குஜராத் பாணியில் வீட்டுவசதி கொள்கை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குஜராத் பாணியில் வீட்டுவசதி கொள்கை

குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட, ஆறு மாநிலங்களின் வழிமுறைகளை பின்பற்றி, தமிழகத்திற்கான, புதிய நகர்ப்புற வீட்டுவசதி கொள்கை உருவாக்கப்பட உள்ளது.

 குஜராத்,Gujarat, வீட்டுவசதி கொள்கை, Housing Policy,கர்நாடகா,Karnataka, ஆந்திரா ,Andhra Pradesh,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சட்டசபை, Assembly,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, Housing and Urban Development Department, புதிய நகர்ப்புற வீட்டுவசதி கொள்கை, New Urban Housing Policy, ஜி.ஐ. இசட், GI Z,தர்மேந்திர பிரதாப் யாதவ், Dharmendra Pratap Yadav,  தெலுங்கானா,Telangana, கேரளா, Kerala, மஹாராஷ்டிரா, Maharashtra,

'தமிழகத்தில், வீடு கட்டும் செலவை குறைப்ப தோடு, நலிவடைந்த மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, வீட்டுவசதி கிடைக்க செய்யும் வகையில், வீட்டுவசதி மற்றும் உறைவிட கொள்கை உருவாக்கப்படும்' என, முதல்வர், பழனிசாமி, 110வது விதியின் கீழ்,

சட்டசபையில் அறிவித்தார். இந்த பணிக்காக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, ஜி.ஐ. இசட்., என்ற, தனியார் நிறுவனத்தை கலந்தாலோச கராக நியமித்தது. இந்நிறுவனம் தயாரிக்கும் கொள்கைவரைவு, அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க, வீட்டுவசதி துறை செயலர், தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில், 10 பேர் அடங்கிய குழு அமைக்கப் பட்டு உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம், சமீபத்தில் நடந்தது.

இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

வீட்டுவசதி துறை செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில்,தமிழகத்திற்கான, புதிய நகர்ப்புற வீட்டுவசதி கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது,புதிய கொள்கையானது,குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய, ஆறு மாநிலங்களின் வீட்டு வசதி கொள்கைகளில் உள்ள, சிறப்பு அம்சங்கள்

Advertisement

அடிப்படையில் இருக்கும் என, ஆலோசனை நிறுவனம் தெரிவித்தது.மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்கள் அடிப்படை யில், நகர்ப்புற வளர்ச்சியும், வீடுகளுக்கான தேவையும் கணக்கிடப்பட்டு, புதிய கொள்கைக் கான, அடிப்படை வரையறைகள் உருவாக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (8)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
21-அக்-201721:12:42 IST Report Abuse

அம்பி ஐயர்சபாஷ்.... புதிய கொள்ளைக் கான, அடிப்படை வரையறைகள் உருவாக்கப் படும்.

Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
21-அக்-201719:10:58 IST Report Abuse

Stalinகொள்ளை அடிக்க எல்லா திட்ட வரிகளும் தயார் ஆட்சி முடியும் காலத்தில் அரசு கஜானா காலில் கடன் தொகை மிக அதிகமாக இருக்கும் இதுவே ADMK அண்ட் DMK வின் தாரக மந்திரம்

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
21-அக்-201711:10:42 IST Report Abuse

Jaya Ramஎல்லா மாநிலத்தவரும் இங்கு வந்து திட்டங்களை அறிந்து கொண்டு சென்றது போக இப்போ மற்ற மாநிலங்களை நீங்கள் எட்டிப்பார்க்க வேண்டிய நிலைமைக்கு நீங்கள் தள்ளப்பட்டத்தினை எண்ணி இந்த தமிழ்நாடே வருந்துகிறது, ஒருமந்திரி என்னடாவென்றால் அணையினை தெர்மாக்கூல் கொண்டு மூடப்பார்க்கிறார், இன்னொருமந்திரி நீட் தேர்வினை உள்ளே அனுமதிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார், இன்னொரு மந்திரி மோடி இருக்கும்வரை அதிமுக ஆட்சியினை அசைக்க முடியாது என்கிறார் இது என்னவோ மன நல மருத்துவமனையில் இருப்பது போல் தெரிகிறது, இதில் எதிர்க்கட்சி தலைவரோ என்னவோ அவர்கள் ஆட்சியில் நோய்கள் வராத மாதிரியும் பினாத்திக்கொடு இருக்கிறார், அவருடைய தகப்பனாரோ மீனவர்கள் பேராசைக்காரர்கள் அதனால் தான் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்கிறார்கள் என்றார் இவர் என்னவோ இருப்பதை கொண்டு வாழ்வது போலவும் இவருடைய குடும்பம் அன்றாடம் சம்பாதித்து சாப்பிடுவது போலவும் கூறிக்கொண்டு இருக்கிறார் நானும் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இதுவரை ரேஷன் அரிசி வாங்கி சாப்பிடும் நிலையில் தான் உள்ளேன் ஆனால் இவர் குடும்பமோ கடந்த 50 ஆண்டுகளில் வருடத்திற்கு அனைவரும் உழைத்தாலும் வருடம் 10 லட்சம் மீதம் வைத்தாலே 5 கோடி தான் தேறும் ஆனால் யாரும் அழிக்கவில்லை எந்த பிஸினஸும் செய்யவில்லை தகப்பன், மகன்கல்,பேரன்,மகள் ஆகியோர் அரசியலில் நுழைந்து சம்பாதித்த கோடிகளோ கணக்கிலடங்கா இவர்களில் இப்போ ஒருவர் திரும்பவும் தமிழ் நாடு சுற்ற போகிறாராம் போனதடவை மக்களிடம் வாங்கிய மனுக்களின் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவிட்டார் எனவே இப்போ இன்னும் மனுக்கள் வாங்க போகிறார் பார்த்துபோகச்சொல்லுங்கள் இல்லையெனில் டெங்கு தாக்கி விடப்போகிறது எல்லாம் தமிழ் நாட்டின் தலையிழுத்து எப்போ ஒரு நல்லத்தலைவன் தமிழகத்திற்கு உருவாக்கப்போகிறானோ அப்போதான் தமிழகத்தின் இருள் விலகும் அவர் கண்டிப்பாக நடிகராகவோ, ஏற்கனவே ஆட்சியில் இருந்தவராகவோ இருக்கக்கூடாது அது முக்கியம்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X