போயஸ் கார்டனில் வைர நகைகள்?: போக்குவரத்து ஊழியர் பாதுகாப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

போயஸ் கார்டனில் வைர நகைகள்?: போக்குவரத்து ஊழியர் பாதுகாப்பு

Updated : நவ 14, 2017 | Added : நவ 14, 2017 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
போயஸ் கார்டன், Poyas Gardens, வைர நகைகள், Diamond Jewelry,  போக்குவரத்து ஊழியர்கள்,Transport Staff,ஜெயலலிதா, Jayalalithaa,  ரகசிய அறை,Secret Room, தலைமைச் செயலகம், Secretariat, தினகரன் ,Dinakaran,  போலீஸ் பாதுகாப்பு ,Police Security,  மன்னார்குடி, Mannargudi,

சென்னை: போயஸ் தோட்டத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையை பாதுகாக்கும் பணியில், சென்னை, மாநகர பேருந்து நிறுவனத்தில் வேலை பார்க்கும் பணியாளர்கள் ஈடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:ஜெயலலிதா இறந்த பிறகு, போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. ஆனால், போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்த ஏராளமான பொருட்களும், ஆவணங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. போயஸ் தோட்டத்தில் பணியில் இருந்த சிலர் மட்டும், தொடர்ந்து அங்கு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதுகாப்புக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, தினகரன் தரப்பில் இருந்து, எங்களுக்கு தகவல் வந்து சேர்ந்தது. மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவர், சென்னை மாநகர பேருந்து தலைமை அலுவலகப் பணியில் இருக்கிறார். அவரது இல்லம் கோபாலபுரத்தில்தான் உள்ளது. தினகரனுக்கு உறவினரான அவர்தான், அண்ணா தொழிற்சங்கத்தில் இருக்கும் பலரிடமும் பேசி, போயஸ் தோட்ட பாதுகாப்புக்காக, தோட்டத்துக்கு வந்து செல்ல வேண்டும். தேவையானால், அங்கேயே தங்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லி அழைத்தார். அதன் அடிப்படையிலேயே, சென்னையின் அனைத்து மாநகரப் பேருந்தின் அனைத்து டெப்போக்களில் இருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆன் டூட்டி என்று குறிப்பிட்டு, போயஸ் தோட்டத்துக்கு வந்து செல்கின்றனர்.
போயஸ் தோட்டத்துக்குள் ரகசிய அறை ஒன்று இருக்கிறது. அதில், ஏராளமான ஆவணங்களும், நகைகளும், பணமும் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது; அதை பாதுகாக்கத்தான், போக்குவரத்துத் தொழிலாளர்களை இலவசமாக வரவழைத்து தங்க வைக்கப்பட்டிருப்பதாக வெளியில் தகவல் பரவி இருக்கிறது. போயஸ் தோட்டத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு அறையில்தான், ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனரே தவிர, போயஸ் தோட்டத்துக்குள் என்ன இருக்கிறது என்பதெல்லாம், எங்களில் யாருக்கும் தெரியாது.
இப்படித்தான், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து ஏகப்பட்ட ஆவணங்களும், வைர நகைகளும், விலையுயர்ந்த கடிகாரங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இப்படி கொள்ளையடிக்க வந்தவர்கள் காவலாளியை கொன்று விட்டதால், அதே போல ஒரு சூழல் இங்கும் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில், துவக்கத்தில் அங்கு ஆர்வமாக வந்து சென்ற சிலர், தற்போது, அங்கு வர மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. இருந்தாலும், மாற்று ஏற்பாட்டின் கீழ், புதியவர்கள் சிலரையும், அங்கு வரவழைத்துள்ளனர்.
ஆன் டூட்டியில் இருக்கும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை, எங்கு செல்கிறீர்கள் என்ற கேள்வியை, இதுவரை அதிகாரிகள் யாரும் கேட்டதில்லை. அதனால், போயஸ் தோட்டம் வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு எந்த தொந்தரவும் யாராலும் இல்லை.இப்படி ஆன் டூட்டியில் இருக்கும் போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் பலர், ஆளுங்கட்சித் தலைவர்கள் மற்றும் நெருக்கமாக இருக்கும் பலரது வீடுகளுக்கு சென்று, தலைவர்களுக்கு எடுபிடி வேலை செய்து வருவதும், காலம் காலமாக நடந்து தான் வருகிறது. போயஸ் தோட்ட பாதுகாப்பு பணி விவகாரத்தை பெரிதாக கிளப்பினால், இப்படி, அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் வீடுகளில் எடுபிடி பணியில் இருக்கும் பலரையும் நோக்கி கேள்வி எழுப்பப்படக்கூடும். அதனால், இதையெல்லாம், அதிகாரிகள் ஒரு நாளும் கண்டு கொள்ள மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


