அமெரிக்காவில் ரூ.43,000 கோடி வாரி வழங்கும் இந்திய மாணவர்கள்| Dinamalar

அமெரிக்காவில் ரூ.43,000 கோடி வாரி வழங்கும் இந்திய மாணவர்கள்

Updated : நவ 14, 2017 | Added : நவ 14, 2017 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அமெரிக்கா, USA, இந்திய மாணவர்கள்,Indian Students, சர்வதேச கல்வி மையம், International Education Center, வெளிநாட்டு மாணவர்கள் ,Foreign Students,  அமெரிக்க மாணவர்கள், American Students, பிரிட்டன்,Britain,  இத்தாலி,  Italy, ஸ்பெயின், Spain,

வாஷிங்டன்: இந்திய மாணவர்கள் மூலம், அமெரிக்காவுக்கு, கடந்தாண்டில், 43 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச கல்வி மையம், 2016 -17 கல்வியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில், 10.8 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில், 3.50 லட்சம் பேருடன், சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்தாண்டில், சீன மாணவர்களின் எண்ணிக்கை, 6.8 சதவீதம் உயர்ந்துள்ளது.


வாரி வழங்கும் இந்திய மாணவர்கள்

இந்தியா 2வது இடம்:

அதிக மாணவர்கள் பட்டியலில், 1.86 லட்சம் பேருடன், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டை விட, 12.3 சதவீதம் கூடுதல் மாணவர்கள் வந்துள்ளனர். மொத்த வெளிநாட்டு மாணவர்களில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 17.3 சதவீதமாகும். கடந்த நிதியாண்டில், இந்திய மாணவர்கள் மூலம், 43 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்திய மாணவர்களில், 56.3 சதவீதம் பேர் பட்டப் படிப்பை படிப்பதற்காகவே அமெரிக்கா வருகின்றனர்.


குறைவு:


வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் அமெரிக்க மாணவர்கள், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை அதிகம் விரும்புகின்றனர். இந்தப் பட்டியலில், இந்தியா, 15வது இடத்தில் உள்ளது. கடந்த கல்வியாண்டில், இந்தியாவில் படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை, 4,438ல் இருந்து, 4,181ஆகக் குறைந்தது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANI DELHI - Delhi,இந்தியா
14-நவ-201712:10:25 IST Report Abuse
MANI DELHI இங்கு பலர் வாதங்களுக்காக இந்தியாவில் கல்வித்தரம் இல்லை அதனால் அங்கு படிக்க சென்றார்கள் என்று சொல்கிறார்கள். உண்மையான நோக்கம் என்ன? படிக்கப்போவது என்பது படித்துவிட்டு இந்தியாவில் வேலைபார்த்தோ அல்லது தொழில் தொடங்கவோ இல்லை. அங்கேயே டாலரில் சம்பாதிக்க வேண்டும் என்பது தான். அங்கு வேலைக்கு என்று செல்வது என்பது அவ்வளவு எளிதில் விசா கிடைக்காது. படிப்பதை ஒரு நுழைவு வாயிலாக தான் பார்க்கிறார்கள். ஏன் சுந்தர் பிச்சை மற்றும் நாதெள்ளா போன்றவர்கள் முதல் வகுப்பில் இருந்து அங்கு படித்தவர்களா. எத்தனை படித்த நமது ஆசிரியர்கள் அங்குள்ள பல்கலை கழகத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்தியாவில் படிக்காமல் அங்கு போய் படித்து வேலை செய்கிறார்களா. ஒரு வாட்சாப் உரையாடலை குறிப்பிட விரும்புகிறேன். மோடியும் ஒபாமாவும் பேசிக்கொள்கிறார்கள். ஒபாமாவிடம் மோடி கேட்கிறார் எப்படி உங்கள் நாடு எல்லாவிதத்திலும் முன்னேறுகிறது என்று. அதற்கு ஒபாமா சொன்ன பதில் நீங்கள் Reservation என்ற முறையில் நல்ல ஆட்களை புறக்கணித்தீர்கள். அந்த புறக்கணித்தவர்களை நான் என் நாட்டில் ஆதரித்தால் அவர்கள் எங்கள் நாட்டிற்கு வளர்ச்சி தந்தார்கள் என்று சொன்னார்கள். அங்கு ஜாதி மத பாகுபாடின்றி திறமைக்கு மட்டுமே முதலிடம் கொடுத்ததால் அவர்கள் முன்னேறி விட்டார்கள். இப்படி அங்கு சென்று அவர்களை வளர்த்தியவர்கள் இன்று நமக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் நிலையில் முதலிடம் பெற்றும் நம்மிடமிருந்தே முதலீடுகளையும் மறைமுகமாக பெற்று விட்டார்கள். பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் மீதில் பயன்கொள்ளுவார் என்ற பாரதியின் கனவை உடைத்து நாம் நமது என்று போய் நான் எனது என்று பிரித்து நம்மை தரம் தாழ்த்திக்கொண்டு மற்றவன் நம்மை சூறை ஆடுகிறான் என்றால் தவறு யாரிடம் என்பதை நாம் சிந்திக்காமல் இருப்பது தான் வேதனைக்குரியது.
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
14-நவ-201718:02:23 IST Report Abuse
jaganவாதம் இல்ல , நிஜம் தான்...நிச்சயம் தரம் இல்லை... இட ஒதுக்கீட்டில் வந்தது ...பூசி மொழுக வேண்டாம்.......
Rate this:
Share this comment
Cancel
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-நவ-201710:38:55 IST Report Abuse
P R Srinivasan அமெரிக்க கல்வியை, அதன் தரத்தை, உலகம் முழுவதும் அங்கீகரித்துள்ளது. என்றைக்கு நமது நாட்டு கல்வியை உலகம் அங்கீகரிக்கிறதோ அன்று அமெரிக்கா சென்று படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும். இந்தியாவில் ஐஐடி மற்றும் ஐஐஎம் இரு கல்வி நிலையங்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது இதை தாண்டி என்று மற்ற நிலையங்கள் அந்த நிலைக்கு வர முயற்சிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
smoorthy - bangalore,இந்தியா
14-நவ-201710:04:26 IST Report Abuse
smoorthy நமது இந்தியாவில் மேல் படிப்பு படிக்க தகுதி உள்ளவர்கள் இட ஒதுக்கீடு முறையால் இடம் கிடைப்பதில்லை/ஆகவே மேல் படிப்பு படிக்க வெளி நாட்டிற்கு சென்று விடுகிறார்கள் / வெளி நாட்டில் தகுதி இருந்தால் மட்டுமே இடம் கிடைக்கிறது. அதை நம் மாணவர்கள் பெற்று செல்கிறார்கள்/படித்து முடித்த உடன் வேலையும் (நல்ல சம்பளத்துடன்) கிடைக்கிறது. அமைதியான வாழ்க்கை வேறு. வேறு என்ன வேண்டும். ஆக நமது அரசாங்கம் மாணவ மாணவிகளின் மன நிலையை புரிந்து கொண்டு செயல் பட்டால் நமது திறமை வெளி நாட்டிற்கு செல்லாமல் தவிர்க்கலாம். நடக்குமா நடக்காதா என்பது பில்லியன் டாலர் கேள்வி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X