சொத்து குவிப்பு வழக்கு நடக்கும் போதே வாங்கிய, ‛தைரியம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கு நடக்கும் போதே வாங்கிய, ‛தைரியம்'

Updated : நவ 15, 2017 | Added : நவ 14, 2017 | கருத்துகள் (53)
Advertisement
சொத்து குவிப்பு, கர்சன் எஸ்டேட், ஜெயலலிதா, சசிகலா, கும்பல், கோடநாடு

கோவை: கோடநாடு எஸ்டேட் உட்பட, பல்வேறு சொத்துக்கள் தொடர்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தபோதே, கர்சன் எஸ்டேட்டை ஜெயலலிதா மற்றும் சசி கும்பல் சேர்ந்து தைரியமாக வாங்கியுள்ளது.


திவாகரன் மூலம்இது தொடர்பாக, கோடநாடு வட்டாரங்கள் கூறியதாவது: ஜெயலலிதா, சசிகலாவின் சொத்து குவிப்பு வழக்கு, பெங்களுரூ நீதிமன்றத்தில் நடந்து வந்தபோது, சென்னையில் இருவருக்குள்ளும், 2011ல் திடீரென கருத்து வேறுபாடு எழுந்தது. அப்போது, சசிகலா வெளியேற்றப்பட்டார். ஒரு மாதம், அவர், ஜெயலலிதாவுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தார். அப்போது, கோடநாடு எஸ்டேட்டிற்குள்ளும் சேர்க்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், கர்சன் எஸ்டேட் ஏலம் தொடர்பான விளம்பரம் வந்தபோது, தாங்களும் கோத்தகிரி உட்பட நீலகிரி பகுதியில் எஸ்டேட் வாங்க வேண்டும் என, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதை, திவாகரன் மூலமாக வாங்க, அப்போதே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை தவிர, தாய்சோலையில் உள்ள, 1,200 ஏக்கர் பரப்பிலான ஒரு எஸ்டேட்; எடக்காடு பகுதியில் உள்ள, 750 ஏக்கர் பரப்பிலான ஒரு எஸ்டேட் ஆகியவற்றை வாங்கவும், சசிகலாவின் குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டனர்.


சுமூகம்ஆனால், கர்சன் எஸ்டேட் மட்டுமே வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மற்ற எஸ்டேட்களை, சில பிரச்னைகள் காரணமாக, அதன் நிர்வாகங்கள் விற்பனை செய்ய முன் வரவில்லை. இந்த சூழ்நிலையில், ஜெ., - சசிக்குள் திடீரென பிரச்னைகள் சுமுகமாக முடிந்தன. அதனால், கோடநாடு எஸ்டேட்டை போலவே, சசிகலா, இளவரசி ஆகியோர் சேர்ந்து, ஜெயலலிதாவையும் இணைத்து, கர்சன் எஸ்டேட்டை, 2012ல் வாங்கினர். அதில், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் இயக்குனர்களாக சேர்த்தனர். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

கர்நாடகாவில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையிலும், அதை பொருட்படுத்தாமல், மீண்டும் சொத்து சேர்ப்பதிலேயே, இவர்கள் குறியாக இருந்தது, கர்சன் எஸ்டேட்டை வாங்கியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliyan Pillai - Chennai,இந்தியா
20-நவ-201715:23:28 IST Report Abuse
Kaliyan Pillai தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் வருமான வரித்துறை எவ்வளவு அலட்சியமான நிலைமையில் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
19-நவ-201719:18:19 IST Report Abuse
Ray சொத்துக் குவிப்பல்ல சொத்துப் பெருக்கு விரிவாக்கப் பணிகள்
Rate this:
Share this comment
Cancel
a.s.jayachandran - chidambaram,இந்தியா
15-நவ-201720:31:51 IST Report Abuse
a.s.jayachandran எல்லாம் தமிழகத்தின் தலை விதி
Rate this:
Share this comment
Cancel
partha - chennai,இந்தியா
15-நவ-201714:55:12 IST Report Abuse
partha அதுபோன்ற ஏதேனும் ஒரு சட்டத்தை மோடிஜி கொண்டுவந்தால் தன்மான தமிழர்கள் பொங்கிவிட மாட்டார்களா???
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
15-நவ-201707:16:28 IST Report Abuse
venkatesh இவ்வளவு நடந்த பின்னும் ஊழலின் ஊற்று கண் அம்மாவின் படத்தை பையில் வைத்தும் அரசு விழாக்களிலும் வைக்கும் முட்டாள்களே மக்களுக்கு தெரிஞ்சு போச்சு உங்கள் லட்சணம் இதில் வேறு ஒரு ஊழல் ராணிக்கு மணி மண்டபம் கட்ட போறானுங்களாம் .வேண்டும் என்றால் ஊழல் பணத்தை வைத்து கட்டுங்கள் மக்கள் வரி பணத்தில் அல்ல வெட்கம்கெட்டவர்களே.
Rate this:
Share this comment
Cancel
jysen - Madurai,இந்தியா
15-நவ-201705:33:38 IST Report Abuse
jysen Jayalalithaa should be given the Bharat Ratna Award.
Rate this:
Share this comment
Cancel
Selva Periannan - Mandan,யூ.எஸ்.ஏ
15-நவ-201700:06:27 IST Report Abuse
Selva Periannan சொத்து குவிப்பு வழக்கில் மாட்டிக் கொண்ட ஜெயலலிதாவை காப்பாற்ற பாஜக செய்த தில்லாலங்கடி வேலையை, அப்போது ஏன் இந்த மோடி அரசு செய்யவில்லை? ஜெயலலிதாவை காப்பாற்ற துணைபோனதால், ஊழல் சாம்ராஜ்யத்தின் ராணியாக ஜெயலலிதாவும், அவருடைய தோழியும் சேர்ந்து கொண்டு இத்தனை சொத்துக்களை சுருட்ட பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும். ஜெயலலிதா சாகும் வரை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்.
Rate this:
Share this comment
Cancel
Dubuk U - Chennai,இந்தியா
14-நவ-201723:13:19 IST Report Abuse
Dubuk U "BENAMI TRANSACTIONS IN INDIA: GUJARAT ACCOUNTS FOR 26% OF CASES, BUT LESS THAN 1% OF RECOVERY " இதுவும் செய்தி தானே ஏன் இங்கு இல்லை?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-நவ-201722:51:12 IST Report Abuse
Pugazh V இந்த அட்டூழியங்கள் அனைத்துமே, அம்மாவின் ஆணைப்படி ஆசைப்படி தான் நடந்திருக்க வேண்டும். இது எதுவுமே தெரியாத அளவுக்கு அவங்க என்ன டுபுக்கா இல்ல லூசா இல்ல..சிலர் சொல்ற மாதிரி கூமுட்டையா ? ஜெ ஜெ தான் முதல் குற்றவாளி
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
14-நவ-201722:36:54 IST Report Abuse
X. Rosario Rajkumar உலகே மாயம் வாழ்வே மாயம் . நிலையேது நாம் காணும் சுகமே மாயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை