நவ., 8ஐ கறுப்பு தினமாக அனுசரிக்க 18 கட்சிகள் திட்டம் | Dinamalar

நவ., 8ஐ கறுப்பு தினமாக அனுசரிக்க 18 கட்சிகள் திட்டம்

Updated : அக் 25, 2017 | Added : அக் 24, 2017 | கருத்துகள் (236)
Advertisement
ரூபாய் நோட்டு வாபஸ், bank note withdraws, எதிர்க்கட்சிகள், Opposition parties, கறுப்பு தினம்,Black Day,  காங்கிரஸ் ,Congress,  குலாம் நபி ஆசாத் ,Ghulam Nabi Azad,  பிரதமர் மோடி ,Prime Minister Modi,  பொருளாதாரம்,Economy,  புதுடில்லி, New Delhi,

புதுடில்லி, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஓராண்டு முடிவதையடுத்து, நவ., 8ம் தேதியை, கறுப்பு தினமாக அறிவித்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த, 18 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் நரேந்திர மோடி, 2016 நவ., 8ல் வெளியிட்டார். இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், நவ., 8ல் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி, ஓராண்டு நிறைவடைகிறது. அதையொட்டி, அந்நாளை கறுப்பு தினமாக அறிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட, 18 எதிர்க்கட்சிகளின் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கு வழங்கப்பட்டது.

இதற்காக, ஏழு பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான, குலாம் நபி ஆசாத், டில்லியில் நேற்று கூறியதாவது:
இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய மோசடியாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு உள்ளது. அரசின் ஒரு திட்டத்தால், மக்கள் உயிரிழந்த சம்பவம், இந்த திட்டத்தால்
ஏற்பட்டது. சரியாக திட்டமிடாமல், அவசரமாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தால், மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஆனால், எங்களை கறுப்பு பண பதுக்கல்காரர்கள் என, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு குற்றஞ்சாட்டியது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், பிரச்னைகளை உணர்த்தும் வகையில், அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஓராண்டை நிறைவு செய்யும், நவ., 8ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம்.
நாடு முழுவதும், அந்தந்த மாநிலங்களில், எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X