அயோத்தி விவகாரத்தில் சமரசம்: அமைப்புகள் அறிவிப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அயோத்தி விவகாரத்தில் சமரசம்: அமைப்புகள் அறிவிப்பு

அலகாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்படும் என்றும், ஹிந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அயோத்தி, Ayodhya, உத்தரப் பிரதேசம்,Uttar Pradesh, உச்ச நீதிமன்றம், Supreme Court, பாபர் மசூதி, Babur Masjid,ஹிந்துக் கடவுள் ராமர் , Hindu God Rama,அலகாபாத் உயர் நீதிமன்றம், Allahabad High Court, நிர்மோஹி அகாரா,Nirmoha Agara, ராம் லாலா ,Ram Lala, சன்னி முஸ்லிம் வாரியம் , Sunni Muslim Board, வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி, Waqf Board Chairman Wasim Rizvi,அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி,Bharatiya Akada Parishad leader Narendra Giri,  ராம் ஜென்மபூமி அறக்கட்டளை தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் ,Chairman of Ram Janmabhoomi Trust Mahant Niridhya Gopal Das, ஹிந்து அமைப்புகள், Hindu organizations,முஸ்லிம் அமைப்புகள், Muslim organizations,முதல்வர் யோகி ஆதித்யநாத் , Chief Minister Yogi Adityanath,பா.ஜ, BJP,


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. இங்குள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி, 1992, டிச., 6ல் இடிக்கப்பட்டது. இந்த இடம், ஹிந்துக் கடவுள் ராமர் பிறந்த இடம் என ஹிந்துக்களும், தங்களுக்கே சொந்தம் என, முஸ்லிம்களும் கூறி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. 'இந்த நிலத்தை நிர்மோஹி அகாரா, ராம் லாலா மற்றும் சன்னி முஸ்லிம் வாரியம் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, தீர்ப்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இறுதி விசாரணை, டிச., 5ல் துவங்கும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

சமரச பேச்சு நடந்தது.


'மதம் தொடர்பானதாகவும், நம்பிக்கை தொடர்பானதாகவும் இருப்பதால்,இதில் பேச்சு நடத்தி சமரசம் காண முயற்சிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.இந்த நிலையில், அகில பாரதிய அகாடா பரிஷத் மற்றும் உத்தர பிரதேச வக்பு வாரியம் இடையே, இந்த நிலம் தொடர்பாக சமரச பேச்சு நடந்தது. அதில் சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக,
அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நல்ல முடிவுகள்


இது குறித்து, உ.பி., வக்பு வாரியத் தலைவர், வாசிம் ரிஸ்வி கூறியதாவது: சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். சன்னி முஸ்லிம் வாரியத்தின் அங்கீகாரம், பல நீதிமன்றங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம், ஷியா முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அதனடிப்படையில் அகிலபாரதிய அகாடா பரிஷத் அமைப்புடன் பேச்சு நடத்தினோம். அதில், பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அயோத்தி மற்றும் பைசாபாதில் மசூதி அமைக்கப்படாது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள வேறொரு பகுதியில் மசூதி கட்டப்படும்.

Advertisement

பேச்சின் முடிவுகள் குறித்து ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு, அனைவரும் கையெழுத்திட்டு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம். இந்தப் பிரச்னையில், யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக, அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவர், நரேந்திர கிரி கூறியதாவது: இந்தப் பிரச்னை குறித்து, வழக்கின் முக்கிய நபரான, தர்ம தாஸ் உள்ளிட்டோரிடம் பேசியுள்ளோம். அயோத்தி வழக்கு, விசாரணைக்கு வரும்போது, எங்களுடைய ஒப்பந்தத்தை அறிக்கையாக தாக்கல் செய்வோம்.
ஆலோசனை கூட்டத்தில், ராம் ஜென்மபூமி அறக்கட்டளை தலைவர், மகந்த் நிருத்ய கோபால் தாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ராமர் கோவிலுக்கு ஆதரவான அனைவரும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஷியா வக்பு வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (34)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
D.RAMIAH - RAIPUR,இந்தியா
14-நவ-201719:48:23 IST Report Abuse

D.RAMIAHராமர் கோயில் கட்டுங்கள் மனித நேயத்துடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க பாரதம்

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-நவ-201715:52:03 IST Report Abuse

Karuthukirukkanநல்ல முடிவு .. மக்கள் என்ன தேவையோ அதை கலந்து பேசி முடிவு செய்து கொள்வார்கள் ..

Rate this:
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
14-நவ-201715:33:09 IST Report Abuse

OUTSPOKENஇங்கு சிலரால் பதிவிட்ட சில கருத்துக்களை படிக்கும்போது மனித நேயத்தை விட மதத்தின் பெயரில் கண் மூடி தனமாக மிருகங்களை விட கேவலமாக மனிதன் இருப்பது தெரிகிறது. நாம் எல்லோரும் சீக்கிரம் அழியும் காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறன். பூகம்பம், சுனாமி , டெங்கு போன்ற கடுமையா நோயால் நாம் எல்லோரும் சீக்கிரம்அழிய பிரார்த்திக்கிறேன்

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X