இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு

Added : நவ 14, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 இந்தியர்கள்,Indians, விசா,  Visa, ஜப்பான்,Japan, சுற்றுலா பயணிகள்,  Tourists, இந்திய வணிகர்கள், Indian traders, ஜப்பான் தூதரகம்,  Japan Embassy,

புதுடில்லி: ஜப்பான் நாட்டிற்கு செல்லும் இந்திய வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக விசா விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இருநாட்டு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விசா நடைமுறைகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதி முறை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி கடந்த ஒரு ஆண்டில் அதிகபட்சமாக இரண்டுமுறை ஜப்பான் சென்றவர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க மற்றும் 90 நாட்கள் ஜப்பானில் தங்கி கொள்ளும் வகையிலான புதிய விசா எடுத்து கொள்ளலாம்.இந்த புதிய விதிகள் சுற்றுலா பயணிகள் ,வணிகர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201708:25:19 IST Report Abuse
Srinivasan Kannaiya திரை கடலோடி திரவியம் தேட வசதி...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-நவ-201721:10:36 IST Report Abuse
Kasimani Baskaran இப்பொழுது கூட டூரிஸ்ட் விசா $9 மட்டுமே... வேறு நாடுகள் - உதாரணத்துக்கு ஆஸ்திரேலியாவுக்கு $200 க்கு மேல்... சிங்கப்பூர் குடிமக்களுக்கு நிறைய நாடுகளில் விசாவே தேவை இல்லை...
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
14-நவ-201720:45:56 IST Report Abuse
yaaro நல்லது..நம் நாட்டின் மதிப்பு உயர உயர.. மத்த நாடுகள் நம்மை எதோ தீண்டத்தகாதவர்கள் போல நடத்துவது குறையும் .. முன்னேறிய நாடுகள் "visa on arrival" வசதி கொண்டவர்கள் ..நமக்குத்தான் பல மாதங்கள் ஆகுது விசா வாங்க
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-நவ-201706:01:08 IST Report Abuse
Sanny இருப்பவன் சரியாக இருந்தால் சிரைப்பவன் சரியாக செய்வான், என்பதுபோல அவரவர் எப்படி நடக்கிறார்களோ? அதுக்கேற்ற மாதிரிதான் அவர்களும் நடப்பார்கள். ஜப்பான்போனால் அங்கு பல நல்லபழக்கங்களை பழகலாம், முக்கியமாக சில ரயில்களில் பயணம் செய்யும்போது கைத்தொலைபேசியை யாரவது உபயோகப்படுத்தினால் ரயிலை சாரதி நிறுத்திவிடுவார், ரயில் தாமதமானால் சாரதி வந்து ஒவொரு பயணியிடமும் மன்னிப்புக்கேட்பார் என்ற பண்பை கத்துக்கொள்ளலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X