கவர்னர் 'விசிட்' அமைச்சர் கலக்கம்| Dinamalar

இந்தியா

கவர்னர் 'விசிட்' அமைச்சர் கலக்கம்

Added : அக் 29, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி பிராந்தியத்தின் ஒவ்வொரு பகுதிக்கும், கவர்னர் கிரண்பேடி நேரில் சென்று கள ஆய்வு நடத்தி வருகிறார். மேலும், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் துாய்மை பணி, மரக்கன்று நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.இதுபோல, மற்ற பிராந்தியங்களுக்கும் செல்ல, கவர்னர் முடிவு செய்துள்ளார். முதல்கட்டமாக, காரைக்காலுக்கு, கடந்த ௨௩ம் தேதி சென்ற கவர்னர், அங்கேயே ௫ நாட்கள் முகாமிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்தார்.அடுத்ததாக, மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கும் அதிரடி விசிட் செய்ய, கவர்னர் திட்டமிட்டுள்ளார். இந்த பிராந்தியங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசு நிர்வாகம் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.கவர்னர் வருகையை நினைத்து, அமைச்சர் ஒருவர் கலக்கம் அடைந்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை