தமிழகத்தில் இரண்டு நாள் மழை உண்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இரண்டு நாள் மழை உண்டு

Added : நவ 14, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கனமழை,Heavy rain, வடகிழக்கு மாவட்டங்கள், Northeast district ,வானிலை மையம், Meteorological Center, வடகிழக்கு பருவமழை ,northeast monsoon,  பாலச்சந்திரன்,Balachandran,  தமிழ்நாடு, Tamilnadu,

சென்னை: 'சென்னை உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுவையில், சில இடங்களிலும் கன மழை பெய்யும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், அக்., 27 முதல், வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் டெல்டா மாவட்டங்களில், அக்., 29 முதல், கன மழை கொட்டியது. நவ., 4க்கு பின், மழை குறைந்து, தென் மாவட்டங்களில் மிதமாக பெய்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல், மீண்டும், சென்னை உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களில் மழை துவங்கியது. இந்த முறை, கன மழையாக பெய்யாமல், விட்டு விட்டு மிதமாக பெய்து வருகிறது.

இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது: வங்க கடலின் தென் மேற்கு திசையில் நிலை கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து உள்ளது. இது, வடக்கு நோக்கி, அதாவது, ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிக்கு, இரண்டு நாட்களில் நகர்ந்து விடும்.

தற்போதைய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், கன மழை பெய்யலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு நோக்கி நகர்வதால், இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்து, பின்னர், படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
14-நவ-201710:09:30 IST Report Abuse
P. SIV GOWRI இந்த வருடம் இறைவன் அருளால் நல்ல மழை பொழிந்து உள்ளது. நாம் தான் அதை சேமிக்கவில்லை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201708:22:21 IST Report Abuse
Srinivasan Kannaiya மழை பேயவில்லை என்று சொல்லமுடியாது... நாம்தான் அவற்றை சேமிக்க மறந்து விட்டோம்... அதற்கான பொறுப்பை ஆண்டவர்கள் துறந்து விட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201706:45:07 IST Report Abuse
vijiyakamarah Ipediyeh solli solli oorai yemathunge. ..... Yennikethan da Malai Nikkum? ???Ataiyawathu sariya sollunge da paapom. .....?????
Rate this:
Share this comment
14-நவ-201708:10:23 IST Report Abuse
VittalanandWhy do you worry ? It is good that rains pour intermittently for crops and over coming drinking water shortage. Have umbrella or rain coat or jerkine....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X