சிறையில் இட்லி, தோசை, பூரி, வடை விற்கும் கைதிகள்:'பிரிசன் பஜார்' மூலம் ரூ.37 கோடிக்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறையில் இட்லி, தோசை, பூரி, வடை விற்கும் கைதிகள்:'பிரிசன் பஜார்' மூலம் ரூ.37 கோடிக்கு விற்பனை

Updated : நவ 14, 2017 | Added : நவ 13, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழக சிறை, Tamil Nadu prison,இட்லி, Idly, கைதிகள், Prisoners, பிரிசன் பஜார்,Prison Bazaar, டி.ஐ.ஜி கனகராஜ்,DIG Kanagaraj, வேலைவாய்ப்பு ,Employment,கண்காணிப்பாளர் ஊர்மிளா, Inspector Urmila, சிவகங்கை திறந்தவெளி சிறை,Sivagangai Open Jail, தோசை, Dosa,பூரி, Puri, வடை,Vadai,

மதுரை;'தமிழக சிறைகளில் செயல்படும் 'பிரிசன் பஜார்' மூலம் கடந்தாண்டு 37 கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்கப்பட்டுள்ளன,'' என, மதுரை சிறை வளாகத்தில் கைதிகளால் செயல்படும் உணவகத்தை திறந்துவைத்து டி.ஐ.ஜி., கனகராஜ் தெரிவித்தார்.
கைதிகள் தயாரிக்கும் இனிப்புகள், காரவகைகள் இங்கு விற்கப்படுகின்றன. மேலும் சிறையில் கைதிகள் தயாரிக்கும் அலுவலக கவர்கள், பேன்டேஜ்கள், மழை கோட்டுகள் விற்கப்படுகின்றன.இதன் மூலம் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன், அவர்கள் விடுதலையாகி சென்று சுயதொழில் செய்யவும் வழி வகை செய்யப்படுகிறது.
நேற்றைய திறப்பு விழாவில் கண்காணிப்பாளர் ஊர்மிளா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.டி.ஐ.ஜி., கூறியதாவது: இந்த உணவகம் காலை 7:30 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். சமையல் பயிற்சி பெற்ற பத்து கைதிகள் உணவு தயாரிப்பர். ஐந்து பேர் சப்ளையர். பொங்கல், இட்லி, தோசை, பூரி, வடை மற்றும் மதிய உணவு குறைந்த விலையில் வழங்கப்படும்.
இச்சிறையில் 700 தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 600 பேர் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பதில் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதம் வரை வருமானமாக வழங்கப்படுகிறது.சிவகங்கை திறந்தவெளி சிறையில் தற்போது காய்கறிகள், கனிகள் விளைவிக்கப்படுகின்றன. அவையும் இங்கு விற்கப்படும். தண்ணீர் இல்லாததால் செயல்படாமல் இருந்த மீன்பண்ணை மீண்டும் விரைவில் செயல்படும். கடந்தாண்டு தமிழக சிறைகளில் செயல்படும் பிரிசன் பஜார் மூலம் 35 கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்கப்பட்டுள்ளன, என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
14-நவ-201721:20:32 IST Report Abuse
Gnanasekaran Vedachalam மனித வளம் என்பது மிக பெரிய பொக்கிஷம் அந்த பொக்கிஷமானமனித ஆற்றல் சிறை கைதியாக இருந்தாலும் அவனை பயன்படுத்தி உற்பத்தியை செய்து உள்ளது வரவேற்க தக்க அம்சம் இதனால் நல்ல மனமாற்றம் ஏற்பட்டு தவறு செய்கின்ற குற்றவாளிகள் திருந்துவார்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் ஹிந்து - chennai,இந்தியா
14-நவ-201705:51:27 IST Report Abuse
தமிழ் ஹிந்து Good initiative
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை