Set up urine banks, produce urea: Nitin Gadkari | ஒவ்வொரு தாலுகாவிலும் சிறுநீர் வங்கி: யூரியா தயாரிக்க அசத்தல் திட்டம்| Dinamalar

ஒவ்வொரு தாலுகாவிலும் சிறுநீர் வங்கி: யூரியா தயாரிக்க அசத்தல் திட்டம்

Updated : நவ 15, 2017 | Added : நவ 14, 2017 | கருத்துகள் (89)
Advertisement
 சிறுநீர் சேமிப்பு வங்கி,Urine Savings Bank, உரம்,Fertilizer, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி , Union Minister Nitin Gadkari, சுவிடன் விஞ்ஞானி,Swiss scientist,நைட்ரஜன்,Nitrogen, பாஸ்பரஸ் , Phosphorus,பொட்டாசியம், Potassium, இயற்கை உரம், Natural Fertilizer, விவசாயிகள்,  Farmers,

நாக்பூர்: ''நாட்டில் உள்ள அனைத்து தாலுகாவிலும், 'சிறுநீர் வங்கி'யை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. சிறுநீரிலிருந்து யூரியா தயாரிப்பதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியாவின் அளவை கணிசமாக குறைக்க முடியும்,'' என, மத்திய அமைச்சர், நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து, நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நம் நாட்டு விவசாயிகள், யூரியா உரத்துக்கு, வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. வெளிநாடுகளில்இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியாவை, நம் விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, யூரியா இறக்கு மதியை குறைக்க, புது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.இதன்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு தாலுகா விலும், சிறுநீர் வங்கியை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. மனித சிறுநீரில், அதிமான நைட்ரஜன் அடங்கியுள்ளது. ஏற்கனவே, நம்மிடம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற, வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றுடன், நைட்ரஜனை சேர்க்கும் போது, யூரியா தயாரிக்க முடியும்.
இந்த பணிகள், துவக்க கட்டத்தில் உள்ளன. இதற்கான ஆய்வகம், நாக்பூர் அருகே அமைக்கப் பட்டுள்ளது. சிறுநீரை சேமிப்பதற்காக, ஒவ்வொருதாலுகாவிலும், 'சிறுநீர் வங்கிகள்' அமைக்கப் படும்.விவசாயிகள், 10 லிட்டர் பிளாஸ்டிக் கேன்களில், சிறுநீரை எடுத்து வந்து, இந்த வங்கிகளில் கொடுக்க லாம். இதற்காக அவர்களுக்கு, ஒரு லிட்டருக்கு, ஒரு ரூபாய் கொடுக்கப்படும்.முதல்கட்டமாக, கிராமப்புறங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்; இது, பொருளாதார ரீதியாக சாத்தியமான திட்டமா என தெரியாது. இது ஒரு சோதனை முயற்சி தான். இதற்கான பணிகள், ஆரம்ப நிலையில் உள்ளன. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நிபுணர்களிடம், இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.என்னை பொறுத்தவரை, வீணாகும் பொருட் களை வைத்து, பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன். எனவே, வீணாகும் சிறுநீரை வைத்து, யூரியா தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appaavi - aandipatti,இந்தியா
14-நவ-201721:43:15 IST Report Abuse
appaavi இனி இவர்களுக்கு தெரியாமல் உச்சா விட்டால் GST தான்....
Rate this:
Share this comment
Cancel
கூமுட்டை - Panchgani,இந்தியா
14-நவ-201721:38:05 IST Report Abuse
