ரூ.1,500 கோடி சொத்து, கிலோ கணக்கில் தங்கம், வைரம் பறிமுதல்: 15 வங்கி, 'லாக்கர்களுக்கு, 'சீல்' Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.1,500 கோடி சொத்து-
கிலோ கணக்கில்தங்கம், வைரம் பறிமுதல்:
15 வங்கி, 'லாக்கர்களுக்கு, 'சீல்'

தமிழகத்தில், ஐந்து நாட்களாக, சசிகலா கும்பலைச் சுற்றி வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான, கணக்கில் வராத, சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளன. கிலோ கணக்கில், தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 வங்கி லாக்கர்,Bank Locker, சசிகலா கும்பல்,Sasikala gang, வருமான வரித்துறை, Income tax department, பணமதிப்பிழப்பு , demonetization,மிடாஸ் மதுபான ஆலை,Midas liquor mill,  சொத்து ஆவணங்கள், property documents,தங்கம், gold,வைரம்,diamonds,

இது தொடர்பாக, வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் நேற்று, கூறியதாவது:சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில், ஐந்து நாட்களாக நடந்த சோதனையில், சிக்கிய ஆவணங்களை கணக்கிடும் பணி நடந்து வருகிறது.

இதுவரை, 1,430 கோடி ரூபாய் அளவிற்கு, கணக்கில் வராதவருவாய் தொடர்பான ஆவணங்கள் சிக்கி உள்ளன.

50 வங்கி கணக்குகள்


இது தவிர, ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 10 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள், ஐந்து கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 'மிடாஸ்' மதுபான ஆலையில், 20 லட்சம் ரூபாய்க்கு மேல், தங்கம் வாங்கப்பட்டுள்ளது குறித்த ஆவணங்களும் சிக்கி உள்ளன. சந்தேகத்திற்கு இடமான, 15 வங்கிகளில் உள்ளலாக்கர்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, 50க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

ரூ. பல கோடி டிபாசிட்சோதனை நடந்த, சில அலுவலகங்களின் அறைகளில் உள்ள அலமாரிகளுக்கும், 'சீல்'

Advertisement

வைக்கப்பட்டு உள்ளது. மேலும், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான, பினாமி சொத்துப் பரிவர்த்தனைகளும் ஆராயப்பட்டு வருகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பல கோடி ரூபாய், டிபாசிட் செய்யப்பட்டதும் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-நவ-201720:11:18 IST Report Abuse

D.Ambujavalliவெறும் 5000 கோடிதானா? 90 % ஐ முன்னாலேயே காபந்து செய்துவிட்டார்கள் போலிருக்கிறது அப்பா விவேக் இந்த சின்ன வயதில் பத்துப் பதினைந்து வருஷத்தை 'உள்ளே' கழித்துவிட்டு இத்தனை பணம் , தங்கம் ,வைரத்தை எப்போது அனுபவிப்பாய் ?

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
14-நவ-201719:14:23 IST Report Abuse

mindum vasanthamThey are catching pulapoochi sasi, will they HaVe guts to raid Karuna family,I guess they will only form alliance with them,I will better stick with captain

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
14-நவ-201716:42:17 IST Report Abuse

g.s,rajan"Karuna kumbal "???. g.s.rajan, Chennai.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X