சேது சமுத்திர திட்ட நிலைப்பாடு: பதிலளிக்க அரசுக்கு உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
சேது சமுத்திர திட்ட நிலைப்பாடு:
பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

சேது சமுத்திர திட்டத்தில், ராம சேதுவை சேதப்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதா என்பது குறித்து தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேது சமுத்திரம்,நிலைப்பாடு,பதிலளிக்க,அரசு,உத்தரவு


இந்தியப் பெருங்கடல் பகுதியில், இலங்கையை சுற்றிச் செல்லாமல், பாக் நீரிணைப்பு பகுதியில் கடலை ஆழப்படுத்தும், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. இதற்காக, ராமர் பாலம் சேதப்படுத்தப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


ஒத்திவைத்தது


இந்த நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்அவர் கூறியுள்ளதாவது:சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பான வழக்கில், 2008ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. அதன்பின், மாற்றுப் பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய, டாக்டர், பச்சோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
மாற்றுப் பாதையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சாத்தியமே இல்லை என, அந்தக் குழு அறிக்கை அளித்துள்ளது. அதை ஏற்காத காங்கிரஸ் அரசு, ராமர் பாலத்தை சேதப்படுத்தி, திட்டத்தை தொடர்வதாகதன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்தது.

கைவிட வேண்டும்


பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ராமர் பாலத்தை சேதப்படுத்துவதை ஏற்கவில்லை.

Advertisement

பார்லிமென்டில் நடந்த விவாதத்தின்போது, தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, சேது பாலம் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஆறு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, உத்தரவிட்டுள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
14-நவ-201712:08:13 IST Report Abuse

தமிழன்கூகுள் மேப்ல அது ஆதாம் பிரிட்ஜ்னு போட்டுருக்கு ராமரா? இல்ல ஆதாரமா??

Rate this:
karthikeyan - singapore,சிங்கப்பூர்
14-நவ-201711:34:37 IST Report Abuse

karthikeyanகும்புடுற சாமீ கும்பிடாத சாமீ நம் தஞ்சை பெரிய கோவில் மற்ற பல கோவில்கள் எந்த கல்லூரி யும் இல்லாத ( ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ) காலத்தில் கட்டப்பட்டு பிரமாண்டம் ம நிற்கலையா ? அத பேசும் போது நம் மன்னர்கள் கட்டியது என்று பெருமையாக சொல்கிறோம் ல . சும்மா ஏதாவது கருத்து என்று போடுவதா ?

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
14-நவ-201710:52:52 IST Report Abuse

VOICEபிஜேபி உண்மையில் நாடு நலம் நல்ல இருக்கனும் என்று நினைத்தால் இந்த சேது சமுத்திர திட்டம் நிறை வேற்ற பாடணும். கடவுள் பக்தி பயம் இருக்கவேண்டும் அதற்காக அதீத மூடநம்பிக்கை இருந்தால் வருமானம் வேலைவாய்ப்பு வராது.

Rate this:
Rockie - Nellai,இந்தியா
14-நவ-201709:49:01 IST Report Abuse

Rockieதமிழ்நாட்டுக்கு ஏதாவது நல்லது நடக்குறதுமாதிரி தெரிந்தாலே இந்த நாசமா போறவனுவலுக்கு எங்கயாவது வேத்துரும்

Rate this:
Ganesh Tarun - Delhi,இந்தியா
14-நவ-201709:42:58 IST Report Abuse

Ganesh Tarunராம் சேதுவை நாம் பாதுகாக்க வேண்டும். ராமாயணத்துக்கான ஆதாரம் ராம் சேது. நம் தேசத்து அடையாளங்களை நமக்கு பாதுகாக்க தெரியவில்லை என்றால் நம்மைவிட ஏமாளிகள் இந்த உலகத்தில் இல்லை. ராம் சேது ராமாயண காலத்தில் இருந்தே நம்முடன் உள்ள ஆதாரம் . ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201708:52:31 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅப்பிடி ஒன்னு இருக்கா...? வை கோ ,டி . ஆர்.பாலு நீங்கள் கூடவா இதை மறந்து விட்டீர்கள்... ஒப்பந்தக்காரர் முழுதொகையும் வாங்கி இருப்பார்... மக்கள் என்ன கணக்கா கேக்கபோறாங்கா...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
14-நவ-201708:10:41 IST Report Abuse

தேச நேசன் பாலுவின் கொள்ளை முடிந்துவிட்டது இதுவரை வெட்டிய கால்வாயையும் காணவில்லை திட்டமே போகாத ஊருக்கு வழி என்பது எல்லோருக்கும் தெரிந்ததே உலகமகா ஊழல்களின் தலைநகரம் தமிழ்நாடு

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
14-நவ-201707:53:06 IST Report Abuse

தங்கை ராஜாஒரு நல்ல திட்டத்தை கெடுக்க வேண்டுமா........ கற்பனை கதைகளை மத நம்பிக்கையோடு கலந்து பரப்புங்கள். எந்த கொம்பன் வந்தாலும் நடைமுறை படுத்த முடியாது.

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-நவ-201716:26:14 IST Report Abuse

Cheran Perumalஅறிவியலுக்கு ஒவ்வாத பல கருத்துக்களை உடும்புப்பிடியாக பிடித்திருக்கும் ஒரு மதத்திலிருந்து வந்தவர் பேசும் பேச்சு இது. தண்ணியில் புரளும் நாக்கு எப்படி வேண்டுமானாலும் புரளும். அதிலும் இந்து மதத்திற்கு எதிராக பேசும்போது கஜினி, பாபர், அவுரங்கசீப் எல்லாம் தோற்றார்கள் போங்கள்....

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
14-நவ-201707:07:37 IST Report Abuse

Sahayamஇதற்க்கு நம்ம உலகம் சுற்றும் பகுத்தறிவாதி பிரதமர் மோடிஜியின் தனிப்பட்ட கருத்தை கோர்ட் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதை எதிர்க்கும் மக்கள் பணமா கால்வாய் வீடீயோவை யூடியூபில் தயவு செய்து பார்க்கவும். அதில் கிடைக்கும் வருமானத்தில் அந்த நாடே வாழ்கிறது. .

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-நவ-201716:27:34 IST Report Abuse

Cheran Perumalஉலகம் உருண்டை என்று சொன்ன கலீலியோவை தூக்கில் போட்டவர்கள் வம்சம். பகுத்தறிவு பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா?...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
14-நவ-201706:37:55 IST Report Abuse

தேச நேசன் ராம ராம ராம ராம ஜெய் ஸ்ரீராம்

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement