ஆறாதது ஆசிட் வார்த்தைகளும் தான்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

ஆறாதது ஆசிட் வார்த்தைகளும் தான்

Added : அக் 27, 2017 | கருத்துகள் (1)
Advertisement
ஆறாதது ஆசிட் வார்த்தைகளும் தான்

நெல்லை தீக்குளிப்பு சம்பவங்களை படம் எடுத்த பத்திரிகை போட்டோகிராபர்களை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, திட்டி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
'இவர்களுக்கு மனித நேயமே இல்லையா... இவர்கள் வீட்டு பிள்ளைகள் தீயில் எரிந்தால் இப்படித்தான் படம் எடுத்துக்கொண்டு இருப்பரா...' என்றெல்லாம் காய்ச்சி எடுக்கின்றனர்.
ஒரு படி மேலே போய், 'ஊடக காட்டேரிகள்...' என்றெல்லாம் வர்ணிக்கின்றனர். இப்படி, இவர்கள் வசை பாடவும், பத்திரிகை போட்டோகிராபர்கள் எடுத்த அதே படங்களைத் தான் பயன்படுத்துகின்றனர்.
ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது, அங்கே பத்திரிகை போட்டோகிராபர்கள் மட்டுமே இருந்து, அதை தடுக்காமல் படம் பிடித்தனர் என்றால், அவர்களை சாடலாம்.
தீக்குளித்தவர்கள், தங்களை காப்பாற்ற கோரி, ஓடி வந்த மாதிரியும், அவர்களை காப்பாற்றாமல், இவர்கள், அவர்களை விரட்டி விட்டு, படம் எடுத்தது போலவும், வார்தை கங்குகளை வாரி இறைக்கின்றனர்.
ஆனால், உண்மையில் பல்வேறு தரப்பினர், அங்கே களத்தில் இருந்து காப்பாற்ற முற்படும் போது தானே, பத்திரிகை போட்டோகிராபர்கள் படம் பிடிக்கின்றனர்; அப்படி, படம் பிடித்ததால் தானே, அவை வெளியாகி, உங்களை சேர்கிறது!
அந்த படங்கள் தானே, இன்றைக்கு, உலகம் முழுவதும் கந்து வட்டியின் கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இல்லாவிட்டால், 'கடன் தொல்லை மூன்று பேர் சாவு' என, அச்சன்புதுாரில் மட்டுமே, பெட்டிச்செய்தியாக வந்திருக்கும்.
கந்து வட்டி கொடுமையை, உலகம் முழுவதும் பேசவும், அலசவும் வைக்கவும், முதல்வரை அவசர நடவடிக்கை எடுக்க துாண்டவும், கந்து வட்டியே தொழிலாக கொண்டவர்களின் அடி வயிற்றில் அமிலத்தை சுரக்கச் செய்யவும் காரணம்... இந்த படங்கள் தானே!
பத்திரிகை போட்டோகிராபர்கள் தங்கள் பணியை செய்யாவிட்டால், எப்படி படங்கள் வரும்?
இரு சக்கர வாகனம் ஒன்றில் நீங்கள் போய்க்கொண்டு இருக்கிறீர்கள் என, வைத்துக்கொள்வோம். துாரத்தில், ஒருவர் ரோட்டில் மயங்கி விழுகிறார்; அவரை நெருங்குவதற்குள், வேறு சிலர் நெருங்கி, வேண்டிய உதவிகளை செய்கின்றனர்.
அப்போது, நீங்கள், அடிபட்டவருக்கு காற்று வராமல், கூட்டமாக கூடி நின்று பேசிக்கொண்டிருப்பீர்களா அல்லது அடுத்து என்ன செய்வது என யோசித்து, '108'க்கு போன் செய்வீர்களா?
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்யும் வேலையை தான், அன்றைய, பத்திரிகை போட்டோகிராபர்கள் பலர் செய்தனர்.
சம்பவத்தின் கோரத்தை பதிவு செய்தது, சில வினாடிகள் தான்; பின், அந்தக் குழந்தைகள் மற்றும் பெண்ணின் மீது பற்றி எரியும் தீயை அணைக்க அவர்கள் உதவியது தான் அதிகம்.
தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல், எரியும் குழந்தைகள் மீதான ஆடையை நீக்கினர்; ஆம்புலன்சுக்கு போன் செய்தும் வராத நிலையில், அருகில் இருந்த போலீஸ் வேன் மூலம், சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல உதவியதே, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் தான்.
இவ்வளவு செய்தும், 'குழந்தைகள் எரியும் போது படத்தை எடுத்த குரூரர்கள் தானே நீங்கள்...' என்ற குற்றச்சாட்டை, நிதானமில்லாமல் வீசுகின்றனர்.
