மோடி இருக்கும் வரை அதிமுக.,வை யாராலும் அசைக்க முடியாது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடி இருக்கும் வரை அதிமுக.,வை யாராலும் அசைக்க முடியாது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Updated : அக் 21, 2017 | Added : அக் 21, 2017 | கருத்துகள் (175)
Advertisement
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,Minister Rajendra Balaji,  மோடி,Modi,  அதிமுக,AIADMK,  இரட்டை இலை,irattai ilai, தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , Tamil Nadu Dairy industry Minister Rajendra Balaji, சென்னை ஐகோர்ட் , Chennai High Court,  உள்ளாட்சி தேர்தல், Local Elections, இடைத்தேர்தல்,by-Elections,

ஆண்டிப்பட்டி : தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் கூறிய கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசுவதற்கு ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இந்த தடையை நேற்று மேலும் நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவரின் கருத்து, அரசியல் களத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில், இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் அணிக்கு தான் கிடைக்கும். 92 சதவீதம் பொதுக்குழு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த பக்கம் தான் உள்ளனர். அதனால் தேர்தல் கமிஷனால் தீர்ப்பை மாற்றிச் சொல்ல முடியாது.
டில்லி நம்மிடம் உள்ளது. மோடி இருக்கும் வரை அதிமுக.,வை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. அதிமுக.,வை யாராலும் அழிக்க முடியாது. அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஒபாமா வந்தாலும் சரி, டிரம்ப்பே வந்தாலும் சரி, மோடி இருக்கையில் வேறு எந்த பேடியாலும் ஒன்றும் செய்து விட முடியாது. ஸ்டாலின் தலைமையிலான திமுக.,விற்கு வயதாகிவிட்டது. அதனால் நம்மை எதிர்ப்பதற்கு யாருமே இல்லை.

மேலே உள்ள பிரதமர் மோடி இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என, தேனிமாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

மோடியின் ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் நமக்கு தான் கிடைக்க போகிறது. கட்சியும் நமக்கு தான். இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் உள்ளிட்டவைகள் நடக்கும். அதிமுக.,விற்கு ஆதரவான 40 எம்.எல்.ஏ.,க்கள் திமுக.,வில் உள்ளனர். நம்பிக்கை ஒட்டெடுப்பு நடத்தினால் தெரியும் யாரிடம் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்று. நடிகர் கமலஹாசனுக்கு வழிகாட்டும் தன்மை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (175)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
27-அக்-201705:22:39 IST Report Abuse
Rajendra Bupathi எப்படியோ கூட்டு களவாணிங்கன்னு ஒத்துகிட்டா சரிதான்?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
22-அக்-201705:17:56 IST Report Abuse
Rajendra Bupathi பதவி உறுதி மொழி காப்பு இரகசியத்தை இவரு மீறுறாரு? அரசின் இரகசியத்தை ஒரு அமைச்சர் வெளிப்படுத்துவது நல்லா இல்லை?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
22-அக்-201705:15:50 IST Report Abuse
Rajendra Bupathi மந்திரிசபையை மாத்தி அமைங்கைய்யா? எல்லாம் ஒரே மொக்கை கேசுங்களா இருக்கு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X