கருணாநிதி - மோடி சந்திப்பு : பின்னணியில் உளவுத்துறை ரிப்போர்ட்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி - மோடி சந்திப்பு : பின்னணியில் உளவுத்துறை ரிப்போர்ட்

Added : நவ 09, 2017 | கருத்துகள் (129)
Advertisement
பிரதமர் மோடி, PM Modi,கருணாநிதி, Karunanidhi,பா.ஜ., BJP, உளவுத்துறை ரிப்போர்ட்,intelligence report,  தி.மு.க,DMK, கருத்துக் கணிப்பு , opinion polls,  ஜெயலலிதா மறைவு,Jayalalitha death, அ.தி.மு.க, ADMK,  ஸ்டாலின், Stalin, பழனிச்சாமி , Palanisamy,

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால், உடல்நிலை ஓரளவுக்கு தேறி வரும் நிலையில், கருணாநிதி இல்லம் தேடி வந்து, பிரதமர் மோடி சந்தித்து சென்றிருக்கிறார். அது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதமர் மோடி, கருணாநிதியை சந்தித்ததன் பின்னணி முழுக்க முழுக்க அரசியல் தான் என்று, பல்வேறு தரப்பிலும் சொல்கின்றனர்.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன், மத்திய உளவுத்துறை அதிகாரிகள், தமிழகத்தில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். அந்த ரிப்போர்ட்டுக்குப் பின் தான், பா.ஜ., தலைமை, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் அரசியலை திடுமென மாற்றத் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, பா.ஜ., டில்லி தலைவர் ஒருவர் கூறியதாவது:
மத்திய பா.ஜ., தலைமையைப் பொறுத்த வரை, தமிழகத்திலும் எப்படியாவது கட்சியை காலூன்ற வைத்துவிட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், திராவிட பூமியான தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டி விட்டோ; அப்புறப்படுத்தி விட்டோ ஆட்சி அமைப்பது, கட்சியை வேகமாக வளர்ப்பது என்பது முடியாத காரியமாக இருக்கிறது.

திராவிட இயக்கங்களில் ஒன்றோடு பா.ஜ., தொடர்ந்து கூட்டணி வைத்து வந்தது. கடந்த பார்லிமெண்ட் தேர்தலின் போது அதை மாற்ற முயற்சி எடுக்கப்பட்டது. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. படுதோல்வி. மொத்த கூட்டணியுமே இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும், கட்சி பலத்தைக் கடந்து சொந்த செல்வாக்கு உள்ள இருவர் மட்டுமே கூட்டணி சார்பில் வெற்றி பெற்றனர்.

இதனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், தத்தளித்து நிற்கும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம், அக்கட்சியினரின் ஓட்டுக்களையும் பா.ஜ., பக்கம் திருப்பி, கட்சியை பலப்படுத்துவதோடு, அக்கட்சியோடு எதிர்காலத்தில் கூட்டணி அமைத்துப் போட்டி போட்டு, தமிழகத்திலும் பா.ஜ., கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தலாம் என முடிவெடுத்து, அதன்படி, அ.தி.மு.க., ஆட்சிக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது.

ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்றாக, பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசுக்கு, நாளுக்கு நாள் இறங்குமுகமாகவே உள்ளது. செயலற்ற, பினாமி அரசு என்று, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவதை நிஜமாக்குவது போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஊழல் மலிந்து விட்டதால், இந்த ஆட்சி எப்போது வீட்டுக்கு செல்லும் என்று மக்கள் ஏங்கத் துவங்கி விட்டனர்.


ரகசிய சர்வே:ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் நிலவும் பல்வேறு குழப்பங்கள், அக்கட்சியின் மீது மக்கள் வைத்திருந்த பிடிப்பை தளர்த்தி விட்டது. இதையெல்லாம் அப்பட்டமாக அறிய வேண்டும் என்று விரும்பிய பா.ஜ., தரப்பு, சமீபத்தில் மத்திய உளவுத் துறை மூலம், ரகசிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

அதில், தமிழக அரசு செயல்பாட்டுக்கு 86 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம், இப்போது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தால், தி.மு.க.,வுக்கு 56 சதவீதம் பேர், ஓட்டளிப்பர் என்றும் அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதையடுத்தே, அ.தி.மு.க.,வை ஆதரிப்பதை விட்டு விட்டு, தி.மு.க., பக்கம் அரசியல் ரீதியிலான பார்வையை செலுத்தலாம் என, பா.ஜ., முடிவெடுத்தது. அதற்காகவே, கருணாநிதியை, பிரதமர் மோடி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அடுத்தடுத்த கட்டங்களில், பா.ஜ.,வும்; தி.மு.க.,வும் நெருக்கமாகவே செல்லும். இதற்கிடையில், சமீபத்தில் டில்லி சென்ற தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமர் மோடி கேட்டுள்ளார்.

தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் மெலிந்துள்ளது. மத்திய அரசு மற்றும் பா.ஜ., தலைமையின் விருப்பப்படி, தமிழக பா.ஜ.,வும்; தமிழக அரசு செயல்பாடுகளை பெரிய அளவில் விமர்சிப்பதில்லை. ஆனால், அந்த அணுகுமுறையால், பா.ஜ.,வுக்கும் மக்கள் மத்தியில் கெட்டப் பெயரே உள்ளது என்று வெளிப்படையாக சொல்லி விட்டார். இதையெல்லாம் வைத்துத்தான், பிரதமர் மோடி, இத்தனை நாட்களும் இல்லாமல், திடுமென கருணாநிதியை சந்தித்து சென்றது.இவ்வாறு அந்த தலைவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (129)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Babu - Trivandrum,இந்தியா
15-நவ-201709:54:02 IST Report Abuse
Ram Babu திமுக பிஜேபி உடன் கூட்டு சேர்ந்தால் இருவருக்கும் நல்லது .
Rate this:
Share this comment
Gopalan PS - Chennai,இந்தியா
15-நவ-201712:04:04 IST Report Abuse
Gopalan PSமண்ணாங்கட்டி. தி மு க பி ஜே பி யுடன் சேர்ந்தால் தி மு க வுக்கு விழும் ஓட்டும் விழாது....
Rate this:
Share this comment
Cancel
G.Elangovan - NewDelhi,இந்தியா
13-நவ-201711:30:01 IST Report Abuse
G.Elangovan தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி என்றொரு அரசியல் கட்சி இருப்பதையும் அவர்கள் சென்ற சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்தில் வந்தார்கள் என்பதையும் ஏன் இருட்டடிப்பு செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
09-நவ-201721:49:41 IST Report Abuse
Amma_Priyan வந்தது 2 ஜி ரிப்போர்ட் ரெடி என்பதை சூசகமாக உணர்த்தவே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X