மழையை எதிர்கொள்ள தயாராகுங்க!: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழையை எதிர்கொள்ள தயாராகுங்க!: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

Added : நவ 14, 2017 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மழை,Rain, கலெக்டர் ,Collector, முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy,   வீடியோ கான்பரன்ஸ்,Video Conference, சென்னை தலைமைச் செயலகம், Chennai Secretariat,  வானிலை ஆய்வு மையம்,Meteorological Center, வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon, உணவு, Food,மருத்துவம் , Medicine,

சென்னை: ''மழையை எதிர்கொள்ள, அனைத்து துறை அதிகாரிகளும், தயார் நிலையில் இருக்க வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று, முதல்வர் பழனிசாமி, சென்னை, தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார்.


அப்போது, முதல்வர் பழனிசாமி கூறியதாவது: வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, வரும் வாரங்களில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அதை எதிர்கொள்ள, அனைத்து முன்னேற்பாடுகளையும் துரிதமாக செயல்படுத்த, அனைத்து துறை அதிகாரிகளும், தயார் நிலையில் இருக்க வேண்டும். வட கிழக்கு பருவ மழையால், கடலோர மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள, விவசாய நிலங்களில், மழை நீர் தேங்கியுள்ளது. அவற்றை வெளியேற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உணவு, மருத்துவம் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும்.மழையில் பலவீனமான, நீர் நிலைகளின் கரைகளைக் கண்டறிந்து, சேதம் ஏற்படாமலிருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, நீர் நிலைகளில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rama - johor,மலேஷியா
15-நவ-201712:41:34 IST Report Abuse
rama இவன் ஒரு எடுபிடி தமிழிசை தான் தமிழ் நாட்டு முதல்வர் அவரிடம் உதவி கேட்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-நவ-201713:20:44 IST Report Abuse
Pasupathi Subbian ஆட்சி செய்யும் இவர்கள். தங்களின் கடமைகளை சரிவர செய்யாமல். அதிகாரிகளை மட்டும் முடுக்கிவிட்டு என்ன பிரயோஜனம். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதுபோல உள்ளது. மழைக்காலத்திற்கு உண்டான முஸ்தீபுகளை செய்யாமல் , அயோகியார்களுக்கு கூழைக்கும்பிடு போட்டுகொண்டு இருந்தார்களே. போதிய திட்டம் தீட்டுதல் இல்லாமல் , பெய்த மழைநீரை சேமிக்காமல் , அதிக வெள்ளத்தால் தமிழக மக்கள்பாதிக்கப்படும் நிலை உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Ravikumar Stephen - chennai,இந்தியா
14-நவ-201712:21:51 IST Report Abuse
Ravikumar Stephen First of all let Ops - Eps family members be the volunteers and then they can call others.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X