chennai rain | சென்னையில் மழை நேரத்து ரசனை...| Dinamalar

சென்னையில் மழை நேரத்து ரசனை...

Updated : நவ 03, 2017 | Added : நவ 03, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னையில் மழை நேரத்து ரசனை...


சென்னையில் மழை பெய்து வருகிறது
கடந்த நவம்பர் மாத மழையை நினைத்து ஒரு பக்கம் சகலரும் பயந்து கொண்டு இருக்கின்றனர்.


பெய்துகொண்டு இருக்கும் மழையை வேண்டாம் என்று சொல்ல முடியுமா?அல்லது பெய்தது போதும் என ஆணையிட முடியுமா?
இரண்டு காரியங்கள் செய்யலாம் ஒன்று மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் தேவை அறிந்து உதவுவது,இரண்டாவது மழையை ரசிப்பது


இந்த இரண்டாவது விஷயத்தில் சென்னைவாசிகளின் ரசனையே தனிதான்.

சென்னை மெரினா கடற்கரை மணல்பரப்பிலும் சர்வீஸ் ரோட்டிலும் கடல் போல தேங்கியுள்ள மழை நீரில் பைக் ரேஸ் விடுவது, செல்பி எடுப்பது, நீந்துவது, குழந்தைகளுடன் குதுாகலிப்பது என அமர்க்களம் செய்துவருகின்றனர்.


சங்கடப்படுவதா? சந்தோஷப்படுவதா? என்பதில் இரண்டாவதுதானே எப்போதுமே வரவேற்கப்படும்.
-எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை