25 டிப்போக்கள் ரூ.412 கோடிக்கு அடமானம்; அரசு போக்குவரத்து கழகத்தின் அவலம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
25 டிப்போக்கள் ரூ.412 கோடிக்கு அடமானம்
அரசு போக்குவரத்து கழகத்தின் அவலம்

அரசு போக்குவரத்துக் கழக, சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட, 25 பணிமனைகள், வங்கிகளில், 412 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டு, மீட்க முடியாமல் உள்ளது.

அரசு போக்குவரத்து கழகம், Government Transport Corporation, பணிமனைகள்,Workshop, வங்கி, bank, தமிழ்நாடு போக்குவரத்து நிதி நிறுவனம்,Tamilnadu Transport Finance Corporation,  அடமானம், Mortgage, டயர்,tyre, உதிரி பாகங்கள், Spare Parts,சேலம் , Salem,


அரசு போக்குவரத்து கழகத்தின், சேலம் கோட்டம் சார்பில், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 31 பணிமனைகள் உள்ளன. இவற்றில், 2,219 பஸ்கள், 2,061 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.இதில், பஸ்களின் பராமரிப்பு சொல்லிக் கொள்ளும் படி இல்லாததால், நாளுக்கு நாள் இழப்பை சந்தித்து, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்க, 2004 ஏப்., 15 முதல் படிப்படியாக பணிமனைகளை அடமானம் வைத்து, வங்கிகளில் கடன் பெறப்பட்டுள்ளது. இந்த கடன்களை திருப்பி செலுத்தாததால், வட்டியும், அசலும் சேர்ந்து, கடன் தொகை அதிகரித்து வருகிறது.கடந்த, 2004ல், முதன் முதலாக, எருமாபாளையம், ஜான்சன்பேட்டை பணிமனைகள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சேலம் கிளையில், 18.55 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டது.


ரூ.50.72 கோடிகடந்த, 2010 அக்., 28ல், சேலம், கோட்டை, கனரா வங்கி கிளையில், ஜான்சன்பேட்டை - 1, வாழப்பாடி, ஆத்துார், ராசிபுரம், இடைப்பாடி, தாரமங்கலம் ஆகிய பணிமனைகள், 50.72 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டு, கடன் பெறப்பட்டது.
தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,அழகாபுரம் கிளையில், 2011 மார்ச் 3ல், கிருஷ்ணகிரி புறநகர், தர்மபுரி மண்டல அலுவலகம் ஆகியனவும், அதே ஆண்டு, ஜூலை, 1ல், திருச்செங்கோடு, சங்ககிரி, அத்தனுார் - காலிமனை ஆகியவையும், அக்., 14ல், அரூர் பணிமனை என, அந்த ஆண்டில், 61.50 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டது.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, யுகோ வங்கியில், ஓசூர் பணிமனை, 30.10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது.இரண்டாவது கட்டமாக, சேலம், தலைமை அலுவலகம், நாமக்கல் பாடி கட்டும் பிரிவு, தர்மபுரி டவுன், புறநகர், அஸ்தம்பட்டி, கிருஷ்ணகிரி டவுன், பாலக்கோடு, பென்னாகரம்...

தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய பணிமனைகள், தமிழ்நாடு போக்குவரத்து நிதி நிறுவனத்திடம், 250.80 கோடி ரூபாய்க்கு, அடமானம் வைக்கப்பட்டு, கடன் பெறப்பட்டுள்ளது.இந்த வகையில், 2004 துவங்கி, 2016 வரை, 411.67 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளநிலையில், அவற்றுக்கான வட்டியை கூட கட்ட முடியவில்லை.இதனால், கடன் தொகை அதிகரித்துள்ளது.
சேலம் கோட்டத்தின் மொத்தமுள்ள, 31 பணிமனைகளில், 25யை அடமானம் வைத்து கடன் பெறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சொத்துக்களையும்

Advertisement

வைத்து, கடன் பெறும் முயற்சிகளில், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஜப்தி ஆபத்துஇதே நிலை தொடர்ந்தால், அடமானம் வைக்கப்பட்ட பணிமனைகள், வங்கிகளால் ஜப்தி செய்யப்படும் ஆபத்து இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.இது குறித்து, ஊழியர்கள் கூறியதாவது:சேலம் கோட்டத்தின் நிர்வாக பொறுப்புகளை கவனித்த அதிகாரிகள், வருவாயை பெருக்குவதற்கு பதில், தங்களின் சுயலாபத்துக்காக, பல வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர்.
லாபம் இல்லாத வழித்தடங்களில், பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, போக்குவரத்துக் கழகத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டது.அது மட்டுமின்றி, தரமில்லாத டயர், உதிரி பாகங்களை கொள்முதல் செய்து வழங்கியதும், இழப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் கோட்டம் பெற்றுள்ள அடமானக் கடனை செலுத்த, தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கி, சொத்துக்களை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Loganathan - Coimbatore,இந்தியா
14-நவ-201718:45:42 IST Report Abuse

