Chinese appetite for Indian brands hits new high in annual shopping festival | சீனாவில் சக்கை போடு போடும் இந்திய உணவு பொருட்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீனாவில் சக்கை போடு போடும் இந்திய உணவு பொருட்கள்

Added : நவ 14, 2017 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சீனா, China,இந்திய உணவு பொருள், Indian food, கோழிக்கறி,chicken, அலிபாபா,  alibaba, ஆயுர்வேத பொருட்கள்,Ayurvedic products,  அரேபியர்கள், Arabs, ஐரோப்பியர்கள், Europeans,அமெரிக்கர்கள், Americans, உடனடி உணவுகள், instant foods, அமுல் எம்டிஎச் மசாதா,  Amul MTH Manjada, டாடா டீ,Tata Tea,  தஞ்சலி, Patanjali, இமாலயா, Himalaya, ஆன்லைன்,online,

பெய்ஜிங்: சீனா, ஆன்லைன் வர்த்தக இணையதளமான அலிபாபா நிறுவனம் சிறப்பு விற்பனையில், இந்திய உணவு பொருட்கள், ஆயுர்வேத பொருட்கள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையாகியுள்ளது.


இனிப்பு

சீனாவின் பிரபலமான வர்த்தக இணையதளமான அலிபாபா நிறுவனம் வருடந்தோறும், சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யும். இந்தவருடம் நடந்த விற்பனையில் பல பில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை நடந்துள்ளது. மொபைல் உள்ளிட்ட பல பொருட்கள் நடந்த இந்த விற்பனையில், இந்திய பல சரக்கு பொருள், உடனடி உணவுகள், ஆயுர்வேத பொருட்கள், அமுல் எம்டிஎச் மசாதா, டாடா டீ, ஹால்டிராம், தாபர், பதஞ்சலி, இமாலயா உள்ளிட்ட நிறுவன பொருட்கள் ஆகியவையும் அதிகளவு விற்பனையாகியுள்ளது. இந்திய உணவுகளைத் தொடர்ந்து, அலங்கார பொருட்களும் விற்றுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட இந்திய இனிப்பு வகைகளும் விற்பனையாகின. இவற்றை அரேபியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களும் வாங்கியுள்ளனர்.

சீனாவில் மணக்கும் இந்திய கோழிக்கறி


ஆர்வம்

இது குறித்து குவாங்சு நகரில் உள்ள இந்திய தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், சீனா முழுவதும் இந்திய உணவு மற்றும் பொருட்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. வர்த்தகர்கள் மூலம் நேரடியாகவும் ஆன்லைன் மூலம் நூற்றுக்கணக்கான பொருட்கள் விற்பனையாகி வருகிறது. சீனாவில் பெரும்பாலான நகர்களில் இந்திய பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. ஷாங்காய், குவாங்சு, யிவு மற்றும் பெய்ஜிங் நகரில் 2 அல்லது 3 கடைகள் உள்ளன.இந்த கடைகளை உள்ளூர் வியாபாரிகள் நடத்துகின்றனர். அவர்கள் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்கின்றனர். பொருட்களில் இருக்கும் விலையை காட்டிலும் 100 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை கூடுதல் விலைக்கு விற்கப்படும். ஏலக்காய், சீரகம் ஆகியவை இங்கு இருப்பதை விட, இந்தியாவில் தரமானதாக இருக்கும். இவை உள்ளூர் சந்தைகளில் விற்கப்படும். இதனை மக்கள் உணர துவங்கியுள்ளதால், அதனை வாங்க துவங்கியுள்ளனர். மஞ்சளும், சீனாவில் பிரபலமாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


கோழிக்கறி

சீனாவிற்கு அதிகளவு வெளிநாட்டினர் சுற்றுலா வருவதால், பல நாட்டு உணவுகளும் அந்நாட்டில் உள்ள உணவகங்களில் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான உணவகங்களில், கோழிக் குழம்பு உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அவை இந்திய மசாலா மற்றும் மஞ்சள் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. சீன பெண்களும் வீட்டில் கோழி குழம்பு செய்ய துவங்கியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201708:29:47 IST Report Abuse
Srinivasan Kannaiya நாம் எப்பவுமே உணவு பிரியர்கள்... அதனால் சமைத்த பொருள்கள் மற்றவர்கள் விரும்பும் வண்ணம் இருக்கிறது... நளபாகம் நமது இந்தியர்களுக்கு உரித்ததானது
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
14-நவ-201722:40:44 IST Report Abuse
X. Rosario Rajkumar சைனீஸ் நூடுல்ஸ் இந்தியாவில் பரவுவதைப்போல.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-நவ-201721:23:12 IST Report Abuse
Kasimani Baskaran எனது குழுவில் இருக்கும் ஒவ்வொரு சீனனும் இந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிடத்தான் செய்கிறார்கள்... ஷாங்காய் நகரில் உள்ள பெரும்பாலான இந்திய உணவு விடுதிகள் எங்களுக்கு பரிச்சயம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X