‛படுதோல்வியை தவிர்க்கவே ஜி.எஸ்.டி., குறைப்பு': சிவசேனா| Dinamalar

‛படுதோல்வியை தவிர்க்கவே ஜி.எஸ்.டி., குறைப்பு': சிவசேனா

Added : நவ 14, 2017 | கருத்துகள் (113)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஜி.எஸ்.டி., GST,சிவசேனா, Shiv Sena,குஜராத் தேர்தல் ,Gujarat election,  ஜி.எஸ்.டி கவுன்சில்,GST council, யஷ்வந்த் சின்ஹா, Yashwant Sinha, மஹாராஷ்டிரா,Maharashtra, சாம்னா,Samna, அசாம், Assam,பா.ஜ, BJP,

மும்பை: குஜராத் தேர்தலில் படுதோல்வியை தவிர்க்கவே ஜி.எஸ்.டி., வரியை பா.ஜ., குறைத்துள்ளது என சிவசேனா விமர்சித்துள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்கள் மீதான வரி, 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கு பாராட்டுக்களுடன் விமர்சனங்களும் அதிகளவில் எழுந்தன. பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனாவும் மத்திய அரசை விமர்சித்து, அக்கட்சியின் நாளேடான ‛சாம்னா'வில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

தோல்வி பயத்தில் ஜி.எஸ்.டி., குறைப்பு: சேனா

அதில் தெரிவிக்கப்பட்டதாவது: அரசியல் ஆதாயம், சுய விளம்பரத்தை பெறுவதில் பா.ஜ., குறியாக உள்ளது. குஜராத் தேர்தலை மனதில் வைத்தே ஜி.எஸ்.டி., வரி குறைப்பை பா.ஜ., செய்துள்ளது. தேர்தலில் படுதோல்வியை தவிர்க்கவே பா.ஜ., இத்தகைய முடிவை எடுத்துள்ளது. ஜி.எஸ்.டி., வரியில் சமரசத்துக்கு இடமில்லை என தெரிவித்தவர்கள், தற்போது எதற்காக வளைந்து கொடுக்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (113)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
14-நவ-201717:32:01 IST Report Abuse
Pannadai Pandian GST யை பற்றி எதிர்த்து பேசுபவர்கள் இங்கே ஊழலை ஆதரிப்பவர்கள். வரி கட்டாமல் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் ? ஒவ்வொரு நாட்டிலும் 40 % வரை வரி இருக்கிறது. அதனை அரசு பொது நலத்துக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் முதியோர் நல்வாழ்வு, வேலை இல்லாதோருக்கு உதவித்தொகை என்று பயன் படுத்துகிறது. வரியை என்ன மோடி வீட்டுக்கு தூக்கிட்டு ஓடுறாரா ??? காங்கிரஸ் காலத்தில் வியாபாரிகளும், மக்களும் வரி கட்டாமல் ஏமாற்றினார்கள், லட்சம் கோடி கணக்கில் ஊழல் செய்தார்கள் அதெல்லாம் இனி நடக்காது. குஜராத்தில் மட்டுமல்லா, இனி வரும் காலங்களில் எல்லா தேர்தல்களிலும் பாஜக ஜெயிக்க போவது உண்மை. அடுத்தமாதம் ஹிமாச்சல் தேர்தல் முடிவு வந்துரும், அப்ப பாருங்க.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-நவ-201716:42:55 IST Report Abuse
Cheran Perumal இவரும் என்னென்னவோ சொல்லிப்பார்க்கிறார், பிஜேபி மதிக்கவே மாட்டேங்குது. இவரது ஒட்டு வங்கி பிஜேபிக்கு போய்விடுமோ என்ற பயத்தில் பேசுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-நவ-201716:37:06 IST Report Abuse
Endrum Indian GST என்பது பல சின்ன சின்ன பெயரில் இருந்த அதாவது மாநில / மத்திய விற்பனை வரி, Excise Duty, Cess, Educational Cess சில்லறையாக உள்ள எல்லாவற்றையும் இணைத்து ஒரே வரியாக நாடு முழுவதும் செய்தது. இதைக்கூட அறிந்து கொள்ளாத ஒருத்தன் தன்னை ஒரு கூட்டத்துக்கு தலைவன் என்று சொல்வது அசிங்கத்திலும் அசிங்கம் அதாவது இவனை ஒரு தலைவனாக அங்கீகரித்த மக்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X