Can not deny Hindu Terror says Kamal | இந்து தீவிரவாதம் இருக்கிறது: கமல் சர்ச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து தீவிரவாதம் இருக்கிறது: கமல் சர்ச்சை

Updated : நவ 03, 2017 | Added : நவ 02, 2017 | கருத்துகள் (405)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
kamalhassan, kamal, ikamalhassan, HaasanHinduTerror, கமல்ஹாசன், கமல்,

சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து, கமல் கூறிய கருத்து, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், இந்துத்துவ சக்திகள், மெதுவாக ஊடுருவுவது பற்றிய கேள்விக்கு, கமல் அளித்த பதில்: கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு என, பல வழிகளில் பழமையை பரப்ப, சிலர் முயன்று வருகின்றனர். ஒரு தலைமுறையே, ஜாதி வித்தியாசம் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், பழமைவாதிகள், அவர்களுக்குள் புகுந்து, ஜாதி வித்தியாசங்களை போதிக்க துவங்கி உள்ளனர். இது தொடர்பாக, சினிமா கலைஞர்களையும், ஜாதி வாரியாக பிரித்து, பட்டியலிடும் வேலையையும், அவர்கள் துவக்கி விட்டனர்.

இதுவரை, வாதங்களால் செய்த விஷயங்கள், முடியாமல் போகவே, வன்முறையால் நிகழ்த்த ஆரம்பித்து விட்டனர். 'எங்கே ஓர் இந்து தீவிர வாதியை காட்டுங்கள்' என்ற சவாலை, அவர்களால் விட முடியாது. அந்த அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது.வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கையை விட, வலிமையே வெல்லும் என்ற நம்பிக்கை, காட்டுமிராண்டிகள் ஆக்கி விடும். சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக, தமிழகம் மாறும் நிலை, வெகு தொலைவில் இல்லை. இன்றைய நிலையில், கேரளா, முன்னுதாரணமாக திகழ்கிறது. இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

இந்து தீவிரவாதம்: கமல் சவால்

கமலின் கருத்துக்கு, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பா.ஜ., மேலிட செய்தித் தொடர்பாளர், நரசிம்ம ராவ் கூறியதாவது: காங்., தலைவர், சோனியா, துணைத் தலைவர், ராகுல் ஆகியோர், இந்திய மக்களை, குறிப்பாக, இந்து மதத்தினரை சிறுமைப்படுத்தி பேசும் போக்கை கடைபிடித்தனர். அதை, பார்லிமென்டில், 'இந்து தீவிரவாதம்' என பதிவு செய்து, முன்னாள் அமைச்சர்கள், சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர், கச்சிதமாக அரங்கேற்றினர்.

இப்போது, கமல் பேசுவதை பார்த்தால், அவரையும், லஷ்கர் - இ - தொய்பா நிறுவனர், ஹபீஸ் சயீத், சிதம்பரம் போன்றோரின் பட்டியலில் தாராளமாக சேர்க்கலாம். அவர், காங்கிரஸ்காரர் போலவே பேசுகிறார். இவர்கள் இப்படி பேசுவதால், பாகிஸ்தானின் கை தான் ஓங்கும். கமல், கேரள கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளார். அங்கு நடக்கும் சிவப்பு தீவிரவாதத்தை, பார்க்காதவர் போல் கண்ணை மூடி, குறுகிய கண்ணோட்டத்துடன் பேசுகிறார். இது போன்ற கீழ்தரமான அரசியல்வாதியை, தமிழக மக்கள் நிராகரிப்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர், ராகேஷ் சின்ஹா கூறும்போது, 'அரசியல் லாபத்திற்காக, இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசும் கமல், அதற்காக மன்னிப்பு கோர வேண்டும். 'அவருக்கு, அரசியலுக்கு வர ஆர்வம் இருக்கிறது. அதற்காக, அவர் தேர்ந்தெடுத்துள்ள வழி, அவருக்கு அவரே சவக்குழி வெட்டுவது போல் உள்ளது' என, தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (405)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
27-நவ-201705:01:41 IST Report Abuse
Swaminathan Chandramouli முட்டாளே , இந்து சம்பிரதாயமாக பண்டிகைகள் கொண்டாடுவது ,இறை வழிபாட்டை கடைபிடித்தல் , கலாச்சாரத்தை கடைபிடித்தல் இவைதாம் இந்து தீவிரவாதம் என்றால், இந்து அல்லாத மற்ற மதத்தவர்கள் இறை வழிபாடு செய்தல் ,அவரவர் மத கலாச்சாரத்தை கடைபிடித்தல் , பண்டிகைகளை கொண்டாடுதல் இவைகள் தீவிரவாதம் இல்லை என்று வாதம் செய்கிறாயா , நீர் என்ன கட்சி ஆரம்பித்தாலும் ஒருவரும் ஆதரிக்க மாட்டார்கள் . விரைவில் நீர் ஒரு காட்சி பொருளாக ஆகிவிடுவீர்கள் . யானை தானே தன் தலையில் மண்ணை போட்டு கொள்வது போல நீர் உன் தலையில் மண்ணை போட்டு கொள்ள போகிறீர்கள்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-நவ-201704:35:14 IST Report Abuse
meenakshisundaram ivan 'adhukku' sarippada maattaan.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
16-நவ-201702:55:29 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நம்ம ஆத்துலே பிராமின்ஸ் வீட்டுலே காயத்ரி ஜபிக்கணும்னு சொல்லுவா அதே நான் பிராமின்ஸ் வீட்டுலே சாமிகும்பிட்டுவா கண்ணு ன்னும் சொல்லு றாங்களே இப்போதும் பலரிடம் பாத்துருக்கேன் இலையில் சோறு போட்டதும் இறைவா என்று சொல்லிட்டு சாப்பிடும் நபர்கள் இருக்காங்க முஸ்லீம்களும் கிறிஸ்துவால் கூட பெயர் பண்ணிட்டுதான் சாப்பிடுவாங்க ஒரு பிடி சோற்றை காக்கைக்கும் எறும்புக்கு வழக்கம் இருக்குதே எதனால் இந்துத்வா ஏறில்லீ கமல் எல்லாரும் மனுஷாளா மற்ற ஜீவனை நேசிக்கணும் என்பதுதான் அர்த்தம் , பாலி ஜாவா பீஜி பல கிழக்காசியாலே இருக்கும் ஜனங்கள் தம்மால் ஹிந்து என்று பெருமையா சொல்றாங்களே எதனால் அவா அப்படி சொல்லுன்னு பிஜேபி காரணாப்போயிட்டு சொன்னாங்க அவாள்ளாம் பிரும்ம விஷ்ணு சிவனை தோழராலே கோயில்களே இருக்கே நீங்கல்லாம் சினிமாலே நடிக்க லவ் டுயட் பாடவே போறீங்க ஆனால் நாங்கல்லாம் அங்கே இருக்கும் நம்மகலாச்சாரத்தை ரசிக்கவே போகிறோம் , உனக்கு நம்பிக்கை இல்லேன்னா அது உன்வரையிலேதான் புரிஞ்சுக்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X