நான் சிவ பக்தன்: ராகுல்| Dinamalar

நான் சிவ பக்தன்: ராகுல்

Added : நவ 14, 2017 | கருத்துகள் (152)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராகுல்,Rahul, சிவ பக்தன்,Shiva devotee, காங்கிரஸ், Congress,பா.ஜ.,BJP, அக்ஷர்தாம் கோயில், Akshardham Temple,குஜராத் சட்டசபை தேர்தல், Gujarat assembly election,

புதுடில்லி: ‛நான் சிவனின் பக்தன்' என, குஜராத்தில் அடிக்கடி கோயில்களுக்கு சென்று வருவது குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.


சாமி தரிசனம்

குஜராத் சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜ.,வும், பல வருடங்களுக்கு பின் ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிரமாக உள்ளன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் அடிக்கடி குஜராத் சென்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். குஜராத் செல்லும் அவர், அங்கு பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். கடந்த வாரம் காந்திநகரில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்றார். அதற்கு முன்னர் அவர், துரகதீஷ் கோயில், அம்பாஜி கோயில், கோடிலியா பகுதியில் உள்ள சாமுண்டா கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார். நேற்று அவர், பதன் பகுதியில் உள்ள மெக்மயா கோயில், வாரனாவில் உள்ள கோடியார் மா கோயில்களுக்கும் சென்றார். ராகுல் இந்துக்களின் ஓட்டுகளை கவரவே கோயில்களுக்கு செல்வதாக பா.ஜ., குற்றம்சாட்டியது.

ராகுல் சிவபக்தராம்


உண்மை

இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல், நான் கடவுள் சிவனின் பக்தன். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எனக்கான உண்மை என்னிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


கேள்வி

இது குறித்து மாநில பாஜ., பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ் கூறுகையில் கோயில்களுக்கு செல்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. அனைவரும் கோயில் செல்ல வேண்டும். நமது பாரம்பரியத்தை தொடர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், ராகுலிடம் நான் கேட்க வேண்டியது ஒன்று தான்? டில்லியில் தங்கியிருக்கும் அவர், அங்கு எத்தனை கோயில்களுக்கு சென்றார்.டில்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்றாரா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (152)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
15-நவ-201708:04:40 IST Report Abuse
தேச நேசன் சிவனின் பிரசாதம் சாம்பல்தான்
Rate this:
Share this comment
mangaibagan - bangalore,இந்தியா
20-நவ-201717:36:06 IST Report Abuse
mangaibaganஆம். அதற்குப்பெயர்தான் திருநீறு....
Rate this:
Share this comment
Cancel
செந்தில்,மதுரை நீதிமன்றத்தில் இந்து கடவுள்களெல்லாம் கற்பனை பாத்திரங்கள் என பிரமாணபத்திரம் தாக்கல் செய்துவிட்டு இப்போது அதே கற்பனைத் தெய்வங்கள் கோயிலில் வழிபாடு.
Rate this:
Share this comment
Cancel
subbu - QLD,ஆஸ்திரேலியா
14-நவ-201719:44:50 IST Report Abuse
subbu தேர்தலுக்கு நாடகம்
Rate this:
Share this comment
Cancel
nagaraj -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201719:40:31 IST Report Abuse
nagaraj As long as Rahul is there in politics, we will have lots of jokes. enjoy
Rate this:
Share this comment
Cancel
Saravanan - Chennai,இந்தியா
14-நவ-201719:35:00 IST Report Abuse
Saravanan இவனும் கொஞ்சம் கொஞ்சமாக இந்து மத வெறியனாகி கொண்டு வருகிறான். நெற்றியை பாருங்கள். பெரிய திலகம். இவரை சுற்றி இந்து சாமியார்கள். அடையாளம் கண்டு கொள்ள சரியான நேரம்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-நவ-201718:54:21 IST Report Abuse
Sanny இவரை கேலி செய்வது இருக்கட்டும், இலங்கையில் கதிர்காமம், நல்லூர், கீரிமலை, தெருக்கீதீஸ்வரம், போன்ற பல பிரசித்தி, தெய்வங்கள் வந்துபோனதாக புராணங்களில் சொல்லப்படும் புனித தலங்கள் இருக்கும்போது, இலங்கை கொடூர அரசியல் வாதிகள் (ராஜபக்சே உட்பட) இந்தியா வந்து திருப்பதியானை வணங்கியது எத்தனை பேருக்கு தெரியும், எல்லாம் ஒரு அரசியல் இலாபத்தை விட நம்பிக்கை, இப்பவாவது தனது தவறை உணர்ந்தார்.
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
14-நவ-201717:45:25 IST Report Abuse
mrsethuraman  சிவனை டெல்லியிலே கும்பிடலாமே ?
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
14-நவ-201717:30:37 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam இது பரவாயில்லை தமிழகத்தில் ஒரு ஹீரோ நான் நாத்திகனில்லை பகுத்தறிவு வாதி . நான் இந்து வல்ல இந்து விரோதியுமல்ல என்று குழப்பி கொண்டிருப்பதற்கு பரவாயில்லை
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
14-நவ-201717:27:07 IST Report Abuse
appaavi Looks like an election stunt .....
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
14-நவ-201717:04:27 IST Report Abuse
தாமரை இவர் இவரது தாயுடன் இத்தாலியில் ஞானஸ்நானம் பெறும்போது தான் ஒருவரைத் தவிர வேறு எந்த கடவுளையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறித்தானே பாதிரியாரிடம் ஆசி பெற்றார். இப்போது இப்படிச் சொல்வது எதற்காக?
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
20-நவ-201717:04:03 IST Report Abuse
madhavan rajanஅப்போது கூட அவர் சிவனை மனதில் வைத்துத்தான் அப்படி கூறினார். ஆனால் முஸ்லீம்களைக் கொன்று குவித்த குஜராத்தில் கூட அவர் சிவனைத்தான் பிரதான தெய்வமாக வழிபடுவார். அதுதான் மதச் சார்பின்மை. புரிந்துகொள்ளுங்கள் மக்களே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை