இரட்டை இலைக்காக எழுத்துபூர்வ வாதங்கள்: தேர்தல் கமிஷனில் முறைப்படி தாக்கல் Dinamalar
பதிவு செய்த நாள் :
இரட்டை இலைக்காக எழுத்துபூர்வ வாதங்கள் :
தேர்தல் கமிஷனில் முறைப்படி தாக்கல்

தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தபடி, இரட்டை இலைச் சின்னம் தொடர்பான எழுத்துபூர்வமான வாதங்களை, அ.தி.மு.க., இரு அணிகளும் முறைப்படி சமர்ப்பித்து உள்ளன.

இரட்டை இலை  எழுத்துபூர்வ வாதங்கள் : தேர்தல் கமிஷன் முறைப்படி தாக்கல்


இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, அக்., 6ம் தேதி துவங்கி, பல கட்ட விசாரணைகள் நடந்து, இறுதி விசாரணை கடந்த வாரம் நிறைவு பெற்றது.

அவகாசம்இறுதி நாளன்று, மீண்டும் அவகாசம் அளிக்க வேண்டுமென்று, தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரியும், அதை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.மாறாக, ஏதாவது தெரிவிக்க விரும்பினால், அவற்றை எழுத்துபூர்வமாக, 13க்குள் அளிக்கும்படி உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று தலைமை தேர்தல் கமிஷனில், எழுத்துபூர்வ ஆவணங்கள் தாக்கல் செய்ய, இரு தரப்பும் தயராகி வந்திருந்தன.
பழனிசாமி - பன்னீர்செல்வம் அணி சார்பில், தமிழக சட்ட அமைச்சர், சண்முகம் வந்திருந்தார்.வழக்கறிஞர்கள் சிலருடன் வந்த அவர், 60 பக்க ஆவணங்களை, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தார்.இதுவரை நடந்த விசாரணையில்,

இவர்கள் தரப்பு வைத்த வாதங்களின் உத்தேச தொகுப்பாக, அது இருந்தது.
தினகரன் அணி சார்பில், வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் வந்திருந்தார். அவர், 131 பக்க ஆவணங்களை எடுத்து வந்திருந்தார். தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்ட அவை, இதுவரை இந்த தரப்பு வைத்த, உத்தேச தொகுப்பாக இருந்தது.

முகாம்


கடைசியாக நடந்த விசாரணையின்போது, பழனிசாமி -பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் மட்டுமே, பேச முடிந்தது. அந்த வாதங்களுக்கு அளிக்க வேண்டியிருந்த பதில்களை உள்ளடக்கியதாக, இந்த தினகரன் தரப்பு எழுத்துபூர்வ தொகுப்பில் இருந்தது.
பின், இந்த அணியினர் கூறுகையில், 'எங்கள் சந்தேகங்களுக்கு, தெளிவான பதிலை எதிர் தரப்பு தரவில்லை. அவர்கள் தரப்பில், புதிய வாதங்கள் வைக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கு பதிலளிக்க கூடுதலாக, மூன்று நாட்கள் அவகாசம் கேட்டுள்ளோம். வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம், எங்களுக்கு இல்லை' என்றனர்.
இரு அணிகளும் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்திருப்பதன் மூலம், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விதித்திருந்த காலக் கெடு, நிறைவு பெற்று உள்ளது.ஏற்கனவே நடந்த வாத பிரதிவாதங்களோடு சேர்ந்து, இந்த எழுத்து பூர்வ வாதங்களையும் ஆராய்ந்து பார்த்து, அதன்பின்னே, தேர்தல் கமிஷன் ஒரு முடிவுக்கு வரும். இதற்கு, கூடுதல் அவகாசம் தேவைப்படலாமெனதெரிகிறது.
இதற்கிடையில், தேர்தல் கமிஷனில் எழுத்துபூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க வந்திருந்த, சட்ட அமைச்சர், சண்முகத்துடன், மேலும் இரண்டு தமிழக அமைச்சர்கள், டில்லியில் முகாமிட்டிருந்தனர்.

Advertisement

டில்லியில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய, 'பாரத் நெட்' கருத்தரங்கில், தமிழக அமைச்சர் மணிகண்டனும் பங்கேற்றார்.
அவர் கூறுகையில், ''கிராமங்களுக்கும் நேரடி இணைய சேவை வழங்கும் இந்த திட்டத்திற்கு தமிழகத்தில், 'தமிழ்நெட்' என்ற பெயர் சூட்டப்பட்டு, அதிகாரிகளை நியமித்து, ஆறு மாதங்களில் பணிகள் துவங்கப்படும்,'' என்றார்.

ஆய்வறிக்கைஅருங்காட்சியம் மேம்பாடு, அகழ்வாராய்ச்சி ஒத்துழைப்பு, கிராமப்புற கலைஞர்களுக்கென இணையதளம் துவங்குதல் ஆகியவற்றுக்கு, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி கோரி மத்திய கலாசாரத் துறை அமைச்சர், மகேஷ் சர்மாவை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், பாண்டியராஜன் சந்தித்தார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''மழை முடிந்தவுடன், கீழடி அகழ்வாராய்ச்சி மீண்டும் துவங்கப்படும். ''தற்போது, அழகன்குளத்தில் உள்ள, 12 பேர் அடங்கிய குழு அனுப்பப்படும். கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த ஆய்வு அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டுமென, மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்,'' என்றார்.
- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-நவ-201723:02:18 IST Report Abuse

Pugazh Vஇதையும் நீதிமன்றம் கண்டிக்கும். தேர்தல். ஆணையம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும். அவ்ளதான்

Rate this:
D.RAMIAH - RAIPUR,இந்தியா
14-நவ-201717:57:00 IST Report Abuse

D.RAMIAHஇது என்ன ஹனுமார் வால் மாதிரி இழுத்துக் கொண்டே போகிறது - கடவுள் விட்ட வழி

Rate this:
Prem - chennai,இந்தியா
14-நவ-201717:09:18 IST Report Abuse

PremKandipa makkal balam niraiya iruka tamilaga arasu than chinnam kidaikum

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X