கடந்த, 1993-ல் சோமலியா பஞ்சத்தின் போது, சாகப்போகும் குழந்தையை கொத்த, ஒரு கழுகு காத்திருக்கும் தருணத்தை, கெவின் கார்டர் என்ற புகைப்படக் கலைஞர் படம் எடுத்தார். அந்த படம் தான், உலகிற்கு சோமாலியாவின் பஞ்சத்தை உணர வைத்தது; கப்பல் கப்பலாக உலக நாடுகள் உணவை அனுப்பி வைக்கச் செய்தது.
'கழுகை விரட்டாமல், படம் எடுத்த நீயும் ஒரு கழுகே...' என, அந்த புகைப்படக்காரரை யாரும் வார்த்தையால் கொத்தவில்லை; உயர்ந்த, 'புலிட்சர்' விருது கொடுத்து, உலகமே கவுரவித்தது.
இங்கே, 'புலிட்சர்' விருதெல்லாம் தர வேண்டாம்; குறைந்தபட்சம், போட்டோகிராபர்களின் பணியை புரிந்து கொண்டால் போதும்.
கடற்கரையில், அகதியாய் ஒதுங்கிய, சிரியா நாட்டு சிறுவன், அயலானின் உடலைப் பார்த்த புகைப்படக்கலைஞர், அதை பதிவு செய்வதை விட்டு, 'யார் இந்த பையன்...' என, புரட்டிப் பார்த்து இருப்பாரேயானால், ஒட்டு மொத்த அகதிகளுக்கும் அந்நாடு கதவை திறந்து விட்டிருக்காது.
எரியும் போது புகைப்படம் எடுத்ததால், மனிதநேயம் இல்லாமல் போனவர்கள் இல்லை இவர்கள்!
எங்களுக்கும் குடும்பம் உண்டு;குழந்தைகள் உண்டு. இது போன்ற படங்களை எடுத்து விட்டு உணவு, தண்ணீர், துாக்கம் இல்லாமல் பல நாட்கள் தவிப்பவர்கள் நாங்கள்!
கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளை படம் எடுத்து விட்டு, பைத்தியம் போல திரிந்த புகைப்படக்கலைஞர்களில் நானும் ஒருவன்.
கோவை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பானவை படமாக வராமல், செய்தியாக மட்டுமே இருந்திருந்தால், கோவைக்கு மறுமலர்ச்சி என்பதே கிடைத்திருக்காது.
மனித வெடிகுண்டுக்கு பயந்து, போலீசாரே ஓடிய போது, துணிச்சலாக நின்று படம் எடுத்திருக்கா விட்டால், ராஜிவ் ஒரு கொடூரத்திற்கு பலியானதே தெரிந்திருக்காது.
பத்திரிகை போட்டோகிராபர்களுக்கும் குடும்பம் இருக்கிறது; குழந்தைகள் இருக்கிறது; அன்பு இருக்கிறது; மற்றவர்கள் துன்பம் கண்டு துடிக்கும் மனம் இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட, நாட்டில் நடப்பதை, உள்ளது உள்ள படியே வெளிக்காட்ட, கையில் அவனது இதயமாக, கேமரா இருக்கிறது. அந்த இயந்திர இதயத்திற்கு தெரியும்... ஒவ்வொரு படத்திற்கு பின்னாலும், அவன் பட்ட அவஸ்தைகளும், அனுபவித்த வலிகளும்!
ஆகவே, பத்திரிகை போட்டோகிராபர்களை நோக்கி, அடுத்த முறை கல் எறிவதற்கு முன், ஒரு நிமிடம் யோசியுங்கள்... ஆறாதது ரணம் மட்டுமல்ல, நீங்கள், 'ஆசிட்'டாக போல வீசும் வார்த்தைகளும் தான்!
இ - மெயில்:murugaraj2006@gmail.com
ல்லை தீக்குளிப்பு சம்பவங்களை படம் எடுத்த பத்திரிகை போட்டோகிராபர்களை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, திட்டி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
'இவர்களுக்கு மனித நேயமே இல்லையா... இவர்கள் வீட்டு பிள்ளைகள் தீயில் எரிந்தால் இப்படித்தான் படம் எடுத்துக்கொண்டு இருப்பரா...' என்றெல்லாம் காய்ச்சி எடுக்கின்றனர்.
ஒரு படி மேலே போய், 'ஊடக காட்டேரிகள்...' என்றெல்லாம் வர்ணிக்கின்றனர். இப்படி, இவர்கள் வசை பாடவும், பத்திரிகை போட்டோகிராபர்கள் எடுத்த அதே படங்களைத் தான் பயன்படுத்துகின்றனர்.
ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது, அங்கே பத்திரிகை போட்டோகிராபர்கள் மட்டுமே இருந்து, அதை தடுக்காமல் படம் பிடித்தனர் என்றால், அவர்களை சாடலாம்.
தீக்குளித்தவர்கள், தங்களை காப்பாற்ற கோரி, ஓடி வந்த மாதிரியும், அவர்களை காப்பாற்றாமல், இவர்கள், அவர்களை விரட்டி விட்டு, படம் எடுத்தது போலவும், வார்த்தை கங்குகளை வாரி இறைக்கின்றனர்.
ஆனால், உண்மையில் பல்வேறு தரப்பினர், அங்கே களத்தில் இருந்து காப்பாற்ற முற்படும் போது தானே, பத்திரிகை போட்டோகிராபர்கள் படம் பிடிக்கின்றனர்; அப்படி, படம் பிடித்ததால் தானே, அவை வெளியாகி, உங்களை சேர்கிறது!
அந்த படங்கள் தானே, இன்றைக்கு, உலகம் முழுவதும் கந்து வட்டியின் கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இல்லாவிட்டால், 'கடன் தொல்லையால் மூன்று பேர் சாவு' என, அச்சன்புதுாரில் மட்டுமே, பெட்டிச்செய்தியாக வந்திருக்கும்.
கந்து வட்டி கொடுமையை, உலகம் முழுவதும் பேசவும், அலசவும் வைக்கவும், முதல்வரை அவசர நடவடிக்கை எடுக்க துாண்டவும், கந்து வட்டியே தொழிலாக கொண்டவர்களின் அடி வயிற்றில் அமிலத்தை சுரக்கச் செய்யவும் காரணம்... இந்த படங்கள் தானே!
பத்திரிகை போட்டோகிராபர்கள் தங்கள் பணியை செய்யாவிட்டால், எப்படி படங்கள் வரும்?
இரு சக்கர வாகனம் ஒன்றில் நீங்கள் போய்க்கொண்டு இருக்கிறீர்கள் என, வைத்துக்கொள்வோம். துாரத்தில், ஒருவர் ரோட்டில் மயங்கி விழுகிறார்; அவரை நெருங்குவதற்குள், வேறு சிலர் நெருங்கி, வேண்டிய உதவிகளை செய்கின்றனர்.
அப்போது, நீங்கள், அடிபட்டவருக்கு காற்று வராமல், கூட்டமாக கூடி நின்று பேசிக்கொண்டிருப்பீர்களா அல்லது அடுத்து என்ன செய்வது என யோசித்து, '108'க்கு போன் செய்வீர்களா?
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்யும் வேலையை தான், அன்றைய, பத்திரிகை போட்டோகிராபர்கள் பலர் செய்தனர்.
சம்பவத்தின் கோரத்தை பதிவு செய்தது, சில வினாடிகள் தான்; பின், அந்தக் குழந்தைகள் மற்றும் பெண்ணின் மீது பற்றி எரியும் தீயை அணைக்க அவர்கள் உதவியது தான் அதிகம்.
தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல், எரியும் குழந்தைகள் மீதான ஆடையை நீக்கினர்; ஆம்புலன்சுக்கு போன் செய்தும் வராத நிலையில், அருகில் இருந்த போலீஸ் வேன் மூலம், சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல உதவியதே, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் தான்.
இவ்வளவு செய்தும், 'குழந்தைகள் எரியும் போது படத்தை எடுத்த குரூரர்கள் தானே நீங்கள்...' என்ற குற்றச்சாட்டை, நிதானமில்லாமல் வீசுகின்றனர்.
கடந்த, 1993-ல் சோமாலியா பஞ்சத்தின் போது, சாகப்போகும் குழந்தையை கொத்த, ஒரு கழுகு காத்திருக்கும் தருணத்தை, கெவின் கார்டர் என்ற புகைப்படக் கலைஞர் படம் எடுத்தார். அந்த படம் தான், உலகிற்கு சோமாலியாவின் பஞ்சத்தை உணர வைத்தது; கப்பல் கப்பலாக உலக நாடுகள் உணவை அனுப்பி வைக்கச் செய்தது.
'கழுகை விரட்டாமல், படம் எடுத்த நீயும் ஒரு கழுகே...' என, அந்த புகைப்படக்காரரை யாரும் வார்த்தையால் கொத்தவில்லை; உயர்ந்த, 'புலிட்சர்' விருது கொடுத்து, உலகமே கவுரவித்தது.