நிர்வாகம் பதில் என்ன:

இது குறித்து, மாநகர பேருந்து நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:ஆன் டூட்டி சலுகை என்பது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று, நேற்று வழங்கவில்லை. காலம் காலமாக இருப்பதுதான். அந்த அடிப்படையில்தான், ஆன் டூட்டியில் அவர்கள் சங்க வேலை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். சங்க வேலைகளுக்காக வழங்கப்படும் சலுகைகளை, தொழிலாளர்கள் தவறாக பயன்படுத்தினால், அதை சட்டப்பூர்வமாக எங்களால் தடுக்க முடியவில்லை.மற்றபடி, அவர்கள், போயஸ் தோட்டம் போகிறார்களா? தலைமைக் கழகம் போகிறார்களா? தலைமைச் செயலகம்தான் போகின்றார்களா என்பதையெல்லாம் நாங்கள் பார்க்க முடியாது. இது தொடர்பாக ஏதேனும் குற்றம் - குறை இருந்து, அது தொடர்பாக புகார்கள் வந்தால், அதை விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


அரசு என்ன செய்கிறது:

போக்குவரத்து ஊழியர்கள், போயஸ் கார்டன் பாதுகாப்புக்கு செல்வது குறித்து, தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதும் தெரியவில்லை. அரசுக்கு தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என்பதும் கேள்விக்குறி தான்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar - Trivandrum,இந்தியா
20-நவ-201717:11:06 IST Report Abuse
Rajasekar இவுங்க ஆண் டூட்டிக்கு போவாங்கலாம்..... பிறகு போக்குவரத்துக்கழகம் நஷ்டத்துல இயங்குதுன்னு டிக்கெட் விலையை கூட்டுவாங்கலாம்............ இந்தவேளை பார்த்ததுக்கு சம்பள உயர்வு வேண்டுமாம்...... இதற்க்கு மக்கள் ஆதரவு வேண்டுமாம்.... பலகாலமா இந்த ஆன் டூட்டி வேலை நடக்குதுன்னு விளக்கம் வேற..... என்ன கொடுமை சார்
Rate this:
Share this comment
Cancel
Selva Periannan - Mandan,யூ.எஸ்.ஏ
15-நவ-201700:31:24 IST Report Abuse
Selva Periannan உலகிலேயே இத்தனை கொள்ளை அடித்துக் கொண்டு முதல்வராக இருந்து கொண்டு சொத்து குவிப்பு வழக்கில் மாட்டிக் கொண்டு கொள்ளை அடித்துக் கொண்டிருந்த தலைவரை ஜெயலலிதாவைப் போல் யாரும் இருந்து மறந்ததில்லை எல்லாம் அவரை நம்பி ஓட்டுப் போட்ட தமிழ் முட்டாள் மக்களே காரணம். இவரின் ஆட்சியைத்தான் இப்போதுள்ள அமைச்சர்கள் செயல் படுத்தி வருகிறோம் என்று வெட்கமில்லாமல் சொல்லி வருகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
15-நவ-201700:24:48 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி பிரீ ஆ தங்கம் கோல்ட் கல்யணாம் பண்றதுக்கு தரமுன்னு சொன்னாங்களமே. அதுகு பதிலா அங்கிருகிற வைர நெக்லசை ஆளுக்கு ரெண்டு இந்த வருஷம் புல்லா தரலாமுல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X