ஒரே ஆண்டில் அபார வளர்ச்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே ஆண்டில் அபார வளர்ச்சி

Added : நவ 10, 2017 | கருத்துகள் (97)
Advertisement
தினகரன், Dinakaran,  அ.தி.மு.க, AIADMK,  ஜெயலலிதா ,Jayalalithaa,  சசிகலா குடும்பம், Sasikala Family, சென்னை போயஸ் கார்டன், Chennai Poes Garden, சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு, illegal foreign investment, அமலாக்கத் துறை,enforcement department, சசிகலா, Sasikala,

கடந்த 1989க்கு முன் எங்கு சென்றாலும் கால்நடையாக நடந்து கொண்டிருந்த தினகரன் 1991ல் முதன்முறையாக ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பின் சிங்கப்பூரில் முதலீடு செய்யும் அளவுக்கு அபார வளர்ச்சி பெற்றுள்ளார்.

இது குறித்து சசிகலா குடும்ப வட்டாரங்கள் கூறியதாவது: சசிகலாவின் மூத்த சகோதரி வனிதாமணி; இவரது கணவர் திருத்துறைப்பூண்டி விவேகானந்தன்; இவர்களின் மூத்த மகன் தினகரன். தந்தை விவேகானந்தன் ஊரக வளர்ச்சி துறையில் அதிகாரியாக திருச்சி, தஞ்சாவூர், மதுரை போன்ற ஊர்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை, தினகரன் திருமணம் செய்துள்ளார். படித்து முடித்து தன் சின்னம்மா சசிகலா, மாமன் திவாகரன் நடத்திய 'வீடியோ' கடையில் சேர்ந்தார். 'வீடியோ கேசட், டெக்' போன்றவற்றை சிங்கப்பூரில் இருந்து வாங்கி விற்கும் தொழில் செய்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சசிகலா நுழைந்ததும் அவரின் தம்பி திவாகரனையும், சகோதரி மகன் தினகரனையும் அழைத்து கொண்டார். ஜெ., வெளியூர் செல்லும் போது அவருக்கு பாதுகாவலராக இருவரும் சென்று வந்தனர்; போயஸ் கார்டன் வீட்டிலேயே தங்கினர். அப்போது தினகரன் சாதாரணமாக தான் இருந்தார்; எங்கு போனாலும் நடந்து தான் செல்வார். அந்தளவுக்கு தான் அவரது பொருளாதாரம் இருந்தது. 1991ல், ஜெயலலிதா ஆட்சி அமைந்த பின் திவாகரன் மற்றும் தினகரனின் வசதி வாய்ப்புகள் பெருக துவங்கின. ஆடம்பர பங்களா, சொகுசு கார் என, சசிகலா குடும்பத்தினர், மிக வேகமாக, பணக்கார குடும்பமாக மாறினர்.

தங்கள் குடும்பத்தில், பொறியியல் பட்டம் படித்திருந்ததால், தினகரனை, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில், தொழில் செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும், சசிகலா பயன்படுத்தினார். சிங்கப்பூரில் குடியுரிமை பெறும் அளவுக்கு, அவரது பொருளாதார வளர்ச்சி பெருகியது. 1998ல், சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு காரணமாக, அமலாக்கத் துறையால், தினகரனுக்கு, 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; பின், அது, 28 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.

வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக, அரசியலில் நுழைந்தார். 1999 லோக்சபா தேர்தலில், தேனியில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வில், பொருளாளர், ஜெ., பேரவை செயலர் பதவிகள் வகித்தார். 2004 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததால், ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில், ஜெ., சசியுடன், ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். 2011ல், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். ஜெ., மறைவுக்கு பின், மீண்டும் அரசியலுக்குள் நுழைந்துள்ளார், என தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MohanaSundaram - Erode,இந்தியா
15-நவ-201714:00:43 IST Report Abuse
MohanaSundaram ராவண்ணன் குடும்பம் - ( சசிகலா குடும்பம் ) வருமான வரி ரைடில் தப்பியது . காரணம் என்ன ?????
Rate this:
Share this comment
Cancel
murugu - paris,பிரான்ஸ்
15-நவ-201712:20:16 IST Report Abuse
murugu (ஒரே ஆண்டில் அபார வளர்ச்சி) யாரை சொல்கிறது ?அமித் ஷா வின் மகனையோ ???
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
14-நவ-201709:15:37 IST Report Abuse
ரத்தினம் ஒருவரது எண்ணம் போல் தான் அவரது வார்த்தை வெளிப்படும். கொள்ளைக்காரர்களையே பார்த்து, ஆதரித்தவர்களுக்கு, அந்த புத்தி தான் வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X