தனியார் பெட்டகத்தில் பதுக்கும் கறுப்பு பண முதலைகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தனியார் பெட்டகத்தில் பதுக்கும் கறுப்பு பண முதலைகள்

Added : நவ 08, 2017 | கருத்துகள் (17)
Advertisement
தனியார் பாதுகாப்பு பெட்டகம், Private security Locker, கறுப்பு பணம், black money,வருமான வரித்துறை, Income Tax department,வங்கி லாக்கர்,  bank locker, தொழிலதிபர்கள், industrialists,Business people,

புதுடில்லி: தனியார் பாதுகாப்பு பெட்டகங்களில், கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பாதுகாப்பு அதிகம்

பல தொழிலதிபர்கள் கணக்கில் வராத பணம், நகைகள், விலை உயர்ந்த கற்களை பாதுகாப்பாக வைப்பதற்கு தனியார் பாதுகாப்பு பெட்டகத்தை பயன்படுத்துகின்றனர். வீடு மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பாக இருக்காது. தனியார் பெட்டகங்களில் வைப்பது எளிதாக இருப்பதால், தனியார் பாதுகாப்பு பெட்டகங்களை தொழிலதிபர்கள் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பும் அதிகம். இவற்றை பல உள்ளூர் தொழிலதிபர்கள் நடத்தி வருகின்றனர். அவை வணிக வளாகங்கள் மத்தியில் அமைந்துள்ளது. மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் தற்போது அதிகரித்து வருகிறது.


சோதனை


சில நாட்களுக்கு முன், கார் உற்பத்தி நிறுவனம் தொடர்புடைய தொழிலதிபர் ஒருவருக்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவலின் பேரில், தனியார் பாதுகாப்பு பெட்டகம் குறித்து தகவல் கிடைத்தது. அதை திறந்து பார்த்த போது, கிலோ கணக்கில் தங்கம், வைரம் மற்றும் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஊழியர் ஒருவரின் பெயரில் இந்த பெட்டகம் இருந்ததால், அதுவரை யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
இதேபோல் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த பைனான்சியர் ஒருவரது பெயரில் இருந்த பெட்டகத்தை சோதனை நடத்தியதில் பல கட்டுகள் ரூ.500 நோட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3.57 கோடி.
தெற்கு டில்லியில் உள்ள சாகேட் பகுதியில் உள்ள பெட்டகத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் கோடிக் கணக்கில் பணம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


விசாரணை

இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், வங்கி லாக்கர்களில் பணம் வைப்பது சட்ட விரோதம். ஆனால், தனியார் பாதுகாப்பு பெட்டகங்களில் அதிகளவு வசதிகள் தருகின்றன. இங்கு பணம் வைத்துள்ளவர்கள் பற்றிய விவரம் யாருக்கும் கிடைப்பதும் கடினம். எனினும், அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சட்டவிரோதமாக பணம் பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பெட்டகம் ஒன்றிற்கு அடிக்கடி வருவபர்களை கண்காணிக்க, அங்கு அதிகாரி ஒருவருக்கு, வேறு பெயரில் கணக்கு துவக்கப்பட்டது. அங்கு அவர் தினமும் சென்று, அடிக்கடி வருபவர்களை கண்காணித்தார். அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் நண்பராகி, அங்கு பணம் வைத்துள்ளவர்கள் குறித்த தகவலை பெற்றார். இதனை வைத்து அங்கு சட்ட விரோதமாக பணம் பதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
08-நவ-201721:07:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கறுப்புப் பணத்தை தங்கமாக மாற்ற தங்கநாற்கர சாலை போட்டு கொடுத்த மோசடி அரசு, இதை பற்றி கவலைப்படுதாம். நம்பணுமாம்..
Rate this:
Share this comment
Cancel
Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
08-நவ-201720:23:43 IST Report Abuse
Modikumar இந்தியன்ஸ் ரொம்ப ஷார்ப்பான ஆளுங்க, ஒரு தில்லுமுல்லு நடக்காம சட்டம் போட்டு தடுத்தா யோசிச்சு ரொம்ப ட்ரிக்கியா வேறொரு தில்லு முல்லை கண்டு புடிச்சிடுவாங்க. முக்கியமா தமிழ் ஆட்கள் கில்லாடிங்க. அதனால் தான் வெளிநாடுகளில் காவல் துறை விசாரணை அதிகாரிகளை இந்தியனா முக்கியமா தமிழனா பாத்து அமர்த்துவாங்க. தனியார் பெட்டகத்தில் பதுக்கும் கறுப்பு பண முதலைகள் பிடிக்க தனியார் பாது காப்பு பெட்டக நிறுவனங்களை commercial ளாக ஆரம்பிக்க வேண்டுமானால் வருமான வரி துறை மற்றும் reserve வங்கியிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற ஒரு புதிய சட்டத்தை போட வேண்டியது தான்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-நவ-201719:06:44 IST Report Abuse
Loganathan Kuttuva வாங்கி லாக்க்கரில் நாம் என்ன வைத்துக்கொள்கிறோம் என்று வாங்கி அதிகாரிகள் பார்ப்பதில்லை.சில மாநிலங்களில் லாக்கர்கள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டால் லாக்கரில் வைத்திருந்த பணம் நகைகளை வங்கியில் இருந்து பெற முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Orion - Mount Shasta, California ,யூ.எஸ்.ஏ
08-நவ-201718:40:37 IST Report Abuse
Orion பாரத ஜன நாயகம் - கால காலமாக - பணக்காரர்களின் சரணாலயம் - மன்னர் ஆட்சிகள் முதல் கொண்டு - தற்போது - பணக்காரர்கள் வெளி நாடு பண முதலீடு பல்வேறு வகைகளில் - போதா குறைக்கு நடிக்கும் அரிசி வியாபாரிகள் மற்றும் ப்ரோக்கர்கள் - பாவம் இந்திய மக்கள் - என்ன கூவியும் நடக்க போவது ஒன்றுமில்லை - சாப்பிட்டோமா - நமது அன்றாட வாழ்க்கையை கவனித்தோமா - தூங்கினோமா - அருகில் நில நடுக்க கோடுகள் வந்தால் கூட எந்த சலனமும் இல்லாமல் வாழ கற்று கொள்ளுங்கள் - அது தான் சரியான வாழும் கலை - பாரத தாய்க்கு - ஜே ஜே -
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
08-நவ-201717:28:18 IST Report Abuse
SENTHIL NATHAN அறுபது வருடங்களாக சட்டங்கள் மீறுவதற்கு என்றே போடப்பட்டுள்ளன. ஊழல்கள் திட்டமிட்டு நடை பெற்றுள்ளன. தவறு என்று தெரிந்தே செய்த்துள்ளார்கள். இவற்றை சுத்தம் செய்ய பத்து ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறதே..??
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-நவ-201717:26:15 IST Report Abuse
தமிழ்வேல் அவனுவோளுக்கு எப்படி இவ்வளவு நோட்டுங்க கிடைக்குது ?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
08-நவ-201721:05:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்காவி டிரெஸ் போட்டு ஜெய்ஹிந்து சொன்னால் கிடைக்கும்....
Rate this:
Share this comment
Cancel
08-நவ-201714:47:25 IST Report Abuse
சரவணன்,சென்னை நல்லது, அப்படியே பேங்க் லாக்கர்களையும் சோதனை செய்தால்...
Rate this:
Share this comment
Cancel
V.Ravichandran - chennai .,இந்தியா
08-நவ-201714:45:33 IST Report Abuse
V.Ravichandran வருது பினாமி சொத்து எல்லாம் , மதுரை அரசு ஊழியருக்கு 69 கோடி சொத்து லே .
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
08-நவ-201714:43:05 IST Report Abuse
krishnan ஒரு வருசத்துக்கு முன்னையே ஒழித்து விட்டார்களாய் இன்னுமா இருக்கு ?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
08-நவ-201714:33:20 IST Report Abuse
K.Sugavanam தனியார் பெட்டகத்தில் ஒரு அரசியல்வாதியும் எதையும் வைக்கவில்லையா?அதை பதியும் ஆராயுங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை