'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'| Dinamalar

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'

Updated : அக் 24, 2017 | Added : அக் 24, 2017 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேச பக்தி, National devotion, சினிமா தியேட்டர்,Cinema theater,  தேசிய கீதம் , national anthem,  மத்திய அரசு, federal government, உச்ச நீதிமன்றம்,Supreme Court,  நீதிபதி தீபக் மிஸ்ரா, judge Deepak Mishra,தேசப்பற்று, patriotism,புதுடில்லி, New Delhi,

புதுடில்லி: 'சினிமா தியேட்டர்களில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்காவிட்டால், அந்த நபருக்கு தேசப்பற்று குறைவாக இருப்பதாக கருது முடியாது; தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


உத்தரவு:


நாட்டின் அனைத்து சினிமா தியேட்டர்களிலும், படம் திரையிடப்படுவதற்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, கடந்த ஆண்டு, டிசம்பர் முதல், அனைத்து தியேட்டர்களிலும், தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்காத, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிலர், சக பார்வையாளர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தேச பக்தி குறைவா..

இது குறித்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: மக்கள், பொழுது போக்கிற்காக சினிமா தியேட்டருக்கு செல்கின்றனர். தேச பக்தியை நிரூபிக்கும் இடம், அது அல்ல. தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்படும் போது, எழுந்து நிற்காத நபருக்கு, தேச பக்தி குறைவாக இருப்பதாக கருத முடியாது. தியேட்டர்களுக்கு வருவோர், டி - சர்ட்டுகள், அரைக்கால் சட்டை அணிந்து வந்தால், அது தேச பக்திக்கு பங்கம் விளைவிக்கும் செயல் எனக் கருதி, அதற்கும் தடை விதிக்க, மத்திய அரசு விரும்பலாம்.


தெளிவுபடுத்தனும்:

பல்வேறு போட்டித் தொடர்களின் போது, விளையாட்டு மைதானங்களில், தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அங்கு அமர்ந்திருக்கும் பார்வையாளர்களில், பாதிக்கு மேற்பட்டோருக்கு, அதன் பொருள் புரிவதில்லை. அது, ஏன் இசைக்கப்படுவது என்றும் தெரிவதில்லை. அவர்களில் பலர் எழுந்து நிற்பதும் கிடையாது. தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். எங்கெங்கு இசைக்கப்பட வேண்டும். அதன் விதிமுறைகள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
24-அக்-201716:04:46 IST Report Abuse
JAYARAMAN I am under the impression that, judgements are on based on existing laws only. Which law says that, judges can make laws on their own.
Rate this:
Share this comment
Cancel
Manoharan - Penang,மலேஷியா
24-அக்-201712:47:05 IST Report Abuse
Manoharan முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிலருக்கு ஏற்பட்ட சங்கடங்கள் வருத்தத்திற்க்குரியவை தான். ஆனால் தேசியகீதம் இசைக்க சொன்னதே இந்த நீதிபதிகள் தானே? இப்போது இன்னொரு நீதிபதி சொல்கிறார் "தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும்" என்று இப்படி போனால் அடுத்த நீதிபதி வந்து என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. இந்த நீதிபதிகளுக்குள்ளேயே ஒரு ஒற்றுமை இல்லாமல் போனால் பொது மக்கள் என்ன செய்வார்கள் ? இப்படிப்பட்ட நீதிபதிகளை வைத்துக்கொண்டு நம் நாடு எப்படி உருப்படும்?
Rate this:
Share this comment
Cancel
senthilkumar - tamilnadu,இந்தியா
24-அக்-201712:23:39 IST Report Abuse
senthilkumar .... அறிவாளி போட்ட சட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X