூன், ௧ல், மத்திய அரசு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்கள், புதிதாக கணக்குதுவக்குபவர்கள்,

Advertisement

வங்கி,கணக்கு,எண்ணுடன்,ஆதார்,இணைப்பு,கட்டாயமில்லை

தங்கள் ஆதார் எண்ணையும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன் வண்ணன் - chennai,இந்தியா
21-அக்-201713:35:37 IST Report Abuse

பொன் வண்ணன் இந்த செய்தியை முழுதும் படித்தால் தெரியும்... இது ஒரு பித்தலாட்ட அரசு என்று...அரசு உத்தரவு போட்டதாம்..ஆனால் ரிசர்வ் வங்கி எந்த உத்தரவும் போட வில்லையாம்...

Rate this:
பொன் வண்ணன் - chennai,இந்தியா
21-அக்-201711:17:35 IST Report Abuse

பொன் வண்ணன் ஒரு சட்டம் கூட உருப்படியா போட தெரியாதவனெல்லாம் ஆட்சியில் இருப்பது நமது போதாத காலமே

Rate this:
sundaram - Kuwait,குவைத்
21-அக்-201713:21:46 IST Report Abuse

sundaramஒருவேளை அவர்களுக்கு போதை காலமாகவும் நமக்கு போதாத காலமாகவும் இருக்குமோ? இருக்கும் இருக்கும் நம்ம என்னத்தை கண்டோம். எல்லாம் பெரிய்ய்ய்ய்ய்ய எடத்து விசயம்...

Rate this:
பொன் வண்ணன் - chennai,இந்தியா
21-அக்-201711:14:55 IST Report Abuse

பொன் வண்ணன் ஏண்டா...உங்களுக்கு நிலையான புத்தியே கிடையாதா ?? இந்த ஓராண்டில் நீங்கள் போட்ட ஓவொரு சட்டத்திலும் எத்தனை திருத்தங்கள் கொண்டு வந்தீர்கள் என்று கணக்கு இருக்கிறதா ?? நீங்கள் 23 புலிகேசியேதான் என்பதில் சந்தேகமில்லை....

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X