G.Loganathanபோக்குவரத்து துறை தொழிற்சங்கங்கங்கள் வெட்கி தலை குனிய வேண்டும். இந்த கோளாறுகள் இப்போது தான் உங்களுக்கு தெறிந்ததா? ஆண்டு தோறும் (போனஸ்) ஊக்கத்தொகைக்கு போராட்டம் நடத்தும் போது தெரியவில்லையோ?. உங்கள் வாகனங்கள் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வரும் உங்கள் பிள்ளைகள் இரவில் சுவாசிக்க திணறும்போது ஏன் என்பது தெரியவில்லையோ?. இனிமேல் கப்பல் ஓடாது நம் உள்ளாடை கூட இல்லாமல் போகலாம் என்ற நிலை வந்துவிட்டது. சரி எரிகின்ற வீட்டில் பிடுங்குவது லாபம் என்று கத்துகிறீர்கள். நீங்கள் விதைத்ததை நீங்கள் அறுவடை செய்துதான் ஆக வேண்டும்.

Rate this:
Prem - chennai,இந்தியா
14-நவ-201717:03:51 IST Report Abuse

Premithu ellam DMK period la senja sathi velaigal than innum andha kadan appidiyae iruku so ippo seilpadura arasu atha sari senjidum

Rate this:
shekaran - thiruchi,இந்தியா
14-நவ-201716:56:30 IST Report Abuse

shekaranarasu ithu kuriththu nadavadikkaiyai eduththukonduthaan ullathu....

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
14-நவ-201716:52:54 IST Report Abuse

Sundaramthavarana seithiya parapi aras kurai solathinga

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
14-நவ-201716:38:54 IST Report Abuse

g.s,rajanThis amount is very very Meagre, can be easily retrieved from the Tamil Nadu Transport Ministers of all regimes. g.s.rajan, Chennai.

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
14-நவ-201716:12:23 IST Report Abuse

Jeeva tamilagathil enna nadakindrathu ena puriya villai ?

Rate this:
bairava - madurai,இந்தியா
14-நவ-201715:00:42 IST Report Abuse

bairava தமிழ் நாடு போக்குவரத்து கழகத்தை மட்டுமா அடமானம் வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டையே அடமானம் வைத்து தானே இங்கே ஆட்சி நடக்கிறது இதைவிட கேடுகெட்ட அரசாங்கம் வேறு எங்கும் இல்லையே அதனால் தானே இந்தியா கடல் எல்லையில்கூட தமிழன் மீன்பிடிக்கமுடியவில்லை ஒரே நாடு ஜனநாயகம் இறையாண்மை என்று சொல்லி தமிழனை அடிமைப்படுத்தி அழிக்கத்துடிக்கும் துரோகிகளே நல்லா இருக்க மாட்டீர்கள்

Rate this:
ARUN- BLR - Bangalroe,இந்தியா
14-நவ-201711:30:29 IST Report Abuse

ARUN- BLRஇதே சேலம் கோட்டத்தில் தான் தனியார் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள், குறிப்பாக ஓசூர் - சென்னை, சேலம் - பெங்களூரு, பெங்களூரு- சென்னை, வழி தடங்களில் கட்டண கொள்ளைக்கு அளவே இல்லை ஆனால் அரசு பேருந்துகள் முறையற்ற நிர்வாகத்தால் நஷ்டமடைகின்றன. அரசுக்கு மாவட்டம் தோறும் விழா எடுக்க தான் நேரமும் பணமும் இருக்கு இதெற்கெல்லாம் இல்லை.

Rate this:
Senthilkumar Krishnan - hosur,இந்தியா
14-நவ-201711:29:43 IST Report Abuse

Senthilkumar Krishnanசேலம் கோட்டம் தலைமை அதிகாரிகளை அவர்கள் ஊழல் செய்தது உறுதி செய்தால் பணி நீக்கம் செய்யவேண்டும்...

Rate this:
christ - chennai,இந்தியா
14-நவ-201711:04:13 IST Report Abuse

christஇப்பவே தனியார் ஆம்னி பஸ்கள் மெல்ல மெல்ல அரசு விரைவு பஸ்களை முழிங்கி கொண்டு வருகிறது .இதற்க்கு காரணம் பல அரசியல்வாதிகள் பினாமி பெயரில் ஆம்னி பஸ்களை இயக்குவதால் அரசு பஸ்கள் கவனிப்பாரின்றி ஊசல் ஆடிக்கொண்டு இருக்கிறது

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement