சென்னையை மீண்டும் மிரட்டுது மழை: அமைச்சர்கள் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையை மீண்டும் மிரட்டுது மழை: அமைச்சர்கள் ஆலோசனை

Updated : நவ 02, 2017 | Added : நவ 02, 2017 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை; சென்னையை கன மழை மீண்டும் மிரட்டி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் சென்னையில் மழை

மிரட்டுது மழை: அமைச்சர்கள் ஆலோசனை


சென்னையில் இன்று மீண்டும் மழை மிரட்டியது. சென்னையில் ஸ்டெர்லிங்சாலை மவுண்ட், பூந்தமல்லி ,நியூ ஆவடி சாலை, கீழபாக்கம் தோட்டம் ஆழ்வார் பேட்டை டிடிகே சாலை, சென்டரல், அடையாறு எம்.ஜி, சாலை ஓ.எம்.ஆர்.,சாலைகளில் பலத்த மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுளள் மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

அமைச்சர்கள் ஆலோசனை

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு களம் இறங்கியுள்ளது.இது தொடர்பாக இன்று இரவில் மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஆலோசனைகூட்டத்தில் அமைச்சர் வேலுமணி, ஜெயக்குமார் , உதயகுமா், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்,காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-நவ-201708:26:15 IST Report Abuse
Srinivasan Kannaiya நிரந்தரமாக ஏற்பாடுகள் செய்து இருந்தால் இது எல்லாம் தேவை இல்லையே...
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
03-நவ-201707:51:58 IST Report Abuse
Narayanan Muthu என்ன மாதிரி உதவி திட்டத்தில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்றா?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-நவ-201704:25:03 IST Report Abuse
D.Ambujavalli நிவாரணம் எத்தனை கோடி கேட்கலாம் எவரெவருக்கு எந்த விகிதாசாரம் , எதிர்க்கட்சிக்காரன் 'வாயடைக்க' எவ்வளவு, அப்பப்பா எத்தனை ஆலோசனை செய்ய வேண்டியிருக்கிறது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X