கூமுட்டை  அறிவியல் நோக்கில் பார்த்தால் திரு கட்கரியின் திட்டம் சரியானதுதான். காரணம் மனித சிறுநீரில் ஏறக்குறைய 50 % யூரியா காணப்படுகிறது. மேலும் செயற்கைமுறையில் யூரியா தயாரிக்க நைட்ரஜன் மிகவும் தேவை. பயிர்களுக்கு நைட்ரஜன் மிக மிகத் தேவையானது. நைட்ரஜன் தேவையை பூர்த்திசெய்து கொள்ளவே பயிர்களுக்கு யூரியா போடப்படுகிறது. மிகவும் குளிச்சியானது. ஒரு சிறு துளி அதிகமானாலும் கூட பயிர் கருகிவிடும். ஆக அமைச்சரின் யோசனையில் சத்துள்ளது. அதிக செலவில்லாது.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
14-நவ-201721:16:50 IST Report Abuse
ரத்தினம் . பிஜேபி எதைச்சொன்னாலும் மொண்டி தனமாக எதிர்ப்பது பலருக்கு வழக்கமாகி விட்டது. . அமைச்சர் சொன்னது சாத்தியமே. ஊராட்சிகள், அலுவலர்கள், பொது மக்கள் எல்லோருக்கும் அக்கறை இருந்தால் அரசு திட்டங்கள் நன்றாகவே நடக்கும். ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-நவ-201721:13:21 IST Report Abuse
Visu Iyer இது போல விலங்கு களின் சிறுநீரை சேகரித்து குடிநீராக மாற்ற ஏதும் யோசனை இருக்குதா என்று அறிய அரசு செலவில் இவரை வெளி நாட்டுக்கு அனுப்புங்க..
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-நவ-201721:12:24 IST Report Abuse
Visu Iyer வெளி நாட்டை பார்த்து நாம் மாற வேண்டிய அவசியம் இல்லை.. கற்று கொடுப்பது தமிழ் இனம் .. யாரவாது கற்று கொடுக்க நினைத்தால் அது "அறிவீனம்"
Rate this:
Share this comment
Cancel
Natesan Murugan - Coimbatore,இந்தியா
14-நவ-201720:41:21 IST Report Abuse
Natesan Murugan மேலை நாடுகளில் சில... மனித கழிவுகள் சரியான முறையில் recycle செய்கிறது ..நமது நாட்டில் எங்கு மனித மலம் recycle செய்யப்பட்டு உரமாக தயார் செய்யப்படுகிறது ....இது லாபம் தராது என்று தெரிந்த நாம் ..கடலிலோ ...ஆற்றிலோ தான் கலக்க செய்கிறோம் ..இல்லை மண்ணில் மூடி வைக்கிறோம் ..ஊரார் தெரிந்து கொள்ள விளம்பரபடுத்தினால் சுயநலம் உண்டு ...ஆனால் தமிழ்நாட்டில் ..ஆட்சியில் அமர முடியாது ... நடக்காது ...மலம் அல்ல விளம்பரம் ...
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-நவ-201720:41:06 IST Report Abuse
முக்கண் மைந்தன் மூத்திர (துறை) / உச்சா மந்திரின்னு கட்கரிக்கி கூடுதலா இன்னொன்னு குடுத்துறலாம் அந்தெ சிகாமணி.....
Rate this:
Share this comment
14-நவ-201721:27:46 IST Report Abuse
AlaguDChinnaiyanதமிழகத்தில் முசிறியில் பயன்படுத்தப்படுகிறது...
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-நவ-201720:28:29 IST Report Abuse
ஜெயந்தன் நம்ம கிட்ட இருந்த பணத்தை பிடுங்கினானுங்க..... அப்புறம் gst என்ற பெயரில் கோவணத்தையும் உருவிட்டானுங்க..
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
14-நவ-201720:10:35 IST Report Abuse
sundaram சிறுநீர் என்பது பூச்சிக்கொல்லி வகையை சார்ந்தது. இது உரமாகாது என்பதை எந்த பக்தரும் இதுவரை இந்த கடவுளிடம் உரைக்கவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Suresh - Nagercoil,இந்தியா
14-நவ-201720:08:33 IST Report Abuse
Suresh யூனியன் மினிஸ்டர் யூரின் மினிஸ்டர் ஆகிவிட்டார்.. இவர் கூறுவதை பார்த்தால் கையில் எப்பொழுதும் ஒரு பாட்டில் வைத்திருப்பார் போல் உள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை