ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது

Added : அக் 21, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வங்கி கடன்,Bank loan, ஏர் - இந்தியா, Air India,  புதுடில்லி ,New Delhi,  மத்திய அரசு, Central Government, மத்திய அமைச்சரவை குழு, Union Cabinet Committee

புதுடில்லி : அவசர மூலதன செலவுகளை சமாளிக்க, வங்கிகளிடம், 1,500 கோடி ரூபாய் குறுகிய கால கடனை, 'ஏர் - இந்தியா நிறுவனம்' கோரி உள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: அவசர மூலதன தேவைகளை, உடனடியாக பூர்த்தி செய்வதற்காக, 1,500 கோடி ரூபாய் அளவிற்கு, குறுகிய கால கடன் தேவைப்படுகிறது. இதற்கான, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். உத்தரவாத காலம், கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 2018 ஜூன், 26க்குள்ளாகவோ அல்லது பங்கு விற்பனை முடிவுறும் காலம் வரையிலோ இருக்கும்.

விருப்பமுள்ள வங்கிகள், அளிக்க விரும்பும் கடன் தொகையை குறிப்பிட்டு, உரிய ஆவணங்களை, 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏர் - இந்தியா நிறுவனம், 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்ளது. இழப்பில் உள்ள இந்நிறுவனத்தை விற்க, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், அவசர செலவுகளை சமாளிக்க, ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக, ஏர் - இந்தியா கடன் கோரி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
21-அக்-201719:25:24 IST Report Abuse
Needhiyin Pakkam Nil உலகத்தில் உள்ள எல்லா விமானங்களும் லாபத்தில் ஓடுகிறது அனால் இந்த ஏர் இந்தியா விமானம் மட்டும் தான் எப்பவுமே நஷ்டத்துலே ஓடுது, அரசியல்வாதிகளின் ஓசி பயணங்களை நிறுத்தினால் லாபம் கிடைக்கும்................
Rate this:
Share this comment
Cancel
A RAJ - CHENNAI,இந்தியா
21-அக்-201715:13:31 IST Report Abuse
A RAJ Mallaya's King fisher airlines loan was only 7K crores. But, Air Indias existing loan is 50K crores. Why should tax payers money wasted for bailing Air India? Let it be privatised .Not only Air India, all the lose making PSUs like Indian Railway ,SAIL ,Post Office too needs to be privatised .Once, it privatised ,we can see ,these companies will turn into profit as there will be no disproportionate salary ,No unions and performance based increment. You can not expect theses qualities from GOVT employees .
Rate this:
Share this comment
Cancel
bhaski karan - tirupur,இந்தியா
21-அக்-201712:50:13 IST Report Abuse
bhaski karan தனியார் இந்த விமான நிறுவனத்தை வாங்கும் போது வாங்கி கடனித்தவிர வேறு எந்த கடனும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள், இதனை வாங்கும் போது வேறு கடன் பிரச்சனை இருக்காது, வாங்கும் நிறுவனம் இந்த கடனையும் மத்திய அரசு முழுவதும் தள்ளுபடி செய்து விடும். வாங்குபவர்களுக்கு நல்ல லாபத்தில் இயக்க இது முக்கியம், அதுவும் வாங்கும் நிறுவனம் மத்திய அரசுக்கு வேண்டியவர்கள் என்றால் எதுவும் செய்வார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X