காங்கிரசுக்கு கல்தா: ஸ்டாலின் திட்டம்? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காங்கிரசுக்கு கல்தா: ஸ்டாலின் திட்டம்?

அ.தி.மு.க., பிளவுபட்டுள்ள நிலையில், தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும் என்றும், காங்கிரசை கழற்றி விட வேண்டும் என்றும், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர்.

 
காங்கிரஸ,கல்தா,ஸ்டாலின்,திட்டம்

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 37 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. அகில இந்திய அளவில், அ.தி.மு.க., மூன்றாவது பெரிய கட்சியாக இடம்பெற்றது.

வலியுறுத்தல்ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சி, பழனிசாமி, சசிகலா, தீபா என, மூன்று அணிகளாக பிரிந்து செயல்படுகிறது. அதனால், 'அ.தி.மு.க.,வை எதிர்கொள்ள, தி.மு.க., தனித்து போட்டியிட்டால் போதும்; கூட்டணி தேவையில்லை' என்ற கருத்து, கட்சியினரிடம்


உருவாகியுள்ளது.மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து, சமீபத்தில், தமிழகம் முழுவதும், தி.மு.க., நடத்திய கண்டனஆர்ப்பாட்டத்தில், காங்கிரசார் பங்கேற்கவில்லை. மாறாக, அந்தக் கட்சியினர் தனித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால், இரு கட்சிகளின் தொண்டர்கள் இடையே, உரசல் உருவாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் தொடர்ந்து, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுவது, தி.மு.க., நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. வரும் லோக்சபா தேர்தலில், யாருடனும் கூட்டணி அமைக்காமல், தனித்து போட்டியிட்டு, தேர்தல் முடிவுக்கு பின், மத்தியில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை எடுக்கலாம் என, மூத்த நிர்வாகிகள், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். .

ம.செ. கூட்டம்அதாவது, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, தி.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால், ஜெயலலிதா இல்லாத நிலையில், அ.தி.மு.க., சிதறியுள்ள நிலையில், கூட்டணி சேரும் அவசியம், தி.மு.க.,வுக்கு இல்லை.

Advertisement


எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தது. அதேபோல, வரும் லோக்சபா, சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும் என்ற கருத்தை, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிலரும், ஸ்டாலினிடம் கூறியுள்ளனர்.
அதனடிப்படையில், தனித்து போட்டியா, கூட்டணியா என்பது குறித்து, மாவட்டச் செயலர்களுடன் விவாதித்து முடிவெடுக்கலாம் என, ஸ்டாலின் தீர்மானித்துள்ளார். எனவே, விரைவில், சென்னை, அறிவாலயத்தில், மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்கவுள்ளது.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
19-நவ-201711:32:12 IST Report Abuse

Tamizhan kanchiநொடிக்கு நூறு தடவை ஜெ. மைனாரிட்டி மைனாரிட்டி என்று சொன்னாலும் மானம் போனாலும் பரவாயில்லை.. காங். க்கு ஒரு மந்திரி பதவி கொடுத்து ஆட்சியில் சேர்த்து அந்த ஈனபட்டத்தை துடைத்தெறிய மனசு வராத சுயநல கட்சியுடன் யார் கூட்டணி வைப்பார்கள்... காலாவதியான காங்..தான் கூடாநட்பு என்று கொட்டினாலும் தலையை சொரிந்து கொண்டு தவம் கிடக்கிறது...

Rate this:
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
19-நவ-201709:28:07 IST Report Abuse

Tamizhan kanchiசிறிய கட்சிகளை சிரம் தாழ்த்தி வரவேற்கும் எனது செயல் தலைவரே வாக்குகள் வாங்கும் வரை..அவர்கள் காலை பிடிப்போம்...காரியம் நிறைவேறும். ஆட்சியில் பங்கு கேட்டால் மிதித்து தள்ளுவோம்.. திருமா பங்கு இல்லாமல் நொங்கு திங்க வரமாட்டார்....

Rate this:
bal - chennai,இந்தியா
17-நவ-201722:37:59 IST Report Abuse

balதினமும் ஒரு செய்தி

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-நவ-201723:09:19 IST Report Abuse

Pugazh Vஸ்டாலின் பத்தி நியூஸ்.. ஓடிவா ஓடிவா.. அவர் பெயரை தப்பு தப்பா டைப் செய்கிற அல்ப சந்தோஷம்.. அநாகரிகமா பெனாத்தற சந்தோஷம் எல்லாம் கிடைக்கும்.. ஓடிவா

Rate this:
Mal - Madurai,இந்தியா
14-நவ-201721:27:34 IST Report Abuse

MalDMK and all its family members oru raid panina tamilnadu aduthu taxless budget podalam... Further including all ex-ministers wealth indiaka taxless budget podalam... Hope bjp doesn't leave anyone .... Just like Bofors case

Rate this:
KV Pillai - Chennai,இந்தியா
14-நவ-201718:36:11 IST Report Abuse

KV Pillaiபெரியவர் யார் வெற்றி பெறுவார்கள் என சரியாக கணித்து அவர்களுடன் கூட்டணி வைப்பதில் வல்லவர். மகன் அதற்கு நேரெதிர் போல.

Rate this:
elango - Chennai,இந்தியா
14-நவ-201717:19:54 IST Report Abuse

elango. முடிந்தால் இன்னும் 6 அல்லது 7 சிறிய கட்சியை கூட சேர்த்துக் கொள்ளலாம். யார் எல்லாம் செயல் தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்ளுபவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு கூட்டணியின் வாக்கின் அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்ய முன்வரவேண்டும். ஜெயலலிதாவைப் போல் அகங்காரம்மாகவும் வேண்டாம்,

Rate this:
Prem - chennai,இந்தியா
14-நவ-201716:56:37 IST Report Abuse

PremTherthal nerugunthu la atha uzhal kootani onnu sendhu iruku

Rate this:
shekaran - thiruchi,இந்தியா
14-நவ-201716:48:11 IST Report Abuse

shekaranoolal seivathai mattum paniyaaga karuthi vaalum neengalaam itha pathi paesaathinga

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
14-நவ-201716:46:43 IST Report Abuse

Sundaramrendum urupudatha katchi .. Athulaum antha sudalin waste fellow

Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement