பரிசு வேண்டுமா.. இன்று போய் நாளை வா.. டாட்டா காட்டிய பள்ளிக்கல்வித்துறை| Dinamalar

பரிசு வேண்டுமா.. இன்று போய் நாளை வா.. டாட்டா காட்டிய பள்ளிக்கல்வித்துறை

Added : அக் 25, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ராமநாதபுரம்:பரிசு வேண்டுமா.. இன்று போய் நாளை வா.. என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை டாட்டா காட்டியதால், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஏமாற்றம்
அடைந்தனர்.
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், கல்வி மாவட்ட அளவிலும், வருவாய் மாவட்ட அளவிலும் கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு, தனிநபர் நடனம், குழு நடனம், பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட 12 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதில், 6 முதல் 8 வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-10 ஒரு பிரிவு, பிளஸ் 1 பிளஸ் 2 மற்றொரு பிரிவு என மூன்று பிரிவாக, ஒவ்வொரு பிரிவிலும் 12 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு பரிசு
மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டும். அதன் படி ஒவ்வொரு பிரிவிலும், 36 பேர் வீதம் 108 மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், நேற்று ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் போட்டிகள் நடந்தன. ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் அறிவிக்கப்படவில்லை. முதலிடம், இரண்டாமிடம் பெற்றவர்களில் பெரும்பாலோருக்கு பரிசுகள் வழங்கவில்லை. இன்று போய் நாளை வா.. என்பது போல், நாளை பள்ளியில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள், என அறிவித்தனர்.கொடுக்கப்பட்ட பரிசுப்பொருளும் 10 ரூபாய், 20 ரூபாய் மதிப்பிலானவை, என பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு பரிசே அறிவிக்கப்படாததால், வெற்றி பெற்ற மாணவர்களும், பெற்றோரும், ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமியிடம் கேட்ட போது, போட்டிக்கான பரிசுகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் வழங்குகிறது. பரிசுப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X