உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மன்னிப்பு கேட்டார் தேர்தல் ஆணையர் Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு:
மன்னிப்பு கேட்டார் தேர்தல் ஆணையர்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது மாநில தேர்தல ஆணையம்.

மன்னிப்பு,Forgiveness, தேர்தல ஆணையம்,Election Commission, உள்ளாட்சி தேர்தல்,panchayat election, சென்னை உயர்நீதி மன்றம் ,Chennai High Court, நீதிபதி இந்திரா பானர்ஜி,Judge Indira Banerjee, நீதிபதி எம்.சுந்தர் , Justice M Sundar, தி.மு.க ஆர்.எஸ்.பாரதி, DMK RS Bharathi,
மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான்,State Election Commissioner Malik Berozkan, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு , condemn the court


தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை, 2017 செப்., 18 க்குள் வெளியிடவும், நவ., 17க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.


விடுவிக்க கோரி மனு


அதன்படி, அறிவிப்பு வெளியிடாததால், மாநில தேர்தல் ஆணையர் மற்றும்செயலருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, தி.மு.க., அமைப்பு செயலர்,ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையர், மாலிக் பெரோஸ்கான், செயலர், ராஜசேகர் நேரில் ஆஜராகினர்.
விசாரணை, இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது. இருவரும் ஆஜராகவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இந்நிலையில்,அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நிபந்தனையற்ற மன்னிப்பு


மனுவில், 'நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள், தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என,

Advertisement

உள்நோக்கம் எதுவும் கிடையாது. தேர்தல் தேதி அறிவிக்காதது தொடர்பாக, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்' என, கூறப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி, மனுவில் கூறப்பட்டுள்ளன. இவ்வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (20)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
M Ragh - Kanchi,இந்தியா
25-நவ-201714:07:19 IST Report Abuse

M RaghSinnam allocation dan wait panninika, Ippo announcement pannunka. Election committee Not True

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-நவ-201714:12:25 IST Report Abuse

ஜெயந்தன்தவறு செய்து விட்டு ஒரு பாமரன் மன்னிப்பு கேட்டால் விட்டு விடுமா இந்த நீதி மன்றம்...??? அதிகாரிகள் ஆகாயத்திலிருந்து முளைத்தவர்களா ?

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
14-நவ-201710:26:52 IST Report Abuse

நக்கீரன்அப்போ கொள்ளையடித்து விட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா? சட்டத்தை மீறிவிட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா? நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் மிதித்துவிட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா? இதே ஒரு சாதாரண மனிதன் செய்திருந்தால் நீதிபதிகள் பொங்கி எழுந்திருப்பார்கள். ஆனால் அரசும், அதிகாரிகளும் செய்தால் பொத்திக்கொண்டு இருப்பார்கள். சாதாரண மனிதனுக்கு ஒரு நீதி. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவனுக்கு ஒரு நீதியா? இந்த அரசு மட்டும்தான் கையாலாகாத அரசு என்று நினைத்தோம். ஆனால் நீதிமன்றங்களும் கையாலாகாமலே உள்ளன. இதுதான் உண்மை.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201708:58:44 IST Report Abuse

Srinivasan Kannaiyaஉள்நாட்டு குழப்பம் தெரிந்தும் இதுமாதிரி செய்வது யாருக்கும் சரி இல்லை...

Rate this:
14-நவ-201708:43:21 IST Report Abuse

அப்புஅரசு அதிகாரிகள் தொழில் பண்ணுவதற்கு பதில் வேறு ஏதாவது செய்து பொழைக்கலாம். ஒரு பக்கம் நீதியரசர்கள், மறுபக்கம் மந்திரிகள்... ரோதனை தாங்க முடியல. ஆனா, அவிங்க ரெண்டுபேரும் சேந்து விருந்து சாப்பிடுவாங்க.

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-நவ-201708:30:36 IST Report Abuse

ஜெயந்தன்தேர்தல் ஆணையம் எப்போதோ விலை போய் விட்டது..அதிகாரத்தின் கால்களியே விழுந்தவர்கள் அவர்கள்..மன்னிப்பு கேட்பது அவர்களுக்கு பெரிய அசிங்கமே இல்லை

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
14-நவ-201708:25:57 IST Report Abuse

அம்பி ஐயர்2018 ஏப்ரல் வரை தேர்தல் இருக்காது.... தொகுதி வரையறை வார்டு வரையறை என்று சொல்லி ஒரு ஆறு மாதம் காலம் கடத்த வேண்டியதுதான்...

Rate this:
M.S.Jayagopal. - Salem,இந்தியா
14-நவ-201707:55:47 IST Report Abuse

M.S.Jayagopal.இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட தமிழக மந்திரிக்கும் பொறுப்பு உண்டு. நீதிமன்றம் அவரையும் விசாரணைக்கு நேரடியாக உட்படுத்த வேண்டும்.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
14-நவ-201706:43:20 IST Report Abuse

தேச நேசன் உள்ளாட்சித்தேர்தல் என்றால் என்ன? எம்பியும் எம் எல் ஏயும் தங்கள் சம்பாத்தியத்தில் கவுன்சிலர்களுக்கும் விட்டுக்கொடுக்கவிக்கும் திருவிழா இதுக்கு ஒரு கோர்ட் கேஸ் வாய்த்த மன்னிப்பு. சிப்பு சீப்பா வருது ஒருவெயிட்டு வாசலில் கொஞ்சம் மணாலி ஜல்லியோ கொட்டியிருப்பதைப்பார்த்தால் போதும் உடனே கவுன்சிலர் ஆட்கள ஆஜராகி மாமூலுக்கு அப்புறம் ஆள் அனுப்புறேன் பத்தாயிரமோ அம்பதாயிரமோ கொடுத்தனுப்புங்க வார்டு மேம்பாட்டுக்கு இல்லை கோவில் கொடைக்கு என்று சொல்லிப்போவார் கொடுக்காட்டி மணல் மட்டுமில்ல வீடே காணாமப்போகும்

Rate this:
sachin - madurai,இந்தியா
14-நவ-201711:10:29 IST Report Abuse

sachinஉண்மை ......

Rate this:
sachin - madurai,இந்தியா
14-நவ-201711:22:59 IST Report Abuse

sachinமன்னிப்பு தேவை இல்லை உங்கள் ராஜினாமா தான் தேவை .......மன்னிப்பு கேட்க உனக்கு ஒரு மாநில தேர்தல் ஆணையர் பதவி எதுக்கு ..... போன உள்ளாட்சி தேர்தல் முடிந்து பிறகு உங்க வரையறை,எல்லா வேலையையும் முடித்து இருக்கலாம் அல்லவா .. ஏன் அப்பவே பண்ணாமல் தூங்கி கொண்டு இப்போ அது பண்ணனும் இது பண்ணனும் என்று யாருக்கு சிங்கி அடித்து விட்டு இப்போ மன்னிப்பாம்...

Rate this:
Einsteen Ravi - Ootacamund (Ooty),இந்தியா
14-நவ-201706:39:32 IST Report Abuse

Einsteen Raviஇப்பயாவது தேதியை அறிவிச்சு தொலைய வேண்டியது தானே? மன்னிப்பு மட்டும் வருது, தேர்தல் வர மாட்டேங்குது. கிட்டத்தட்ட ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு. என்னத்த கிழிக்கிறாங்களோ. கோர்ட் பேச்சையே கேக்க மாற்றாங்க.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement