கட்டமைப்பு வசதி இல்லாத 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரம் ரத்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கட்டமைப்பு வசதி இல்லாத 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரம் ரத்து

Added : அக் 23, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கட்டமைப்பு வசதி இல்லாத 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரம் ரத்து

புதுடில்லி: கட்டமைப்பு வசதி இல்லாத, 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

நாட்டிலுள்ள, 13 ஆயிரம், ஐ.டி.ஐ., எனப்படும், தொழிற் பயிற்சி மையங்களில், 70 லட்சம் மாணவர்கள், பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். மத்திய அரசின் திறன் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும், என்.சி.வி.டி., எனப்படும், தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில், தனியார் ஐ.டி.ஐ.,களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கி வருகிறது. ஐ.டி.ஐ.,களின் கட்டமைப்பு வசதி, பயிற்சியாளர்கள் தகுதி ஆகியவற்றை ஆய்வு செய்து, தரச் சான்று வழங்கும் முறை, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து, மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர், ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: என்.சி.வி.டி., ஆய்வில், 5,100, ஐ.டி.ஐ.,கள், தரச்சான்று பெற்றுள்ளன. போதுமான, கட்டமைப்பு வசதியும், தகுதியான பயிற்சியாளர்களும் இல்லாத, 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
partha - chennai,இந்தியா
23-அக்-201715:45:14 IST Report Abuse
partha வேறுதே தரத்திற்க்காக அல்லாமல் எண்ணிக்கைக்காக நடத்தப்படும் கல்விநிலையங்கள் அனுமதிக்கப்படும்வரை நிலைமை இப்படித்தான் இருக்கும் அடுத்து பன்றி குட்டிக்கூட்டம்போல் வளர்ந்துள்ள நிகர் நிலை பல்கலை கலகங்களையும் அரசு கவனிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-அக்-201708:54:15 IST Report Abuse
Bhaskaran நான் பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி அருகே ஒரு கிராமத்து கோவில் மண்டபத்தில் வைத்து நடைபெறும் ஒரு iti பள்ளியைப் பார்த்தேன் அரசு ரொம்ப சீக்கிரமாகத்தான் நடவடிக்கை எடுத்துள்ளது
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-அக்-201708:20:36 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏற்கனவே படித்து விட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றுபவர்கள் ஏராளம்... இதை மூடுவதால் வேலை இல்லா திண்டாட்டம் குறையும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை