தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை

Added : அக் 24, 2017 | கருத்துகள் (220)
Advertisement
தீபாவளி,Diwali,  மாணவர்கள்,Students, தண்டனை, Punishment,  பெற்றோர்கள்,Parents,  திருச்சி, Trichy,சர்ச்சை,Controversy,  தனியார் பள்ளி , Private School,  பள்ளி தலைமையாசிரியர்,School Headmaster,  உடற்கல்வியாசிரியர் ,physical education Teacher , மாசு கட்டுப்பாடு வாரியம் , Pollution Control Board,

திருச்சி: தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் தீபாவளி கொண்டிய மாணவர்களுக்கு தண்டனையும், கொண்டாடாதவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி தீபாவளி விடுமுறை முடிந்து சமீபத்தில் திறக்கப்பட்டது. விடுமுறை முடிந்து திரும்பிய மாணவர்களிடம் யார் பட்டாசு வெடித்து கொண்டாடினீர்கள் என்று கேட்கப்பட்டது.

இதில் ஆமாம் என பதில் சொல்லிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதுடன், அவர்கள் பாவம் இழைத்து விட்டதாக கூறி கடவுளிடம் மன்னிப்பும் கேட்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருதாணி வைத்திருந்த மாணவிக்கு அடியும் விழுந்துள்ளது.

அதே போல் தீபாவளி கொண்டாடவில்லை என கூறிய மாணவர்களுக்கு பாராட்டு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவல் அறித்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வியாசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் தெரிவிக்கையில் ஒலி மற்றும் மாசினை குறைக்கும் வகையில் மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கிய அறிவுரைகளையே பின்பற்றியதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வியாசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X