As Trump Sticks To 'Indo-Pacific', Not 'Asia-Pacific', China Reacts | பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப்... சந்திப்பு! இரு நாட்டு உறவு மேம்பாடு குறித்து பேச்சு Dinamalar
பதிவு செய்த நாள் :
சந்திப்பு!
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப்...
இரு நாட்டு உறவு மேம்பாடு குறித்து பேச்சு

மணிலா: தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, பிலிப்பைன்சில், இந்தியா - ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அதே சமயம், தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.

பிரதமர்,மோடி,அமெரிக்க அதிபர்,டிரம்ப்,சந்திப்பு,இரு நாட்டு,உறவு,மேம்பாடு,பேச்சு


இந்நிலையில், பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, இருதரப்பு வர்த்தக மேம்பாடு, ராணுவம், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட, பல விவகாரங்கள் குறித்து, இருவரும் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.முன்னதாக, நேற்று முன்தினம், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து, இந்தியா - பசிபிக் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக, நாற்கர கூட்டணியை அமைப்பது குறித்து விவாதித்தன.
தெற்கு சீன கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த கூட்டணியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த, இந்தியா - பசிபிக் பிராந்தியத்தில், இந்தியாவின் பங்கு பெரியளவில் இருக்க வேண்டுமென, அமெரிக்கா விரும்புகிறது.
சமீப காலமாக, இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்துவதில், அமெரிக்கா

ஆர்வம் காட்டி வருகிறது. தென் கிழக்காசிய நாடுகளுக்கு கடந்த வாரம், சுற்றுப்பயணம் துவங்கும் முன், 'இந்திய பொருளாதாரம் உலக மயமான பின், அதன் வளர்ச்சி பிரமிப்பாக உள்ளது. 'இந்தியாவையும், அதன் மக்களையும், ஒருங்கிணைக்கும் பணியை, பிரதமர் நரேந்திர மோடி, திறம்பட செய்கிறார்' என, டிரம்ப், பாராட்டுதெரிவித்தார்.
வியட்நாமில், தனாங் நகரில் நடந்த, ஆசியா - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில், டிரம்ப் பேசுகையில், 'இந்தியா - பசிபிக் பிராந்தியத்தில், எல்லா துறைகளிலும் சிறப்பான சாதனைகளை புரியும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று' என, டிரம்ப் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்திய நெல் தானம்


பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, லாஸ்பனோஸ் நகரில் உள்ள, ஐ.ஆர்.ஆர்.ஐ., எனப்படும், சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் ஜீன் வங்கிக்கு, இந்தியாவைச் சேர்ந்த, இரண்டு அரிய, நெல் வகைகளை நன்கொடை அளித்தார்.அப்போது, 'உலகளாவிய வறுமையை, பசியை போக்கும் நோக்கில், ஐ.ஆர்.ஆர்.ஐ., நிறுவனம், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது' என, மோடி கூறினார். அந்நிறுவனத்தில் பணியாற்றி
வரும், ஏராளமான இந்திய விஞ்ஞானிகளுடன், மோடி கலந்துரையாடினார்.

தொண்டு நிறுவனதிற்கு பாராட்டுபிலிப்பைன்ஸ், மணிலா நகரில் அமைந்துள்ள, மஹாவீர் பிலிப்பைன் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவன அலுவலகத்துக்கு, பிரதமர் மோடி, நேற்று சென்றார். இந்நிறுவனம், கால்களை இழந்தோருக்கு, 'ஜெய்ப்பூர் கால்' எனப்படும், இந்தியாவில் தயாரிக்கப்படும்,

Advertisement

செயற்கைக் கால்களை இலவசமாக வழங்கும் பணியை செய்து வருகிறது. இதுவரை, 15 ஆயிரம் பேருக்கு, இலவச கால்களை, இந்நிறுவனம் வழங்கி உள்ளது.
இது குறித்து, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் மோடி வெளியிட்ட பதிவில், 'மஹாவீர் பிலிப்பைன் அறக்கட்டளைக்கு சென்றது, சிறப்பான அனுபவமாக இருந்தது. கால்களை இழந்தோருக்கு, ஜெய்ப்பூர் கால்களை வழங்கி, அந் நிறுவனம், மகத்தான சேவையாற்றி வருகிறது' எனக் கூறியுள்ளார்.

பரவசப்படுத்திய ராமாயண இசை நிகழ்ச்சிபிலிப்பைன்சில், ஆசியான் உச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக அரங்கேறிய, ராமாயணம் இதிகாச இசை நிகழ்ச்சி, அனைவரையும் பரவசப்படுத்தியது. ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட, 10 நாடுகளுடன், இந்தி யாவின் கலாசார இணைப்புகளை பிரதிபலிக்கும் வகையில், அந்த இசை நிகழ்ச்சி இருந்தது.
துவக்க விழாவில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், டிரம்ப், சீன பிரதமர், லீ கெகியாங், ஜப்பான் பிரதமர், ஷின்சு அபே உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
18-நவ-201708:26:58 IST Report Abuse

Barathanசென்ற வருடம் இந்திய மாணவர்களால் 46,0000 கோடி ரூபாய் அமெரிக்காவிற்கு வருமானம் வந்ததாக செய்தி

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-நவ-201723:44:08 IST Report Abuse

Vijay D Ratnamமன்மோகன் சிங், பிரதிபா பாட்டில் என்ற இரண்டு டம்மி பீஸ்களை பார்த்து பழக்கப்பட்ட மற்ற நாட்டு தலைவர்கள் மொரார்ஜி தேசாய், வாஜிபாய்க்கு பிறகு ஒரு நிஜ பிரதமரை பார்க்க்கிறார்கள்.

Rate this:
14-நவ-201717:05:09 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்///இந்தியாவையும், அதன் மக்களையும், ஒருங்கிணைக்கும் பணியை, பிரதமர் நரேந்திர மோடி, திறம்பட செய்கிறார்' என, டிரம்ப், பாராட்டுதெரிவித்தார்./// ஐயோ பாவம் நம் மக்களை பற்றி ட்ரம்பிற்கு தெரியாது போலிருக்கிறது. ஒற்றுமை என்னவென்றால் அது எந்த கடையில் கிடைக்கிறது , எவ்வளவு கிலோ என்று கேட்பார்கள். ஆயிரம் ஆண்டுகள் அடிமைகளாய் இப்படித்தான் பிரித்து வைத்திருந்தார்கள். நடுவில் திராவிட கூட்டம் வேறு ஒரு முட்டாள்தனமான சிந்தனையை விதைத்திருக்கிறது. உண்மையை உணர்ந்து இவர்கள் மனம் எப்போது மாறுமோ ?

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X