'தெறி'க்க விடுவேன் : அசத்தம் அதுல்யா| Dinamalar

'தெறி'க்க விடுவேன் : அசத்தம் அதுல்யா

Added : நவ 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'தெறி'க்க விடுவேன் : அசத்தம் அதுல்யா

கண்களில் தெறிக்கும் மின்னல்... ஐம்பொன்னில் செதுக்கிய தேகம்... இன்றைய இளசுகளின் இதய துடிப்பை 'காதல் கண்கட்டுதே' மூலம் கட்டிப்போட்டு, 'ஏமாலி'யில் தடம் பதித்து வரும் அதுல்யா தினமலர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக மனம் திறந்த நிமிடங்கள் இதோ...
* 'அதுல்யா' என்ற பெயரில் கேரள வாடை வீசுகிறதே?அட...நான் தமிழ் பொண்ணுங்க! சொந்த ஊர் கோவை. பிறந்தது வளர்ந்தது படித்தது அங்கு தாங்க. உண்மையான பெயர் திவ்யா. சினிமாவிற்காக அதுல்யான்னு மாத்திட்டாங்க. அவ்வளவு தான்.
* சினிமாத்துறைக்கு வந்தது?சென்னையில் எம்.டெக்., படிக்க சென்றேன். நண்பர்கள் சேர்ந்து எடுத்த படம் 'காதல் கண் கட்டுதே'. அவர்கள் அன்பு தொல்லையால் படிக்க சென்ற இடத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது.
* பொழுதுபோக்கு?பிடித்த பாடல்களை கேட்பது, முணுமுணுப்பது. இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவதும் பிடிக்கும்.
* பிடித்த இயக்குனர்?
ஷங்கர், மணிரத்னம் என நீண்ட லிஸ்ட். இளம் இயக்குனர்கள் திறமையாக செயல்படுகிறார்கள். * நடிக்க விரும்பும் கதாபாத்திரம்? 'மொழி' படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரம் ரொம்ப பிடித்தது. அதுபோன்ற கதாபாத்திரங்கள் கிடைத்தால் தெறிக்க விடுவேன். * அடுத்த வாய்ப்பு?'ஏமாலி' படத்தில் சமுத்திரக்கனியுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். இன்னும் இரு படங்கள் கையில் உள்ளன. எல்லாப்படங்களிலும் நடிக்க வேண்டும் என ஆசைப்படக்கூடாது; நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறேன். * ஏமாலி டீசர் மிகவும் பேசப்படுகிறதே?படம் வெளியானதும் அதற்கான விடை தெரியும். நல்லாயிருக்குன்னு நிச்சயம் ரசிகர்கள் கூறுவர். பார்க்கத் தானே போறீங்க.
* கிளாமர்?கிளாமர் பண்ணினால் சினிமாவிலிருந்து விரைவிலேயே காணாமல் போய் விடுவோம். மலையாள படங்களில் கதைக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். அதனால் தான் அங்கு அதிக படங்கள் வெற்றி பெறுகின்றன. அதை தான் நானும் பின்பற்றுகிறேன்.
* காதல்? கல்லுாரியில் படிக்கும் போதும் சரி, இப்போது நடிக்கும் போதும், விருப்பங்கள் தெரிவித்தவர்கள் உண்டு. ஆனால், அதை பற்றி நினைக்க கூட நேரமில்லை.
* லட்சியம்?சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்க வேண்டும். எதையும் வித்தியாசமாக செய்தால் வெற்றி நிச்சயம்.இவரை வாழ்த்த : divitweety21@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X