உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மன்னிப்பு கேட்டார் தேர்தல் ஆணையர் Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு:
மன்னிப்பு கேட்டார் தேர்தல் ஆணையர்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது மாநில தேர்தல ஆணையம்.

மன்னிப்பு,Forgiveness, தேர்தல ஆணையம்,Election Commission,  உள்ளாட்சி தேர்தல்,panchayat election, சென்னை உயர்நீதி மன்றம் ,Chennai High Court,  நீதிபதி இந்திரா பானர்ஜி,Judge Indira Banerjee,  நீதிபதி எம்.சுந்தர் , Justice M Sundar,  தி.மு.க ஆர்.எஸ்.பாரதி, DMK RS Bharathi,
மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான்,State Election Commissioner Malik Berozkan,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு , condemn the court


தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை, 2017 செப்., 18 க்குள் வெளியிடவும், நவ., 17க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.


விடுவிக்க கோரி மனு


அதன்படி, அறிவிப்பு வெளியிடாததால், மாநில தேர்தல் ஆணையர் மற்றும்செயலருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, தி.மு.க., அமைப்பு செயலர்,ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையர், மாலிக் பெரோஸ்கான், செயலர், ராஜசேகர் நேரில் ஆஜராகினர்.
விசாரணை, இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது. இருவரும் ஆஜராகவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இந்நிலையில்,அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நிபந்தனையற்ற மன்னிப்பு


மனுவில், 'நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள், தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என,

Advertisement

உள்நோக்கம் எதுவும் கிடையாது. தேர்தல் தேதி அறிவிக்காதது தொடர்பாக, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்' என, கூறப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி, மனுவில் கூறப்பட்டுள்ளன. இவ்வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ragh - Kanchi,இந்தியா
25-நவ-201714:07:19 IST Report Abuse

M RaghSinnam allocation dan wait panninika, Ippo announcement pannunka. Election committee Not True

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-நவ-201714:12:25 IST Report Abuse

ஜெயந்தன்தவறு செய்து விட்டு ஒரு பாமரன் மன்னிப்பு கேட்டால் விட்டு விடுமா இந்த நீதி மன்றம்...??? அதிகாரிகள் ஆகாயத்திலிருந்து முளைத்தவர்களா ?

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
14-நவ-201710:26:52 IST Report Abuse

நக்கீரன்அப்போ கொள்ளையடித்து விட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா? சட்டத்தை மீறிவிட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா? நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் மிதித்துவிட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா? இதே ஒரு சாதாரண மனிதன் செய்திருந்தால் நீதிபதிகள் பொங்கி எழுந்திருப்பார்கள். ஆனால் அரசும், அதிகாரிகளும் செய்தால் பொத்திக்கொண்டு இருப்பார்கள். சாதாரண மனிதனுக்கு ஒரு நீதி. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவனுக்கு ஒரு நீதியா? இந்த அரசு மட்டும்தான் கையாலாகாத அரசு என்று நினைத்தோம். ஆனால் நீதிமன்றங்களும் கையாலாகாமலே உள்ளன. இதுதான் உண்மை.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X