மீண்டும் எழுச்சி பயணம்: ஸ்டாலின் ஆயத்தம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மீண்டும் எழுச்சி பயணம்: ஸ்டாலின் ஆயத்தம்

சென்னை: ''நமக்கு நாமே பாணியில், மீண்டும் எழுச்சி பயணம் செல்கிறேன்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று நடந்தது.
கூட்டத்தில், 'டெங்கு பாதிப்பை, மருத்துவ நெருக்கடி நிலையாக பிரகடனம் செய்து, சுகாதார பேரிடராக கருதி, மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.' ஊழல் புரிந்த அமைச்சர்கள், தி.மு.க., ஆட்சியில், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட, 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின், ஸ்டாலின் அளித்த பேட்டி: கடந்த, 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், 'நமக்கு நாமே' பயணம் சென்றது போல் விரைவில், எழுச்சி பயணம் செல்கிறேன்.

 எழுச்சி பயணம்,Surge trip,  நமக்கு நாமே,namakku name , தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ,DMK chief executive Stalin, டெங்கு,Dengue,  தமிழகம்,Tamil Nadu, ராஜ்யசபா எம்.பி கனிமொழி, Rajya Sabha MP Kanimozhi, தி.மு.க தலைவர் கருணாநிதி, DMK leader Karunanidhi,  முரசொலி, Murasoli,ஸ்டாலின், Stalin,சென்னை, chennai,

'உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தலை தாண்டி, தமிழகத்தில் நடக்கிற இந்த குதிரை பேர ஆட்சியின், அடிமைஆட்சியின் அவலங்களை பற்றி,

Advertisement

மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் வகையில், இந்த பிரசார பயணம் அமையும்.
நவ., 7 - டிச., முதல் வாரம் வரை, இந்த பயணம் தொடரும். பயணத் திட்டங்கள் குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும். 'குட்கா, வாக்கி டாக்கி' ஊழல் பிரச்னைகளை, மக்கள் மன்றத்தை தாண்டி, சட்ட ரீதியாக எடுத்துச் சென்றுள்ளோம். உள்ளாட்சி தேர்தல் பிரச்னையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கனிமொழி, 'மிஸ்சிங்':


சென்னையில், நேற்று நடந்த, மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், ராஜ்யசபா, எம்.பி.,கனிமொழி பங்கேற்கவில்லை; அவரை அழைக்கவும் இல்லை. அதே நேரத்தில், எம்.பி.,க்கள் என்ற அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.
இது குறித்து, மகளிர் அணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க., தலைவர், கருணாநிதி நடத்திய, எல்லா மாவட்ட செயலர்கள் கூட்டத்தின் போதும், கனிமொழிக்கு அழைப்பு விடுவது வழக்கம். ஆனால், ஸ்டாலின் அழைப்பது இல்லை.
சென்னையில், நேற்று முன்தினம், 'முரசொலி' அலுவலகத்திற்கு, கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். மகள் செல்வியும் உடன் சென்றார். ஆனால், கனிமொழியை அழைக்க வில்லை. ஏன் இந்த பாகுபாடு என தெரியவில்லை. தொடர்ந்து, தி.மு.க.,வில், மகளிர் அணியினர் புறக்கணிக்கப்படுகின்றனர். இளைஞரணிக்கு தான், ஸ்டாலின் முக்கியத்துவம் தருகிறார். விரைவில், ஸ்டாலினை சந்தித்து, எங்கள் மனக்குமுறலை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand Rao.v - Chennai,இந்தியா
22-அக்-201720:02:47 IST Report Abuse

Anand Rao.vவயதானோர்களிடம் கூட்டு சேர்ந்தால் "எழுச்சி" கிடைக்காது

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
22-அக்-201700:07:47 IST Report Abuse

Pannadai Pandianமக்களை ஏதாவது ஒரு வகையில் சந்திப்பது தவறல்ல.

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
21-அக்-201721:10:16 IST Report Abuse

அம்பி ஐயர்எப்படி.....?? 45 நாள்ல நாலு கோடி மக்களைச் சந்தித்ததைப் போலவா...??? இந்தவாட்டி திட்டத்தை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்துங்க.... அறுபது நாள்ல 10 கோடி பேரைச் சந்திங்க... அவ்வளவு பேரு தமிழ்னாட்ல இருக்காங்களான்னு யாரும் கேட்க மாட்டாங்க.... நல்லா பூ சுத்துங்க....

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X