ஒரிஜினல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்; வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஒரிஜினல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்
வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: வாடிக்கையாளர்கள் அளித்த ஆவணங்களின் நகல்களை, சட்ட விரோத பணப்பரிமாற்றங்களை தடுக்கும் நோக்கில், ஒரிஜினல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு உறுதி செய்து, அதை பதிவு செய்யும் பணியில், வங்கிகள் ஈடுபட உள்ளன.

 ஒரிஜினல் ஆவணங்கள்,Original documents, வங்கி,banking, மத்திய அரசு, central government,பணப் பரிவர்த்தனை,cash transaction, வாடிக்கையாளர்கள், Customers,வருவாய் துறை, Revenue Department, நிதியமைச்சகம், Finance Corporation, இந்திய நிதி புலனாய்வு ,Indian Financial Intelligence, மின் வாரிய பில்,Electricity Board, தொலைபேசி,Telephone, மொபைல் போன் போஸ்ட் பெய்ட் பில், Mobile Phone Postpaid Bill, குடிநீர் வாரிய பில், Drinking Water Bill, பங்குசந்தை தரகர்கள்,Stock Brokers, சிட்பண்ட் நிறுவனங்கள், Chit Fund companies,, கூட்டுறவு வங்கிகள்,Co-operative Banks, நிதி நிறுவனங்கள், Financial Institutions, புதுடில்லி, New Delhi,ஆவணங்கள், documents,

குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக, பணப் பரிவர்த்தனை செய்பவர்கள், ஆவணங்களின் நகல்களை, வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் போலிகளை தடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும், வருவாய் துறை, சமீபத்தில்,

அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு, உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியது.சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில் அனுப்பப் பட்ட அந்த கடிதத்தில், அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் நகல்களை, ஒரிஜினல் ஆவணங்களுடன் சரி பார்த்து, அதனை பதிவு செய்யும்படி கூறப்பட்டு உள்ளது.

வங்கிகளில், கணக்கு துவங்கும் வாடிக்கையாள ரிடம், ஆதார் அடையாள எண், இருப்பிடச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகின்றன. அதேபோல், 50 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதலாக பரிவர்த்தனை செய்பவர் களிடம், இத்தகைய ஆவணங்களின் நகல்கள் பெறப்படுகின்றன. இனி, இந்த ஆவண நகல்கள் அனைத்தையும், ஒரிஜினல் ஆவணங்களுடன், வங்கிகள், நிதி நிறுவனங்கள் சரிபார்க்கவேண்டும்.

அதேபோன்று, 10 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக பணப்பரிவர்த்தனை செய்பவர்கள், சந்தேகத்திற் கிடமான பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை, எப்.ஐ.யு., - இண்ட் எனப்படும், இந்திய நிதி புலனாய்வு பிரிவிடம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் சமர்ப்பிக்கும்படி

Advertisement

உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பங்குசந்தை தரகர்கள், சிட்பண்ட் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆவணம் சமர்ப்பிக்கும் வாடிக்கையாளரிடம், சமீபத்திய முகவரி சான்று இல்லாத பட்சத்தில், மின் வாரிய பில், தொலைபேசி, 'மொபைல் போன் போஸ்ட் பெய்ட்' பில், குடிநீர் வாரிய பில் போன்றவற்றை ஆவணமாக காட்டலாம்.


Advertisement

வாசகர் கருத்து (13)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
23-அக்-201714:47:40 IST Report Abuse

A.Gomathinayagamசரியான நடவடிக்கை . ஆனால் ஏற்கனவே ரூபாய் 50000 /-மேல் ரொக்க பண பரிமார்தம் செய்ய பான் எண் தர ஆணை இருக்கிறதே..இப்பொழுது இரண்டும் வேண்டும் . எலிகள் மாட்டிக்கொள்ளும் .முதலைகள் ?

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-அக்-201712:00:53 IST Report Abuse

Malick Rajaஇதை எல்லாம் வெளியில் சொல்லி விளம்பரம் செய்து சாதாரண மக்களை துன்பப்படுத்தி பணக்காரர்களை மகிழ்விக்கும் பணிதான் இது .. முதலில் பிரதமர் நான் கணக்கு காட்டி இருக்கிறேன் என்பதை உறுதி படுத்தி நாட்டு மக்களுக்கு சொல்லலாம் .. பிளாட்பார டீக்கடை தொழிலாளியாக இருந்தவருக்கு இன்று 10 கோடி மதிப்புவுக்கு சொத்துக்கள் இருக்கிறது என்றால் நாட்டை எப்படி மேம்படுத்த முடியும் ? எவ்வளவு வழி முறைகள் இருந்தும் உபயோகிக்காமல் இருப்பது வேதனை .உரியமுறையில் நிதியமைச்சகம் நடந்தால் நாடு என்றோ முன்னேறும் ,, ""கள்ளன் கப்பலில் தன்னே"" என்ற அளவில் அரசாங்கம் நடக்கிறது ... ஒரே ஒரு உதாரணம் .. 10 மாடி கட்டடங்கள் எத்தனை இந்த நாட்டில் கணக்கீடு செய்து கருப்புப்பணத்தை பிடிக்கலாம் இது ஆயிரத்தில் ஒன்று இதை போல எவ்வளவோ இருக்கிறது ஆனால் செய்வது மட்டும் முடியாத காரியம் .. காரணம் நம் இந்தியாவில் டோர்மென் முதல் சேர்மேன் வரை கறுப்பாடுகளே ... களைவது கடினம் . ஆனால் பாமர மக்கள் துன்பம் அடைவதை மட்டுமே மேம்படுத்துவார்கள்

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
23-அக்-201709:21:00 IST Report Abuse

 ஈரோடுசிவாதீராவிடத் திருடர்களுக்கு... கறார் போலீஸான மோடியைக் கண்டால் கடுப்பாகத்தான் இருக்கும்....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-அக்-201714:30:06 IST Report Abuse

Pugazh Vஆரியத் திருடர்கள் பயப்பட வேண்டாம் இல்லையா? ஆரியர்கள் பிறவியிலேயே திருடர்கள் என்பதாலும் அதில் ஒரு பங்கு மோ க்கு செல்வதாலும் உங்கள் திருட்டுகளை வழக்கம் போல தொடருங்கள்....

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
23-அக்-201719:18:23 IST Report Abuse

Krish Samiஈரோடு சிவா, புகழ் , இப்படி பொதுமைப்படுத்துதல் சிறிதும் நாகரீகம் இல்லை. திருடர்களும், நேர்மையாளர்களும் எல்லா சமூகங்களிலும், எப்போதும் உண்டு - உலகம் முழுவதும். எத்தனையோ எடுத்துக்காட்டுக்கள் உண்டு....

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X