இங்கே, 'புலிட்சர்' விருதெல்லாம் தர வேண்டாம்; குறைந்தபட்சம், போட்டோகிராபர்களின் பணியை புரிந்து கொண்டால் போதும்.
கடற்கரையில், அகதியாய் ஒதுங்கிய, சிரியா நாட்டு சிறுவன், அயலானின் உடலைப் பார்த்த புகைப்படக்கலைஞர், அதை பதிவு செய்வதை விட்டு, 'யார் இந்த பையன்...' என, புரட்டிப் பார்த்து இருப்பாரேயானால், ஒட்டு மொத்த அகதிகளுக்கும் அந்நாடு கதவை திறந்து விட்டிருக்காது.
எரியும் போது புகைப்படம் எடுத்ததால், மனித நேயம் இல்லாமல் போனவர்கள் இல்லை இவர்கள்!
எங்களுக்கும் குடும்பம் உண்டு; குழந்தைகள் உண்டு. இது போன்ற படங்களை எடுத்து விட்டு உணவு, தண்ணீர், துாக்கம் இல்லாமல் பல நாட்கள் தவிப்பவர்கள் நாங்கள்!
கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளை படம் எடுத்து விட்டு, பைத்தியம் போல திரிந்த புகைப்படக் கலைஞர்களில் நானும் ஒருவன்.
கோவை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பானவை படமாக வராமல், செய்தியாக மட்டுமே இருந்திருந்தால், கோவைக்கு மறுமலர்ச்சி என்பதே கிடைத்திருக்காது.
மனித வெடிகுண்டுக்கு பயந்து, போலீசாரே ஓடிய போது, துணிச்சலாக நின்று படம் எடுத்திருக்கா விட்டால், ராஜிவ் ஒரு கொடூரத்திற்கு பலியானதே தெரிந்திருக்காது.
பத்திரிகை போட்டோகிராபர்களுக்கும் குடும்பம் இருக்கிறது; குழந்தைகள் இருக்கிறது; அன்பு இருக்கிறது; மற்றவர்கள் துன்பம் கண்டு துடிக்கும் மனம் இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட, நாட்டில் நடப்பதை, உள்ளது உள்ள படியே வெளிக்காட்ட, கையில் அவனது இதயமாக, கேமரா இருக்கிறது. அந்த இயந்திர இதயத்திற்கு தெரியும்... ஒவ்வொரு படத்திற்கு பின்னாலும், அவன் பட்ட அவஸ்தை களும், அனுபவித்த வலிகளும்!
ஆகவே, பத்திரிகை போட்டோகிராபர்களை நோக்கி, அடுத்த முறை கல் எறிவதற்கு முன், ஒரு நிமிடம் யோசியுங்கள்... ஆறாதது ரணம் மட்டு மல்ல, நீங்கள், 'ஆசிட்'டாக போல வீசும் வார்த்தைகளும் தான்!

-- எல்.முருகராஜ்
பத்திரிகையாளர்
murugaraj2006@gmail.com

Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
10-நவ-201704:49:37 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே முருகராஜ் அவர்களே, ஊடக காட்டேரிகள் என்பவர்கள் இல்லையென்று நீங்க என்னதான் வாதிட்டாலும் அவர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம், அதனை மறுக்க இயலாது, இன்று பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றாமல் போன சிலரை போல, பத்திரிக்கையாளர்களை நம்பி ஏரிக்கரையில் பிணமாக மிதந்த நபர்கள் வரை எல்லாரும் சொல்லுவார்கள் ஊடக காட்டேரிகள் இருக்கிறார்கள் என்று, பலகோடி ரூபாய் பணபரிவர்தனையில் ஈடுபட்டு சந்தன/யானை கொள்ளைக்காரன் ஒரு ஊடக நிறுவனர் பேச்சை நம்பித்தான் வெளியே வந்தான், அவன் காட்டில் இருந்தவரை ராஜாவாக இருந்தவன் ஊடக தொடர்பு வந்தவுடன் வீழ்ந்த கதை தான் தெரியுமே, பல பல உதாரணங்கள் சொல்லலாம் சார், ஆனால் உங்களை போன்ற சிலரும் இருப்பது தான் இன்னமும் ஊடக துறை மீது நம்பிக்கை வருவதற்கு காரணம், சீனாவில் ஊடகமும் அரசோடு சேர்ந்து நாட்டுப்பற்றோடு இருப்பதனால் தான் அவர்களால் பல விஷயங்களிலும் முன்னிலை பெற முடிந்துள்ளது, இங்கோ நிலை வேறு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X