கோனேரி ராஜபுரம் கிராமத்தின் கதை| Dinamalar

கோனேரி ராஜபுரம் கிராமத்தின் கதை

Updated : அக் 26, 2017 | Added : அக் 25, 2017 | கருத்துகள் (2)
Advertisement

கோனேரி ராஜபுரம் கிராமத்தின் படக்கதை1br@கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் போகும் வழியில் இருக்கிறதுகோனேரி ராஜபுரம் கிராமம். பார்த்தவர்களை ஈர்க்கும் அழகிய பசுமையான பழமை மாறாத கிராமம்.

இங்கு பிரசித்தி பெற்ற உமா மகேஷ்வரர் கோயில் உள்ளது இங்கு மார்கழியில் நடக்கும் திருவாதிரை திருவிழா மிகவும் பிரசித்தம்.இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து தற்போது சென்னையில் இருப்பவரான சாமிநாதன் புகைப்படக்கலைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராசின் தலைவர்.இவர் தலைவரானதும் நிறைய இளைஞர்களை உறுப்பினராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அது மட்டுமின்றி புதியவர்களுக்காக விசேஷமான பல புத்தாக்க பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருகிறார்.

சிறு வயது முதலே போட்டோகிராபியில் ஆர்வம் கொண்ட இவரது படங்கள் பல உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெற்ற புகைப்பட போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளது.
வனவிலங்கு,பறவைகள்,இயற்கை காட்சிகளில் மனம் லயித்து படம் எடுக்கக்கூடிய இவர் சமீபகாலமாக மனிதர்கள் மீதும் பழமையான கட்டிடங்கள் மீதும் படம் எடுப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.இவருக்கு மிகவும் சந்தோஷம் தரக்கூடிய விஷயம் ஒன்று உண்டென்றால் அது தனது கோனேரி ராஜபுரம் கிராமத்திற்கு போய் படம் எடுப்பதுதான்.ஒவ்வொரு முறை போகும் போதும் கிராமம் தன்மீது புத்துணர்வை பூசிக்கொண்டு புதுப்பொலிவுடன் காட்சிதருகிறது என்பார் அப்படி சமீபத்தில் அவர் அங்கு போய் எடுத்த தனது கிராமத்து வனப்புகளை வண்ணத்திலும் கருப்பு வெள்ளையிலும் தோய்த்து கொடுத்திருக்கிறார்.
சாமிநாதனுடன் போட்டோகிராபி கிளப் சம்பந்தமாகவும், புகைப்படங்கள் தொடர்பாகவும், கோனேரி ராஜபுரம் கிராமம் பற்றியும் பேசலாம் அவருக்கான எண்:9840026723.-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோ.திருஞானம் - சரக்கல்விளை,நாகர்கோயில்,இந்தியா
06-நவ-201714:30:17 IST Report Abuse
சோ.திருஞானம் மென்மேலும் புகழடைய வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-நவ-201706:58:47 IST Report Abuse
J.V. Iyer திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள கருப்பூர் பக்கத்தில் மற்றுமொரு கோனேரி ராஜபுரம் உள்ளது. அதுவாக்கும் என நினைச்சேன். எனினும் வாழ்க பல்லாண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை