நெடுஞ்சாலை மதுக்கடை: சுப்ரீம் கோர்ட் விளக்கம்| Dinamalar

நெடுஞ்சாலை மதுக்கடை: சுப்ரீம் கோர்ட் விளக்கம்

Updated : நவ 14, 2017 | Added : நவ 13, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நெடுஞ்சாலை,Highway, மதுக்கடை,Alcohol shop, சுப்ரீம் கோர்ட்,
Supreme Court,  வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, Advocate Mukul Rohatgi, நீதிபதி தீபக் மிஸ்ரா, Justice Deepak Mishra,  அரசு சாரா அமைப்பு, NGO, சென்னை உயர் நீதிமன்றம் , Chennai High Court,உச்ச நீதிமன்றம்,

புதுடில்லி: 'நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளுக்கான தடையில் இருந்து, நகர்ப்புறங்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, நாடு முழுவதற்கும் பொருந்தும்' என, உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.


தடை:

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இயக்குவதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், சண்டிகரைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு தொடர்ந்த வழக்கில், 'நகர்ப்புறங்களுக்கு இந்த தடை பொருந்தாது' என, உச்ச நீதிமன்றம், ஜூலை, 11ல் உத்தரவிட்டிருந்தது. அதன்பின், சென்னை உயர் நீதிமன்றம் சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டார்.


பொருந்தாது:


இதற்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, நேற்று அளித்த விளக்கம்: சண்டிகரைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு தொடர்ந்த வழக்கில், 2016 டிச., 15ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பகுதியை அவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினோம். கடந்தாண்டு அளித்த தீர்ப்பிலேயே, நகர்ப்புறங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்பது தெளிவாக உள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களுக்கு விலக்கு என்பது, நாடு முழுவதற்கும் பொருந்தும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
14-நவ-201710:39:23 IST Report Abuse
christ ஹெல்மட் போடாம விழுந்து சாகுற மக்களை பற்றி அக்கறை கொள்ளும் நீதிமன்றம் , சாராயம் குடித்தால் உடல் நலத்துக்கு தீங்கு என்று தெரிந்து இருந்தும் அவற்றை தடை செய்யாமல் விற்பனைக்கு அனுமதி கொடுத்து மக்களின் உயிர்களில் அக்கறை கொள்ளாமல் போனது ஏனோ ?
Rate this:
Share this comment
Cancel
Saravana Kumar - TIRUPUR,இந்தியா
14-நவ-201708:58:15 IST Report Abuse
Saravana Kumar மக்கள் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம்.......
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201708:35:16 IST Report Abuse
அப்பு அவிங்கள்ளாம் எங்கே போய் சரக்கடிப்பதாம்? தனக்குன்னு வரும்போது நல்ல தீர்ப்பா சொல்லுவாங்க.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201708:31:38 IST Report Abuse
Srinivasan Kannaiya நீதியும் மதுவுக்கு அடிமையாக விட்டது... காந்தி இருந்து இருந்தால் தற்கொலை செயது கொண்டு இருப்பார்..
Rate this:
Share this comment
Cancel
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
14-நவ-201706:10:22 IST Report Abuse
S ANBUSELVAN அட்டே அருமையான விளக்கம்... மதுவிலக்கை இப்படிப்பட்டவர்களிடம் தான் இந்தியா முழுவதும் கொண்டுவரச்சொல்ல வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
mvh v - Singapore,சிங்கப்பூர்
14-நவ-201706:07:45 IST Report Abuse
mvh v Most important, particularly for poor and village people. Whatever S Court says is correct only. S Court must be GOG
Rate this:
Share this comment
Cancel
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
14-நவ-201706:06:56 IST Report Abuse
S ANBUSELVAN நகர்ப்புற மக்கள் குடித்து சாகலாமா?
Rate this:
Share this comment
Cancel
Hari Sankar Sharma - Chennai,இந்தியா
14-நவ-201702:38:24 IST Report Abuse
Hari Sankar Sharma குடிமக்கள் எவ்வாறு கஷ்டப்பட்டார்கள் என்பது தெரிந்த நீதிமன்றம் தந்த விளக்கம் அருமை கடைகள் முளைக்கும்.... அலைச்சல் குறையும்.....நிம்மதியா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை