2028-ல் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும்: ஆய்வில் தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2028-ல் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும்: ஆய்வில் தகவல்

Updated : நவ 14, 2017 | Added : நவ 14, 2017 | கருத்துகள் (72)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்தியா 2028 ,India 2028, பேங்க் ஆப் அமெரிக்கா, Bank of America, மெர்ரி லிஞ்ச், Merry Lynch,  ஜி.டி.பி.,GDP, ஜப்பான்,Japan,  பொருளாதார வளர்ச்சி, Economic growth,

மும்பை: 2028-ம் ஆண்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பேங்க் ஆப் அமெரிக்காவின் மெர்ரி லிஞ்ச் '' இந்தியா 2028'' என்ற தலைப்பில் இந்திய பொருளாதாரத்தை மதிப்பீடு செய்து ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா தனது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜி.டி.பி.,) 7 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2028-ம் ஆண்டில் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 10 சதவீதம் அதிகம். இதன் மூலம் 2017-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முதலீட்டு விகிதம் 32.4 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயரும். இவ்வாறு அந்த அறிக்கையி்ல் கூறப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Munnamalai - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-நவ-201708:08:02 IST Report Abuse
Munnamalai சசி, மு.க. மாயா.... போன்றோர் குடும்பத்தினர் சேர்த்த திருட்டுப் பணத்தையெல்லாம் மீட்டால் நிச்சயம் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Erode,இந்தியா
14-நவ-201716:08:19 IST Report Abuse
Tamilselvan All the best
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Erode,இந்தியா
14-நவ-201716:08:02 IST Report Abuse
Tamilselvan Jai modi .....
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Erode,இந்தியா
14-நவ-201716:06:58 IST Report Abuse
Tamilselvan ஜெய் மோடி சர்கார்
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-நவ-201715:23:49 IST Report Abuse
g.s,rajan அப்போ அந்த சமயத்தில் மக்கள் எல்லாரும் பசிச்சா பணத்தைத் தான் திண்ணுவாங்களா? தெரியல ஏன்னா விவசாயம்தான் அப்போ செத்துருமே திண்ண சோறு குடிக்கத் தண்ணி கிடைக்காது ஆமாம்
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
14-நவ-201716:34:20 IST Report Abuse
தாமரை ஒழுங்கான தேசிய எண்ணமுள்ள அரசைத் தேர்ந்தெடுத்து தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துங்கள் இங்கும் முன்னேற்றம் வரும்.இலவசத்துக்கு நாயாக அலைவதை விடுத்து சுயமான காசில் எதையும் வாங்க நினையுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
sasi kumar - Doha,கத்தார்
14-நவ-201713:41:31 IST Report Abuse
sasi kumar Will TN get toilet in all house by 2028? or ADMK and DMK wealth increase 35 times by 2028??????????
Rate this:
Share this comment
Cancel
Joseph Alphonse - Sathyamangalam,இந்தியா
14-நவ-201713:38:20 IST Report Abuse
Joseph Alphonse முன்னர் இருந்த 2020 வளர்ச்சி இப்போது 2028 ஆகி 8 வருடங்கள் பின் தங்கி விட்டோம்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-நவ-201714:30:46 IST Report Abuse
Agni Shivaஏலே யோசுப்பு..உலகத்தின் ஒளியின் புள்ளாண்டானே...உங்க கரையான் புத்து கான் கிராஸ் அறுபதோ எழுபதோ வருஷமா நாட்ட வித்து வியாவாராம் பன்னிக்கொண்டு யிருந்தான்பிலா..அதான்லா நாடு இந்த நாத்தம் நாறுது...யதை தூத்து மெழுகி எடுக்குணுமினா ஒரு மாமாங்கம் கூடா பத்தாதுப்பிலே..ஏனோ இந்த யாரூபித்த பிள்ளாயோ இந்த மோடி மவராசன் வந்ததுனால இந்த அளவுக்காகவாது யிருக்குப்பிலே..இவரு மட்டும் வராமலிருந்தாலே ..உன்னையும் என்னையும் இதுக்கு முன்னமே வித்து முழுகியிருப்பாலே...புரிஞ்சு பேசுப்பிலே......
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
14-நவ-201713:25:15 IST Report Abuse
baski முன்னேறுதல் நல்லதுதான்... ஆனா லாபம் யாருக்கு விவசாயிக்கா... கார்பரேட் முதலாளிக்கா...
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
14-நவ-201716:40:54 IST Report Abuse
தாமரை கார்போரேட்டுக் காரன் வானத்திலிருந்து குதித்து விடவில்லை. அவனும் உழைத்து முன்னேறி வந்தவன்தான்.. அவன்தான் பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பவன்.கார்போரேட்டுக் காரன் தொழில் பண்ணக் கூடாது என்றால் வேலை வாய்ப்புக்கு சிங்கியடிக்க வேண்டியதுதான்.கார்போரேட்டு என்றால் என்ன வென்றே தெரியாமல் சும்மாவாச்சுக்கும் பம்மாத்துக் காட்டுவதே சில பேருக்கு வேலையாகவும் பிழைப்பாகவும் போச்சு.அம்பானி,அதானி, எல் அன்ட் டி இன்னும் பல கார்பொரேட் நிறுவனங்களில் எத்தனை லட்சம் பேர் பணி செய்கிறார்கள் தெரியுமா? கார்போரேட்டைஎல்லாம் மூடி விட்டு அங்கு பணியில் இருப்பவர்களை வீதியில் தீக்கதிர் விற்க அனுப்பி விடலாமா?...
Rate this:
Share this comment
Cancel
Ramudu - Chennai,இந்தியா
14-நவ-201713:23:08 IST Report Abuse
Ramudu ஹர ஹர மோடி...ஜெய ஜெய மோடி...
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
14-நவ-201712:33:54 IST Report Abuse
Meenu ஒவ்வொரு அரசியல் வாதியும், ஆட்சிக்கு வந்தவுடன், ரொம்ப டெக்னிக்கல்லா ஊழல் செய்றாங்க, முன்பு இருந்த ஆட்சியை குறை சொல்லி, தான் நல்ல ஆட்சி தருவதாக மக்களிடம் புலி தோல் போர்த்திய பசு மாதிரி நடிக்கிறாங்க. எல்லா ஆட்சி செய்பவர்களும் முடிந்த வரை எதோ ஒரு வழியில் கோடி கோடியா கொள்ளை அடிக்கின்றனர் என்பது தான் உண்மை. இந்த லட்சணத்தில் பொருளாதாரத்தில் எப்படி மிகப்பெரிய நாடக வரும், ஆட்சியில் அமர்ந்த அரசியல் வாதிகள் தான் பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஆட்களாக வந்திருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை