chennai rain | மழை விட்டுரும்னு சொன்னாங்களே...| Dinamalar

மழை விட்டுரும்னு சொன்னாங்களே...

Updated : நவ 06, 2017 | Added : நவ 06, 2017 | கருத்துகள் (1)
Advertisement


மழை விட்டுரும்னு சொன்னாங்களே...

சென்னையும் மழையும் பிரிக்கமுடியாதவை போலாகிவிட்டது.
ஆறாம் தேதிக்கு மேல் மழை இருக்காது என்ற வானிலை அறிவிப்புகளை அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது.

காலேஜ் பசங்க எப்படியும் சமாளிச்சுக்குவாங்க பள்ளிக்கூடத்து பிள்ளைங்கதான் பாவம் என்று எண்ணி தொடர்ந்து ஆறாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு. உண்மையில் பெற்றோர்கள்தான் பாவம், பிள்ளைகளை வீட்டில் வைத்து சமாளிக்கமுடியாமல் சிரமப்படுகிறார்கள்.
எளியவர்களின் ஒரே பொழுது போக்கு சென்னை மெரினாதான் அது எப்படி இருந்தாலும் நாங்க வருவோம் என்று வழக்கம் போல மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

அப்படி வருபவர்கள் கடல் நீர் கறுப்பாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர் அதில் செல்பியும் எடுத்துக்கொள்கின்றனர்.நீண்ட காலமாக கால்வாய்களில் தேங்கிக்கிடந்த கழிவு நீர் எல்லாம் மழை நீரோடு கலந்து கடலுக்குள் வருகிறது, அப்படி வரும் தண்ணீரின் அடர்த்தி கடல் நீரின் அடர்த்தியைவிட குறைவு என்பதால் கழிவு நீர் கறுப்பு நிறத்தில் கடலில் மிதக்கிறது,மழை விட்டு சில நாட்களில் சரியாகிவிடும் என்று தொழில்நுட்ப ரீதியாக விளக்கம் சொல்லப்பட்டாலும் கடலின் நிறம் நீல நிறம் என்று இன்னும் சில நாட்களுக்கு சொல்லமுடியாது, காலையும் நனைக்கமுடியாது.
பாராட்ட வேண்டிய விஷயம் மாநகராட்சி ஊழியர்கள் சுறுசுறுப்பாக பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களும் மனிதர்கள்தான் மழையில் நனைந்தால் இவர்களுக்கும் காய்ச்சல் வரும் என்பதை உணர்ந்து யாரே ஒரு அதிகாரி அனைவருக்கும் 'ரெயின் கோட்' வாங்கிக்கொடுத்துள்ளார், அவரையும் பாராட்டவேண்டும்.இப்படி எல்லாம் இரக்கம் காட்ட ஆளில்லாதவர்கள் மூடிய ராட்டினத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கி உட்கார்ந்திருக்கின்றனர்.


குடை,ரெயின் கோட் நன்றாக விற்கிறது. கால் டாக்சி ஒட்டுனர்களும் ஆட்டோக்காரர்களும் 'டிமாண்டில்' இருக்கிறார்கள் ,டீ கடைகளில் கூட்டம் அப்புகிறது,மெர்சல், மேயாத மான் ஒடும் தியேட்டர்கள் ஹவுஸ்புல் காட்டுகின்றன.
பிரதமர் வான் வழியாக வந்து போனாலும் நீங்கள் ரோட்டைக்கடப்பது சிரமம்தான் என்கிறது போக்குவரத்து காவல்துறை.

இப்படியாக சென்னையின் மழை நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.
எல்.முருகராஜ்

-murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
09-நவ-201718:07:35 IST Report Abuse
SENTHIL NATHAN மழையை பற்றி ஒரு பாரதியார் கவிதை உள்ளது... படித்து பாருங்கள் .... இன்றைய நிலைக்கும் பொருந்தி வருகிறது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை