சசிகலாவின் கணவர், குடும்பத்தினர் வீடுகளில் ஐடி ரெய்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவின் கணவர், குடும்பத்தினர் வீடுகளில் ஐடி ரெய்டு

Updated : நவ 09, 2017 | Added : நவ 09, 2017 | கருத்துகள் (126)
Advertisement

சென்னை : சசிகலா, தினகரன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று (நவ.,09) காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தினகரன், திவாகரன், இளவரசியின் மகள் வீடு, இளவரசியின் மகன் நடத்தி வரும் நிறுவனம், தஞ்சையில் உள்ள தினகரனின் மாமனார் சுந்தரவதனத்தின் வீடு, மன்னார்குடியில் உள்ள திவாகரனின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தஞ்சையில் உள்ள மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையை துவக்கி உள்ளனர். திருச்சியில் உள்ள இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள தினகரனின் வீடு, சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான மால்கள் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சசிகலாவின் ஆதரவாளரான மர வியாபாரி ஒருவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

தஞ்சை அருளானந்தநகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீ்டடிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாகவும், வரி ஏய்ப்பு புகார் காரணமாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காலை 6.30 மணி முதல் நடந்து வரும் இந்த சோதனையில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-நவ-201723:30:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஜெயா என்ற ஒரு பேரை வைத்து தான் எல்லா களவாணிகளும் காலாட்ஷேபம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இப்போ அந்த பேரையே நாஸ்தி பண்ணிட்டு எப்படி பஜனை பண்ணுவாங்கன்னு தெரியலே.. எப்படியோ மொத்தமா நாசமா போனா நல்லது.
Rate this:
Share this comment
Cancel
bala - ,யூ.எஸ்.ஏ
09-நவ-201723:07:14 IST Report Abuse
bala சூப்பர் மோடிஜி அப்படியே, திமுக பக்கம் ஒரு ரெய்டு விட்ட நல்லா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ram -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201722:22:32 IST Report Abuse
Ram ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்கம்டேக்ஸ் காரங்க இந்த ஆட்டம் ளோட விட்டிருப்பாரா. பல ஆண்டுகளாக தமது பினாமிகளை எக்ஸ்மிரஸ் சுருண்ட விட்டு காத்தவரின் அஹால மரணத்தால் பினாமிகள் ஆட்டம் காண்கின்றனர்
Rate this:
Share this comment
rajan - kerala,இந்தியா
14-டிச-201719:58:24 IST Report Abuse
rajanஆமா, என்னவோ ஒரு கொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
09-நவ-201722:11:52 IST Report Abuse
Amma_Priyan ரெய்டு நடக்குது அதுக்கு பரோல் தேவை என்று கேட்டாலும் கொடுக்கமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
dinesh -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201721:45:39 IST Report Abuse
dinesh இவர்கள் சொத்துக்களை ஒரே நேரத்தில் சோதனை செய்யவே 200 கார்கள் தேவை படுகிறது... இவர்கள் சொத்துக்களை கணக்கிட்டால் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 1 இடத்தில இருப்பார்கள் போலே ..அனைத்தும் மக்களிடம் கொள்ளை அடித்தது ..இன்னும் இவர்கள் கொள்ளை அடிக்கும் பண வெறி தீரவில்லை. .மக்களை முட்டாள்கள் என நினைத்து விடார்களா ..
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-நவ-201719:50:34 IST Report Abuse
Sanny இந்த ரைடு தேவை அற்றது, MGR இறந்தவுடன் ரைடு நடந்ததுபோல், ஜெயலலிதா இறந்த உடன் ரைடு மன்னார்குடி முதல் போயஸ் கார்டன் வரை நடாத்தி இருக்கணும். இது நடக்குமென்று தான் சசிகலா அப்போலோவில் ஜெயா இருக்கும்போதே இரவு, இரவாக வெளியில் போய் இந்த பணம், நகை எல்லாம் சொந்தக்காரங்களின் பெயரில் போட்டுவிட்டாங்க, இப்போ அவங்க அதை திருப்பி கொடுக்க ஆடம் புடிக்கிறாங்க, இந்த ரைடால் ஒன்னும் ஆகாது. இதுதான் உண்மை.
Rate this:
Share this comment
Basic Instinct - Coimbatore,இந்தியா
09-நவ-201722:30:24 IST Report Abuse
Basic Instinctஇந்த ரைட், கட்சியில் உள்ள/ சேர விருப்புபவர்களுக்கு, புத்துணர்ச்சியை அளிக்கும்,இனி நம்பிக்கையாக கட்சியில் சேரலாம். கட்சி நடத்த பணம் இருக்கிறது, தொண்டர்களுக்கு கவலை இல்லை.... தொண்டர்களிடம் காசு வாங்கி கட்சி நடத்துவார்களோ என்ற பயமும் வேண்டாம்.......
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
09-நவ-201719:27:05 IST Report Abuse
krishnan மோடியின் விளையாட்டு மேலும் மேலும் வளர்ந்து கொண்டுதான் போகும்.
Rate this:
Share this comment
Cancel
MalaiArasan -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201718:39:49 IST Report Abuse
MalaiArasan Raid only. No action against culprits.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
09-நவ-201718:14:50 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM சசி குடும்பம் மட்டும் தான் ஊழல் குடும்பம்... இவர்களிடம் மட்டும் தான் கறுப்புப்பணம் இருந்திருக்கிறது ...அப்புறம் என்ன ...... நோட்டை முடக்கினீர்கள்? ... சசி குடும்பத்தை மட்டும் முடக்கியிருக்கலாமே .மக்களாவது தப்பித்து இருப்பார்களே .....சசி குடும்பம் தவிர ஷா, ஜெட்லீ, கட்கரி, எடியூரப்பா, EPS , OPS , விஜயபாஸ்கர், ராஜே, முண்டே, ராமன்சிங், சவுகான் , ரெட்டி சகோதரர்கள், அம்பானிகள், அடானிகள் இப்படி எல்லாரும் பற்றரை மாற்று தங்கங்கள்... இவர்களிடம் கருப்பு பணம் எல்லாம் இல்லவே இல்லை ... இன்னும் ஒரு படி மேலே போயி சொல்லனும்ம்னா, பாஜக தலைவர்கள் எல்லாம் குடிசை போட்டு தான் வாழ்ந்து வருகிறார்கள்... [ நடத்துங்க... மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளார்கள் ]
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
09-நவ-201718:08:48 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM மகா ஜனங்களே , இந்தியாவிலேயே ஊழல்வாதிகள் சசி, மாயா, ராப்ரி தேவி, மற்றும் மம்தா ஆகியோர் தான்... நோட்டு முடக்கி ஒரு வருடம் ஆன பின்பு அவர்கள் மீது நடவடிக்கை ... 30000 பேர் அதிகம் ஊழல் செய்துள்ளதாக புள்ளிவிவரம் சொல்கிறது...ஆனா, ஒரு வருடம் கழித்து , இதுவரை சசி குடும்பம் மட்டும் தான் சிக்கியுள்ளது...மீதி 29999 பேரை பிடிக்க பாஜக கணக்கு படி இன்னும் 29999 வருடம் பிடிக்கும் போல... பக்தாஸ்கள் கூவும் ஒவ்வொருவரா பிடிப்பார்கள் என்று... நல்லவன் போல வேஷம் போடும் கபட தாரிகள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை