குஜராத் தேர்தல்: தீவிர பிரசாரம் செய்ய திட்டம்| Dinamalar

குஜராத் தேர்தல்: தீவிர பிரசாரம் செய்ய திட்டம்

Added : நவ 14, 2017 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குஜராத் சட்டசபை தேர்தல் , Gujarat Assembly election, காங்கிரஸ் ,Congress, ராகுல் , Rahul,  பா.ஜ.,BJP, பிரதமர் மோடி,Prime Minister Modi, அமித்ஷா, Amit Shah, பிரகாஷ் ஜவடேகர், Prakash Javadekar,நிர்மலா சீதாராமன், Nirmala Seetharaman, ஸ்மிருதிஇரானி, Smriti Irani,நவ்சர்ஜன் யாத்ததிரா, Navsarjan Yathathira,

காந்திநகர்: குஜராத் மாநிலசட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆளும் பா.ஜ.,காங்., உட்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் பா.ஜ., காங்., இடையே தான் மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது. மாநிலத்தில் தற்போது எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக காங்., துணை தலைவர் மாநிலத்தில் முகாமிட்டு நவ்சர்ஜன் யாத்ததிரா என்ற பெயரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதே நேரத்தில் ஆளும் பா.ஜ.,வும் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக வரும் 20-ம் தேதி முதல் பிரதமர் மோடி மாநிலத்தில் முகாமிட்டு ஒவ்வொரு மாவட்டதிற்கும் சென்று பிரசாரம் செய்ய உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேச உள்ளார்.
பா.ஜ.,விற்கு ஆதரவாக தேசிய தலைவர் அமித்ஷா , மத்திய அமைச்சர்கள் அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதிஇரானி, ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடஉள்ளனர்.மேலும் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
15-நவ-201713:15:44 IST Report Abuse
அறிவுடை நம்பி தேச நாசா..அந்த கடைசீ மூர்க்கன் நீதான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்...
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
15-நவ-201710:12:45 IST Report Abuse
அறிவுடை நம்பி பிரதமர் உட்பட மொத்த அமைச்சர் பட்டாளமும் அங்கே தான் இருக்கிறது..பப்பு என்று ராகுலை கிண்டல் செய்தவர்கள் இப்போது கிருஷ்ணருக்கு எதிராக கம்சன் படை திரட்டியதை போல் திரண்டு இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-நவ-201708:51:32 IST Report Abuse
ஜெயந்தன் Bjp மொத்த அமைச்சர்களையும் களம் இறக்கி இருக்கிறது..மோடி பம்பரமாக சுற்றி வருகிறார்..பப்பு என்று கிண்டல் அடித்த ராகுலுக்கு எதிராக பெரும் படையே அங்கு இருக்கிறது..பிஜேபி ஆடி போய் இருக்கிறது..பிஜேபி யின் ஆரம்பம் எங்கிருந்தோ அங்கிருந்துதான் முடிவும்...மோடி மேஜிக் ஷோ வடிவேல் மேஜிக் ஷோ மாதிரி ஆகி வெகு நாட்களாகி விட்டது..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201708:26:40 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒன்றுமே செய்யாமல் வெற்றிக்கனி எப்பிடி கிடைக்கும்... வேண்டும் என்றால் பெரிய சம்மட்டி அடி கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-நவ-201703:16:28 IST Report Abuse
Pugazh V பிற கட்சி கள் செய்தால் ஓட்டுபோறுக்கி அதையே பிஜேபி செய்தால் பிரச்சாரம்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-நவ-201702:54:29 IST Report Abuse
Pugazh V இப்போ குஜராத்தில் 30 மந்திரிகளும் ப்ரதமரும் செய்யறதுக்கு என்ன பேர் என்று விளக்குவார்களா?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-நவ-201702:52:16 IST Report Abuse
Pugazh V தேர்தல் கமிஷன் எப்பவோ பிஜேபி ஆபீஸ் ஆயிடுச்சு அப்புறம் என்ன புண்ணாக்கு தேர்தல்.
Rate this:
Share this comment
Cancel
Selva Periannan - Mandan,யூ.எஸ்.ஏ
15-நவ-201700:10:52 IST Report Abuse
Selva Periannan பாஜக படு தோல்வி என்பதை தெரிந்து கொண்டு, குஜராத் தேர்தல் தேதியை தாமதமாக அறிவித்தார்கள்? ஒரே மாதத்தில் மூன்று முறை மோடி ஜி பிரச்சாரத்துக்கு சென்றுள்ளார். ஜி எஸ் டி வரியை குறைத்துள்ளார்கள்? இதே போதும், தோல்வியில் இருந்து வெற்றி பெற போட்ட திருட்டு திட்டம் என்று.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-நவ-201722:43:31 IST Report Abuse
Pugazh V இந்த தோசநாசனும் அகினி சவாவும் யாரை மூர்க்கன் என்று எழுதி வருகிறார்கள்? அமித் ஷா கும்பலையா அல்லது ஜெயிட்லி கும்பலையா அல்லது யோகி கும்பலையா ??
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-நவ-201722:11:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மத்திய அமைச்சர்கள் அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதிஇரானி, ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடஉள்ளனர். - அப்போ ராணுவத்துறையை விட ஓட்டு கேக்குறது முக்கியமா? துறையை ஜெட்டிலீ கவனிச்சிக்குறாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை