ரேஷன் பொருட்கள் வேண்டாம்; 3,500 பேர் விட்டு கொடுப்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரேஷன் பொருட்கள் வேண்டாம்
3,500 பேர் விட்டு கொடுப்பு

'ரேஷன் பொருட்கள் வேண்டாம்' என, இதுவரை, 3,500 பேர் மட்டுமே, தமிழக அரசிடம் தெரிவித்துள்ளனர்.

ரேஷன் பொருட்கள், Ration products, தமிழக அரசு,TN Government, ரேஷன் கடை, Ration shop,அரிசி ரேஷன் கார்டு,Rice ration card, எம்.பி.,MP, எம்.எல்.ஏ.,MLA, ஐ.ஏ.எஸ்.,IAS,ஐ.பி.எஸ்., IPS, மத்திய அரசு, federal government, சமையல் காஸ் சிலிண்டர் , cooking gas cylinder,

தமிழக ரேஷன் கடைகளில், 1.93 கோடி குடும்பங்களுக்கு, அரிசி உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதற்காக, ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாயை அரசு செலவு செய்கிறது.

வாங்குவதில்லை:அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., - ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தொழிலதிபர்கள் என, வசதி படைத்த பலரும், அரிசி ரேஷன் கார்டு வைத்து உள்ளனர்; பொருட்கள் வாங்குவது இல்லை.ஆனால், பொருட்கள் வாங்கியது போல், ரேஷன் ஊழியர் முறைகேடு செய்யும்

விபரத்தை, உணவு வழங்கல் துறை, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவித்தும், அவர்கள், அதை கண்டு கொள்வதில்லை. மத்திய அரசு, வசதியானவர் களை, சமையல் காஸ் சிலிண்டர் மானியத்தை விட்டு தரும்படி, வலியுறுத்தி வருகிறது. அதை ஏற்று, பலரும், 'மானியம் வேண்டாம்' என, எண்ணெய் நிறுவனங்களிடம் தெரிவித்து வருகின்றனர். இதே போல், ரேஷன் பொருட்களை, விட்டு கொடுக்கும் திட்டத்தை, உணவுத் துறை துவக்கியது. ஆனால், இதற்கு பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.

தயக்கம்:இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


ரேஷன் முறைகேட்டை தடுக்கவே, அரசுக்கு விட்டு கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதற்கு, பொது வினியோக திட்டத்தின் இணையதளம் அல்லது மொபைல், 'ஆப்' வழியாக, தங்கள் விபரங்களை பதிவு செய்து, விண்ணப்பிக்கலாம். இதுவரை, 3,500 பேர்மட்டுமே, ரேஷன் பொருட்கள் வேண்டாம் என, தெரிவித்துள்ளனர்.

வசதி படைத்த பலரும், ரேஷன் பொருட்களை வாங்காத நிலை யில், அரசுக்கு விட்டு கொடுக்க, தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வசதியானவர்கள், மானியத்தை விட்டு தர வேண்டும்' என, பிரதமர் மோடி கூறுவதை கேட்டு, அது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் உள்ளது.அதேபோல், முதல்வர் பழனிசாமியும், ரேஷன் பொருட்கள் விட்டு கொடுப்பது தொடர்பாக, மக்களிடம் வலியுறுத்த வேண்டும்.

'ரேஷன் பொருட்கள் வேண்டாம்' என்று தெரி வித்ததில், சென்னை, 600 நபர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, விழுப்புரத்தில், 195; சேலத்தில், 185 பேர் உள்ளனர். மற்ற மாவட்டங்களில், 100க்கும் குறைவான நபர்களே விட்டு கொடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (17)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
21-அக்-201721:22:09 IST Report Abuse

Sivaதமிழனின் இலவச குணம் எங்களூர் வந்தேரிகளுக்கும் வந்து விட்டது. பரதேசி பய மத்திய அரசு சம்பளம் ஆனால் தமிழ் நாடு அரசின்இலவசம் இவனுக்குமா??????

Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
21-அக்-201721:00:30 IST Report Abuse

Sivaமத்திய மாநில அரசு ஊழியர்கள் 90% ரேசன் தேவை இல்லை என்று நினைக்கிறார்கள் ஆனால் ரேசன் கடை ஊழியர்கள் பொருள் வாங்கவிட்டால் கார்டு ரத்தாகும் என்று மிரட்டியே பிச்சை கார பொழப்பு .

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-அக்-201716:52:34 IST Report Abuse

Malick Rajaபஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரையும் .. பிரதிமாதம் ரூ .40,000/=க்கு மேல ஊதியம் பெறும் அரசு ஊழியர்களும் முதலில் வெளிவரட்டும் அப்பறம் பார்க்கலாம் மற்றவர்களை

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X