91 வயதிலும் சளைக்காத எழுத்தாளர்| Dinamalar

91 வயதிலும் சளைக்காத எழுத்தாளர்

Updated : நவ 12, 2017 | Added : நவ 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

91 வயதிலும் சளைக்காத எழுத்தாளர் ஜபல்பூர் நாகராஜ சர்மா


ஜபல்பூர் ஏ.நாகராஜ சர்மா ஆன்மீக பத்திரிகை வாசகர்கள் பலருக்கும் பரிச்சயமான பெயர்.

12 ஜோதிர்லிங்க தரிசனங்கள்,51 அட்சர சக்தி பீடங்கள்,அதிசய ஆலயங்கள்,அருள்தரும் அஷ்ட விநாயகர்,நதி மூலங்கள்,கதம்பவனம்,ஆன்மீக அலைகள் என்று ஏழு அற்புதமான ஆன்மீக புத்தகங்களை எழுதியவர்.
இந்த புத்தகங்களில் உள்ள கோயில்கள் அனைத்திற்கும் இவரே நேரில் போய் தங்கியிருந்து விவரம் சேகரித்து தேவையான படங்கள் எடுத்து எழுதியுள்ளார் என்பதுதான் விசேஷம்.ஒரு சாதாரண பக்தனாக அங்கு போய் தரிசனம் பெற்று திரும்புவது எப்படி என்பதை எளிய முறையில் சொல்லும் புத்தகங்கள் இவை.

அதிலும் 51 அட்சர சக்தி பீடங்கள் பெரும்பாலான ஆன்மீகவாதிகள் பலரது உள்ளத்திலும் இல்லத்தையும் வீற்றிருக்கும் அற்புதமான புத்தககம்.

1927ல் நாகப்பட்டினத்தில் பிறந்தவரான இவர் படிக்கும் காலத்தில் சுதந்திர போராட்ட வேட்கை காரணமாக மதுக்கடைகளை எதிர்த்தும் எரித்தும் கசையடி பெற்றவர்.அப்போது அவர் வீறு கொண்டு எழுதிய வீரியமிக்க கவிதைகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது.

படித்து முடித்து மத்திய பிரதேசத்தில் மாநில மின்பொறியாளராக பணியில் சேர்ந்தார்,கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகாலமாக வடமாநிலத்தில்தான் வசிப்பு இன் காரணமாகவே இவரது பெயருடன் ஜபல்பூரும் ஒட்டிக்கொண்டுவிட்டது.
ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்ட இவர் அங்குள்ள பல கோயில்களுக்கு சென்று வந்த அனுபவத்தை தமிழக பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி அனுப்ப, அவையாவும் பிரசுரமாகி வாசகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படி இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள் பின் புத்தகங்களாக வந்து வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஆதிசங்கரரின் குருவான கோவிந்த் பகவத் பாதர் இருந்த குகையினை ஏழு வருட தேடல் காரணமாக இவர் கண்டறிந்து கடந்த 79ம் ஆண்டு உலகிற்கு அறிமுகம் செய்தார்.இது இவரது வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகும்.
2ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான நர்மதா நதிகரை பக்கமுள்ள ஆதிசங்கரர் துறவறம் பெற்ற இந்த குகையினை வந்து பார்த்த அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன் உடனடியாக சர்மாவை தனது இருப்பிடத்திற்கு வரவழைத்து கவுரவித்தார்.

பணி ஒய்வுக்கு பிறகு தனது பிள்ளைகள் இருக்கும் சென்னை பெங்களூரு ஆகிய ஊர்களில் மாறி மாறி இருந்து வரும் நாகராஜ சர்மா எழுத்துப்பணியில் இருந்து இப்போதும் ஒய்வு பெறவில்லை.
91 வயதாகிறது,விரும்பி கேட்பவர்களுக்கு இப்போதும் எழுதிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும் அபாரமான ஞாபகசக்தியுடன் தனது அனுபவங்களை விவரிக்கிறார்.நல்ல ஆரோக்கியத்துடனும் இன்று போல இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து ஆன்மீகத்திற்கான தனது சேவையைத் தொடர இவரை வாழ்த்துவோம். எண்:044-24740353.

-எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.inAdvertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
25-டிச-201706:07:06 IST Report Abuse
தாமரை அய்யாவின் ஆசி வேண்டி வாழ்த்துகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை